Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
ஜெயிலர் 2ம் பாகம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர் 2. ஆயுத பூஜை கொண்டாட்டமாக வரும் 15ம் தேதி வெளியாகிறது.
ஜெயிலர் 2:
கூலி படம் எதிர்பாராத வெற்றியைப் பெறாத சூழலில் இந்த படம் வெளியாகிறது. 2023ம் ஆண்டு வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாவது பாகமான மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது.
முதல் பாகத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் என இந்திய திரையுலகின் பிரபல நட்சத்திரங்கள் முதல் பாகத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர். அதேபோல, ஜெயிலர் 2ம் பாகத்திலும் ஹ்ரித்திக் ரோஷன் இவர்களுடன் இணைந்து சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
அதிர்ச்சி தகவல்:
இந்த படத்தில் விஜய் சேதுபதியும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சந்தானம் நகைச்சுவை வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது. படம் வெளியாக இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தற்போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, நடிகர் விஜய் சேதுபதியின் காட்சிகளும், நடிகர் சந்தானத்தின் காட்சிகளும் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரபல நடிகரும், இயக்குனருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார். மேலும், இதன் காரணமாகவே அவர்கள் ஜெயிலர் 2 படத்தின் சூப்பர்ஷோ நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. விஜய் சேதுபதி ரஜினியுடன் இணைந்து பேட்ட படத்தில் ஏற்கனவே நடித்திருந்தார். சந்தானம் ரஜினியுடன் இணைந்து லிங்கா, எந்திரன் படங்களில் நடித்திருந்தார்.
காரணம் என்ன?
சமீபகாலமாக இந்தியாவில் வெளியான பான் இந்தியா படங்கள் தோல்வி அடைந்ததற்கு கதை மட்டுமின்றி படத்தின் நீளமும் முக்கிய காரணமாக இருந்தது. இதனால், ஜெயிலர் 2 பான் இந்தியா படமாக வெளியாக உள்ள நிலையில், நேரம் கருதி இவர்கள் காட்சியை படக்குழு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன் பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி நடித்துள்ளார். அவர் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அவருடன் வித்யாபாலன், முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி சுராஜ், எஸ்ஜே சூர்யா ஆகியோரும் வில்லனாக நடித்துள்ளனர்.
முதல் பாகத்தில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றிய ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், மோகன்லால் இந்த படத்திலும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















