மேலும் அறிய

Kavin: நெல்சன் தயாரிப்பில் முதல் ஹீரோவாகக் களமிறங்கும் கவின்? கலக்கல் அப்டேட் இதோ!

Kavin - Nelson Dilipkumar: இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் கவின் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அப்டேட் நாளை வெளியாக இருக்கிறது.

கவின்

டாடா படத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர் பட்டியலில் இணைந்துள்ளவர் கவின். தற்போது ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் இயக்குநர் இளன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள படம் ஸ்டார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகனாகும் கனவை அடைய நினைக்கும் ஒரு இளைஞரின் போராட்டமே ஸ்டார் படத்தின் கதை. ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி எதிர்ப்பார்ப்புகளைக் கடந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

பலவிதமான தோற்றங்களில் தோன்றும் கவின் அவரது டயலாக் டெலிவரி, வசனங்கள், யுவனின் மேஜிக் இசை என எல்லா விதங்களிலும் ஒரு படத்திற்கான எதிர்பார்ப்பை பலப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது இந்த ட்ரெய்லர். வரும் மே 10ஆம் தேதி ஸ்டார் படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படியான நிலையில், கவின் நடிக்கும் அடுத்தப் படத்திற்கான அப்டேட் நாளை வெளியாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 நெல்சன் தயாரிப்பில் கவின் 

ஜெயிலர் படத்தின் மூலம் தமிழின் முன்னணி கமர்ஷியல் இயக்குநராக மாறியுள்ள நெல்சன் திலீப் குமார் தற்போது தயாரிப்பாளராக களமிறங்க இருக்கிறார் . ஃபிலமெண்ட் பிச்சர்ஸ் என்கிற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நெல்சன், நேற்று இதன் அறிவிப்பை வெளியிட்டார். எல்லா தரப்பு மக்களையும் சென்று சேரும் வகையிலான சுவாரஸ்யமான கதைகளை தயாரிப்பதே இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கப் பட்டதன் நோக்கம் என நெல்சன் தெரிவித்துள்ளார். இந்த நோக்கத்துடன் எல்லா விதங்களிலும் பொருந்திப் போவது மாதிரியான ஒரு படத்தையே தனது முதல் படமாக தயாரிக்க இருப்பதாக நெல்சன் தெரிவித்தார். இந்தப் படத்தின் அறிவிப்பு வரும் மே 3ஆம் தேதி வெளியாகும் என அவர் கூறியிருந்தார். 

தற்போது  நடிகர் கவின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது அடுத்தப் படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகும் எனவும், இந்தப் படம் தனது மனதிற்கு மிக நெருக்கமான ஒரு படம் என்றும் பதிவிட்டுள்ளார். இத்தகவலின்படி நெல்சனின் உதவி இயக்குநரான சிவபாலன் இந்தப் படத்தை இயக்கி இருப்பதாகவும் நெல்சனின் படங்களில் இருப்பது போல் முழுக்க முழுக்க டார்க் காமெடி படமாக இந்தப் படம் உருவாகியிருப்பதாக தகவல் கூறப்படுகிறது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget