மேலும் அறிய

Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2ம் பாகம் நாளை வெளியாக உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்திய திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஜெயிலர். 

ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்:

இந்த படத்தின் இரண்டாவது பாகமாக ஜெயிலர் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படம் உலகெங்கும் நாளை வெளியாகிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார். 

கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்:

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்தாண்டு கூலி திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு பிறகு சுமார் ஓராண்டுக்கு பிறகு ஜெயிலர் 2ம் பாகம் வெளியாகிறது. இதனால், ரஜினிகாந்த் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக ஜெயிலர் 2ம் பாகத்திற்கான கொண்டாட்டத்தை ரஜினி ரசிகர்கள் தொடங்கியுள்ளனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வந்த டாக்சிக், பாரடைஸ் படங்கள் படுதோல்வி அடைந்ததால் ஜெயிலர் 2ம் பாகத்திற்கான ப்ரமோஷனை இணையதளத்தில் படக்குழு பெரியளவில் மேற்கொள்ளவில்லை. ஒரு சாதாரண படத்திற்கான அளவிலே இணையத்தில் விளம்பரத்தை படக்குழு கையில் எடுத்துள்ளது. ஏனென்றால், சமீபகாலமாக மிகப்பெரிய எதிர்பார்ப்பே படத்திற்கான தோல்வியாக சமீபகாலமாக அமைந்து வருகிறது.

விஜய்யை சீண்டும் போஸ்டர்கள்:

இதனால், ஜெயிலர் 2 படக்குழு அதுபோன்ற ஒரு நிலையை தவிர்ப்பதற்காக இந்த யுக்தியை கையில் எடுத்துள்ளது. திரையரங்குகளில் இன்று முதலே கொண்டாட்டத்தை ரஜினி ரசிகர்கள் கையில் எடுத்துள்ளனர். பல இடங்களில் ரஜினி ரசிகர்கள் முதலமைச்சர் விஜய்யை சீ்ண்டும் வகையில் 8 முதலமைச்சரைப் பார்த்தாகிவிட்டது, ஆனால் ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் என்று போஸ்டர் வெளியாகியது.

இதுபோன்று ரஜினிகாந்த் ரசிகர்கள் பல இடங்களில் விஜய்யை சீண்டும் விதமாக போஸ்டர் ஒட்டியிருப்பதால் அது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்த படத்திற்கு நாளை முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. ரஜினிகாந்துடன் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

நட்சத்திர பட்டாளங்கள்:

ஜெயிலர் 2ம் பாகத்தில் வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்துள்ளார். பிரதான வில்லன் வேடத்தில் பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி நடித்துள்ளார். வித்யா பாலன், சுனில், பகவதி பெருமாள், நமோ நாராயணா, மிர்ணா என முதல் பாகத்தை போல நட்சத்திர பட்டாளங்கள் இந்த பாகத்திலும் நடித்துள்ளனர். 

முதல் பாகத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோருடன் இணைந்து ஹ்ரித்திக் ரோஷனும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
இன்னும் 50 நாள்தான்..! Avengers Doomsday படத்தின் புது ட்ரெயிலர் ரிலீஸ்! இப்பவே புல்லரிக்குதே
இன்னும் 50 நாள்தான்..! Avengers Doomsday படத்தின் புது ட்ரெயிலர் ரிலீஸ்! இப்பவே புல்லரிக்குதே
ரூ.413 கோடி வியாபாரம்.. ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் படங்களால் மாஸ் காட்டும் RKFI!
ரூ.413 கோடி வியாபாரம்.. ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் படங்களால் மாஸ் காட்டும் RKFI!
யோகி பாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’ நவம்பர் 27ஆம் தேதி ரிலீஸ்!
யோகி பாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’ நவம்பர் 27ஆம் தேதி ரிலீஸ்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
TVK: நேத்து வந்தவங்களுக்கு உள்ளாட்சியில சீட்டா? தவெக நிர்வாகிகள் ஆதங்கம்! ஆனந்த் சொன்ன அந்த வார்த்தை!
TVK: நேத்து வந்தவங்களுக்கு உள்ளாட்சியில சீட்டா? தவெக நிர்வாகிகள் ஆதங்கம்! ஆனந்த் சொன்ன அந்த வார்த்தை!
Minster Keerthana: ரூ.3 கோடி கமிஷன் வாங்கினேனா? அமைச்சர் கீர்த்தனா 4 பக்க விளக்கம் - நெட்டிசன்கள் நச் கேள்வி
ரூ.3 கோடி கமிஷன் வாங்கினேனா? அமைச்சர் கீர்த்தனா 4 பக்க விளக்கம் - நெட்டிசன்கள் நச் கேள்வி
TN Govt: 3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்..! CMDA-க்கு புது CEO, 13 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம் - அரசு அதிரடி
3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்..! CMDA-க்கு புது CEO, 13 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம் - அரசு அதிரடி
Anbil Mahesh: மெத்தை, கோழி குழம்பு, கொசு விரட்டி.. அன்பில் மகேஷிற்கு சிறையில் என்னென்ன வசதிகள்?
Anbil Mahesh: மெத்தை, கோழி குழம்பு, கொசு விரட்டி.. அன்பில் மகேஷிற்கு சிறையில் என்னென்ன வசதிகள்?
TN Govt: மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..! UDID அட்டை இருந்தா போதும் - முழு விவரம்
மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..! UDID அட்டை இருந்தா போதும் - முழு விவரம்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
’பாஜக அமைச்சரவையில் இணையும் திமுக?’ இரண்டு மத்திய அமைச்சர்களை பெற பேச்சுவார்த்தை !
’சிகப்பு கம்பளம் விரித்த பாஜக’ மத்திய அமைச்சரவையில் இணைகிறதா திமுக?
Embed widget