மேலும் அறிய

Kanguva Glimpse: செம்ம அப்டேட் தந்த ‘கங்குவா’ டீம்... நாளை ஸ்பெஷல் அறிவிப்பு... உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்!

இதுவரை இப்படத்தில் நடிகர் சூர்யாவின் கெட் அப் ஃபோட்டோவை கூட முழுமையாக பகிராமல் படக்குழு அமைதி காத்து வந்த நிலையில், இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கங்குவா படத்தின் க்ளிம்ஸ் வீடியோ நாளை வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம்  ‘கங்குவா’.

அப்டேட் தந்த ஸ்டுடியோ க்ரீன்

இப்படத்தின் படப்பிடிப்பு  கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றை படக்குழு பகிர்ந்துள்ளது.

அதன்படி கங்குவா படத்தின் க்ளிம்ஸ் வீடியோ குறித்த அப்டேட் நாளை வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் பகிர்ந்துள்ளது. நாளை காலை 11 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகும் என ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

சரித்திரப் பின்னணியில் 13 கதாபாத்திரங்கள்

இதுவரை இப்படத்தில் நடிகர் சூர்யாவின் கெட் அப் ஃபோட்டோவை கூட முழுமையாக பகிராமல் படக்குழு அமைதி காத்து வந்துள்ள நிலையில், சூர்யாவின் பிறந்தநாளான வரும் ஜூலை 23ஆம் தேதி அவரது முழுமையாக தோற்றம் வெளியிடப்படலாம் என ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

சூர்யாவின் 42ஆவது படமாக உருவாகும் இப்படம் சரித்திரப் பின்னணியில் தயாராவதாகவும் ,இதுவரை இல்லாத வகையில் இப்படத்தில் சூர்யா 13 கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும்  இப்படத்தின் படப்பிடிப்பு, முன்னதாக  கோவா, பிஜூ தீவுகள், எண்ணூர் துறைமுகம், கேரளா, கொடைக்கானல், சென்னை  உள்ளிட்ட பகுதிகளில்  நடைபெற்று வந்தது.

சூர்யாவின் 42ஆவது படமான கங்குவா படத்தின் தலைப்பு, கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் ப்ரோமோ சூர்யா பிறந்தநாள் அன்று வெளியாகும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதன்படி இன்று இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

அடுத்த ஆண்டு ரிலீஸ்

முன்னதாக சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் கங்குவா படத்தின் பாடல் காட்சி பிரம்மாண்டமான வகையில் படம் பிடிக்கப்பட்டதாகவும், 2,000 நடனக்கலைஞர்கள் இப்பாடலுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. 

முன்னதாக அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம், 80 கோடி ரூபாய்க்கு கங்குவா படத்தின் தென்னிந்திய டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியது. இந்நிலையில், அடுத்த ஆண்டு கோடை ஸ்பெஷலாக கங்குவா படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 மேலும் படிக்க: Entertainment Headlines July 19: இணையத்தைக் கலக்கும் பிரபாஸ்...லால் சலாம் நடிகைக்கு சிறை தண்டனை... இன்றைய டாப் சினிமா செய்திகள்!

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்
8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்
சினிமா வாய்ப்புக்காக இப்படியா? மனைவி சுபா குறித்து வீடியோ வெளியிட்ட வேதமூர்த்தி – வைரலாகும் குடும்பப் பிரச்சினை!
சினிமா வாய்ப்புக்காக இப்படியா? மனைவி சுபா குறித்து வீடியோ வெளியிட்ட வேதமூர்த்தி – வைரலாகும் குடும்பப் பிரச்சினை!
OM Box Office Collection: நாளுக்கு நாள் சரியும் வசூல்.. ஓம் படத்திற்கு கூட்டம் குறையுதா? தனுஷ் படத்தின் கலெக்ஷன் எவ்வளவு?
OM Box Office Collection: நாளுக்கு நாள் சரியும் வசூல்.. ஓம் படத்திற்கு கூட்டம் குறையுதா? தனுஷ் படத்தின் கலெக்ஷன் எவ்வளவு?
மணிகண்டனின் மக்கள் காவலன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ஆட்சேபனை..தள்ளிப்போகும் ரிலீஸ்?
மணிகண்டனின் மக்கள் காவலன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ஆட்சேபனை..தள்ளிப்போகும் ரிலீஸ்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "ஆபாச புலம்பல்களை நிறுத்துங்கள்.. இல்லாவிட்டால்.." உதயநிதிக்கு தவெக வார்னிங்..!
"ஆறே மாசம் எல்லாம் நாசம்: மின்வெட்டுக்கும், அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டியே!" - ஸ்டாலின் கடும் சாடல்!
TVK: வீட்டுக்குள் பூஜை நடத்தி வெளியில் பகுத்தறிவாளர் வேடம் போடுவது யார்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK: வீட்டுக்குள் பூஜை நடத்தி வெளியில் பகுத்தறிவாளர் வேடம் போடுவது யார்? உதயநிதிக்கு தவெக கேள்வி
நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு - என்ன காரணம்? எங்கே நடந்தது அசம்பாவிதம்?
நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்கோளாறு - என்ன காரணம்? எங்கே நடந்தது அசம்பாவிதம்?
Thirumavalavan:
Thirumavalavan: "இடைக்காலத் தீர்ப்பால் பதற்றம்.." மதுரை அமைதிப் பேரணியில் பங்கேற்கும் திருமா!
8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்
8 வருடமாக செக்ஸ் டார்ச்சர்... மனம் திறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுபா வரதராஜன்
நாளை கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
நாளை கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
IND A vs PAK A: 314 ரன்கள் டார்கெட் வைத்த பாகிஸ்தான்.. அடுத்தடுத்து பறிபோன 2 விக்கெட்டுகள்! சேசிங் செய்யுமா இந்தியா?
IND A vs PAK A: 314 ரன்கள் டார்கெட் வைத்த பாகிஸ்தான்.. அடுத்தடுத்து பறிபோன 2 விக்கெட்டுகள்! சேசிங் செய்யுமா இந்தியா?
Embed widget