மேலும் அறிய

Global Community Oscars | இதுவும் ஆஸ்கர்தான்.. ஆனா அது இல்ல.! சூர்யா - ஜோதிகா, உதயநிதிக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு!

11ஆவது உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதை சூர்யா, ஜோதிகா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பெறுகின்றனர்.

மனித சமூகங்களை வலுப்படுத்துவதில் உரிய பங்களிப்புகளை கொடுத்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சர்வதேச மற்றும் சமூக கதாநாயகர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களுக்கு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது கடந்த பத்து வருடங்களாக வழங்கப்படுகிறது.

அந்தவகையில், 11ஆவது உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்குரிய 4 பிரிவுகள் பட்டியலை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக இருக்கும் டேனி கே டெவிஸ் வெளியிட்டுள்ளார்.

இதில், ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு 2021ஆம் ஆண்டின் மதிப்புமிக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மை கதையை மையமாக கொண்டு சமூக நீதியை முன்னிறுத்தி ஜெய் பீம் படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டதற்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, சூர்யா, ஜோதிகா, இயக்குனர் டி.ஜே.ஞானவேல்ராஜா மற்றும் ஜெய் பீம் படக்குழுவினர் நேரடியாக வந்து விருதுகளை பெற்றுச்செல்லுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


Global Community Oscars | இதுவும் ஆஸ்கர்தான்.. ஆனா அது இல்ல.! சூர்யா - ஜோதிகா, உதயநிதிக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு!

அதேபோல, ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் 2021' என்ற பிரிவில் எம்.எல்.ஏவும், திமுக இளைஞர் அணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினுக்கு விருது வழங்கப்பட உள்ளது. 

உலகெங்கிலும் வளர்ந்து வரும் தலைவரால் செய்யப்பட்ட சிறந்த பணியை அங்கீகரிப்பதை நோக்கமாக கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது. உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த மாதம் 19ஆம் தேதியன்று இலினொய் மாகாணத்தில் உள்ள நேபர்வில்லேயில் நடைபெற உள்ளது. இதனையடுத்து பலரும் விருது பெற இருப்பவர்களுக்கு தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.

முன்னதாக, ஆஸ்கரின் யூடியூப் சேனலில் ’ சீன் அட் தி அகாடமி ‘ என்ற தலைப்பில் சில வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. அதில், ஜெய்பீம் திரைப்படத்தின் காட்சிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அந்த வீடியோவில் ஜெய்பீம் திரைப்படத்தின் சில காட்சிகளையும் படத்தின் இயக்குனர் அந்த படத்தை பற்றி பேசும் சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளன. தமிழ் சினிமாவிற்கு இது மிக பெரிய கௌரவம் என்று அனைவரும் படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Rajinikanth | ஒரு அவித்த முட்டை கேட்ட ரஜினி... அவமானப்படுத்திய சர்வர்... 17 ஆண்டுகளுக்குப் பின் திருப்பிக் கொடுத்த மாஸ் சம்பவம்!

Anjana Rangan Corona: அறிகுறியே தெரியல..ரொம்ப பயமா இருக்கு.. பிரபல தொகுப்பாளினி அஞ்சனாவுக்கு கொரோனா..

தலைப்பு செய்திகள்

கவின் நயன்தாரா நடித்துள்ள ஹாய் திரைப்பட விமர்சனம்
கவின் நயன்தாரா நடித்துள்ள ஹாய் திரைப்பட விமர்சனம்
ஒன்ஸ் மோர் – திரை விமர்சனம்
ஒன்ஸ் மோர் – திரை விமர்சனம்
சிவராஜ்குமார் - அபிஷன் ஜீவிந்த் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
சிவராஜ்குமார் - அபிஷன் ஜீவிந்த் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
King100 glimpse : நடிகர் நாகர்ஜூனாவின் 100 ஆவது படமான 'கிங்100' படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியானது
King100 glimpse : நடிகர் நாகர்ஜூனாவின் 100 ஆவது படமான 'கிங்100' படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியானது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: விஜய்க்கு வயிற்றெரிச்சல், பொறாமை இல்லை.. ஆனால் எதிர் கும்பலுக்கு... வெளுத்து வாங்கிய திருமாவளவன்!
Thirumavalavan: விஜய்க்கு வயிற்றெரிச்சல், பொறாமை இல்லை.. ஆனால் எதிர் கும்பலுக்கு... வெளுத்து வாங்கிய திருமாவளவன்!
FSSAI: தரமற்ற பெருங்காயம் விற்பனை.. எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனங்களுக்கு தடை.. கேள்விக்குறியாகும் மக்களின் ஆரோக்கியம்!
FSSAI: தரமற்ற பெருங்காயம் விற்பனை.. எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனங்களுக்கு தடை.. கேள்விக்குறியாகும் மக்களின் ஆரோக்கியம்!
Minister Nirmalkumar: ஒரே ஃபைல், ஓடிப்போன உதயநிதியின் நண்பர்..! ஒருத்தரையும் விடமாட்டோம் - நிர்மல் குமார் வார்னிங்
ஒரே ஃபைல், ஓடிப்போன உதயநிதியின் நண்பர்..! ஒருத்தரையும் விடமாட்டோம் - நிர்மல் குமார் வார்னிங்
பேருந்தில் இருந்து குதித்து, 500 படிகள் ஏறி..! நேபாள வெள்ளத்தில் உயிர் பிழைத்த இந்தியர்களின் திக் திக் நிமிடங்கள்
பேருந்தில் இருந்து குதித்து, 500 படிகள் ஏறி..! நேபாள வெள்ளத்தில் உயிர் பிழைத்த இந்தியர்களின் திக் திக் நிமிடங்கள்
Upcoming Budget Cars: அடுத்தடுத்து 4 புது கார்கள்..! ரூ.6 லட்சம் தான் பட்ஜெட்டே, உங்களுக்கான சாய்ஸ் எது? வசதி, அம்சங்கள்
அடுத்தடுத்து 4 புது கார்கள்..! ரூ.6 லட்சம் தான் பட்ஜெட்டே, உங்களுக்கான சாய்ஸ் எது? வசதி, அம்சங்கள்
Sugar Cut: ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுதினால்...! உடலில் ஏற்படும் முக்கிய 5 மாற்றங்கள் என்ன?
ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுதினால்...! உடலில் ஏற்படும் முக்கிய 5 மாற்றங்கள் என்ன?
September Holidays : செப்டம்பரில் கொத்தாக வரும் 13 நாள் விடுமுறை.! மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி - வெளியான அறிவிப்பு
செப்டம்பரில் கொத்தாக வரும் 13 நாள் விடுமுறை.! மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி - வெளியான அறிவிப்பு
“மானம், ரோஷம் இல்லையா? சத்தியமூர்த்தி பவனை விஜய்பவன் என மாற்றிடுங்க” - காங்கிரஸை விளாசிய திமுக பரந்தாமன்
“மானம், ரோஷம் இல்லையா? சத்தியமூர்த்தி பவனை விஜய்பவன் என மாற்றிடுங்க” - காங்கிரஸை விளாசிய திமுக பரந்தாமன்
Embed widget