மேலும் அறிய

சூர்யா நடிக்க இருந்த ‘கர்ணா’ படமா? ராகவா லாரன்ஸின் ‘மஹாவீர் கர்ணா’ அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் மகாவீர் கர்ணா திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் சூர்யா ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது

மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான கர்ணனை மையமாக வைத்து அடுத்தடுத்து வெளியாகும் பட அறிவிப்புகள் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக சூர்யா நடிக்க இருப்பதாக நீண்ட காலமாக பேசப்பட்ட ‘கர்ணா’ படமும், தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘மஹாவீர் கர்ணா’ படமும் ஒரே கதாபாத்திரத்தை மையமாக கொண்டிருப்பதால் இந்த குழப்பம் உருவாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் மகாவீர் கர்ணா

இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘மஹாவீர் கர்ணா’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் இப்படத்தில் புராண கதாபாத்திரமான கர்ணன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க இருக்கிறார்.  சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகிறது.  உலகம் முழுவதும் 2027-ம் ஆண்டு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சூர்யா கர்ணா என்கிற படத்தில் நடிக்க இருப்பதாக இருந்து பின் அந்த படம் கைவிடப்பட்ட நிலையில் ராகவா லாரன்ஸ் படத்தின் அறிவிப்பு சூர்யா ரசிகர்கள் இடையில் புது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சூர்யா நடிக்கவிருந்த படமா ?

இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் உருவாகவிருந்த ‘கர்ணா’ படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாக செய்திகள் வெளியாகின. 2023-ம் ஆண்டு முதலே இந்த படம் தொடர்பாக சூர்யாவின் பெயர் பேசப்பட்டது. 2024-ம் ஆண்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூர்யாவும், இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவுடன் சந்திப்பு நடைபெற்றதாகவும், படம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த படம் உருவாக அதிக காலமும் தயாரிப்பும் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் 2026 ஜனவரியில் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா, ‘கர்ணா’ படத்தின் திரைக்கதை முடிக்கப்பட்டுள்ளதாகவும், ஏ.ஆர். ரஹ்மான் சில பாடல்களை உருவாக்கியுள்ளதாகவும் கூறியிருந்தார். அதே நேரத்தில் அந்த படம் தற்போது இடைநிறுத்தத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. சூர்யாவின் தற்போதைய பங்கேற்பு குறித்தும் உறுதியான புதிய அறிவிப்பு வெளியாகவில்லை.

இதனால் சூர்யா நடிக்க இருந்ததாக பேசப்பட்ட ‘கர்ணா’ படமும், ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘மஹாவீர் கர்ணா’ படமும் ஒன்றா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் இரண்டும் வெவ்வேறு இயக்குநர்களின் தனித்தனி படங்கள் என்பதே தற்போதைய தகவல்களின் அடிப்படையில் தெளிவாகிறது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 'அறிவு' திரைப்படம்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 'அறிவு' திரைப்படம்
கூகுள் குட்டப்பா இயக்குநரின் அடுத்த படம் பத்து நாள் ராஜா! விரைவில் திரையரங்கில்
கூகுள் குட்டப்பா இயக்குநரின் அடுத்த படம் பத்து நாள் ராஜா! விரைவில் திரையரங்கில்
பிஷ்னோய் கும்பல் அச்சுறுத்தல்.. இரண்டு பாலிவுட் நடிகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!
பிஷ்னோய் கும்பல் அச்சுறுத்தல்.. இரண்டு பாலிவுட் நடிகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
CTR Nirmal Kumar:
CTR Nirmal Kumar: "உரிமையைப் பெற்றுத்தருவோம்.." மேகமலை, வருசநாடு மக்களை நேரில் சந்தித்த அமைச்சர் CTR நிர்மல்குமார்
CM Vijay: காத்திருக்கும் 5 மாநில தேர்தல்; விஜய்யை களத்திற்கு கூப்பிடும் காங்கிரஸ்? தளபதியின் முடிவு என்ன?
CM Vijay: காத்திருக்கும் 5 மாநில தேர்தல்; விஜய்யை களத்திற்கு கூப்பிடும் காங்கிரஸ்? தளபதியின் முடிவு என்ன?
Kanda Sashti: கந்த சஷ்டி விரதம் இருந்தவர்கள் கவனத்திற்கு! சூரசம்ஹாரத்திற்குப் பிறகு செய்ய வேண்டியவை என்ன?
கந்த சஷ்டி விரதம் இருந்தவர்கள் கவனத்திற்கு! சூரசம்ஹாரத்திற்குப் பிறகு செய்ய வேண்டியவை என்ன?
தனிஷ்க் கொள்ளை: 4வது நாளாக தேடுதல்; முக்கிய குற்றவாளி நிஷாந்தை நெருங்கியது காவல்துறை!
தனிஷ்க் கொள்ளை: 4வது நாளாக தேடுதல்; முக்கிய குற்றவாளி நிஷாந்தை நெருங்கியது காவல்துறை!
Embed widget