டிரேடிங் ஆப் விளம்பரத்தில் முழு நிர்வாணமாக தோன்றிய சிட்னி ஸ்வீனி...இன்னும் பார்க்கலயா
பிரபல ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி டிரேடிங் ஆப் விளம்பர படத்திற்காக நிர்வாணமாக நடித்துள்ளது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது

‘Euphoria’ வெப் சீரிஸ் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானவர் ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி. இந்தியாவிலும் இவருக்கு ஒரு பெரிய ரசிக பட்டாளமே இருந்து வருகிறது. சிட்னி ஸ்வீனி சமீபகாலத்தில் ஹாலிவுட்டில் மிகப்பிரலமான கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் என்றே சொல்லலாம். எந்த அளவிற்கு என்றால் இவர் குளிக்க பயண்படுத்திய நீரில் இருந்து சோப் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் தற்போது டிரேடிங் ஆப் ஒன்றில் விளமப்ர படத்தில் முழுக்க முழுக்க நிர்வாணமாக நடித்து ஷாக் கொடுத்துள்ளார் சிட்னி ஸ்வீனி
விளம்பரத்தில் நிர்வாணமாக சிட்னி ஸ்வீனி
Novig டிரேடிங் செயலியின் முதல் தேசிய அளவிலான விளம்பர படத்தில் சிட்னி ஸ்வீனி நடித்துள்ளார். இதில் அவர் பெரும்பாலான காட்சிகளில் ஆடையின்றி தோன்றுவதுடன், தனது உடலை மறைக்க பல்வேறு விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்துகிறார். கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, டென்னிஸ், பேஸ்பால் உள்ளிட்ட விளையாட்டுகளை மையப்படுத்தி விளம்பரத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த விளம்பரத்தின் நோக்கம் குறித்து சிட்னி ஸ்வீனி வெளியிட்ட அறிக்கையில், "இந்த பிரச்சாரம் ஒரு வேடிக்கையான யோசனையை தழுவுவதாக இருந்தது. கருத்து எளிமையானது - சத்தத்தை தாண்டி முழு கவனத்தையும் விளையாட்டின் மீது மட்டுமே செலுத்துவது" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த யோசனையை நம்பிக்கையுடனும் நகைச்சுவையுடனும் விளம்பரம் வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















