Rhea Chakraborty: சிறையில் கைதிகளுடன் ஆட்டம் ஆடிய சுஷாந்த் சிங் காதலி....ஜெயில் நினைவுகளை பகிர்ந்த சுதா பரத்வாஜ்
பீகார் போலீசில் சுஷாந்தின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் அவரது தோழி சக்ரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
மறைந்த பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, ரியா சக்ரவர்த்தி சிறை கைதிகளுடன் நடனமாடியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி தோனியின் பயோபிக் படத்தின் மூலம் அனைத்து மொழி ரசிகர்களிடத்திலும் பிரபலமான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையிலுள்ள பாந்த்ரா இல்லத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இவ்விவகாரம் பீகார் அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.
காரணம் பீகார் போலீசில் சுஷாந்தின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் அவரது காதலி சக்ரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இப்பிரச்சனை உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் வழக்கு சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. அதன்பின்னர் சுஷாந்த் சிங் தந்தை புகாரில், ரியா தனது மகனை மனரீதியாக துன்புறுத்தியதாகவும், அவருக்கு போதை மருந்து கொடுத்து பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டியதாகவும் புகாரளித்தார்.
View this post on Instagram
இதில் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ரியா 28 நாட்களும், அவரது சகோதரர் ஷோக் 3 மாதங்களும் பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர். இன்று வரை சுஷாந்த் ஏன் தற்கொலை செய்துக் கொண்டார் என்பது மர்மமாக இருக்கும் நிலையில், வழக்கறிஞரும் தொழிற்சங்கவாதியுமான சுதா பரத்வாஜ் என்பவர் நேர்காணல் ஒன்றில் ரியாவின் சிறை வாழ்க்கைப் பற்றி பேசியுள்ளார்.
அதில் சிறையில் இருந்தபோது, ரியாவைப் பார்த்ததாகவும், சுஷாந்த் மரணத்திற்கு ஊடகங்களில் சொல்லப்பட்ட விமர்சனங்களை அவர் விளையாட்டாக எடுத்துக்கொண்டார் எனவும் சுதா தெரிவித்துள்ளார். மேலும் பைகுல்லா சிறையில் உள்ள கைதிகளுடன் மிகவும் நட்பாக இருந்த ரியா, சிறப்பு அறையில் வைக்கப்பட்டார். அவர் கைதிகளுக்கான பிரதான அறையில் கொண்டு வரப்படாதது மகிழ்ச்சியாக உள்ளது.
ஜாமீனில் வெளிவந்த கடைசி நாளன்று ரியா தனது வங்கிக் கணக்கில் மீதம் இருந்த பணத்தைக் கொண்டு சிறைக்கைதிகளுக்கு இனிப்புகளை வாங்கி விநியோகித்ததாகவும், அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கைதிகளுடன் ரியா நடனமாடினார் என்றும் சுதா பரத்வாஜ் கூறியுள்ளார்.