மேலும் அறிய

RRR | ஆர்.ஆர்.ஆர் ஷூட்டிங் முடிஞ்சது.. ஆனா ஒரு அதிர்ச்சி அப்டேட்..!

 ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக  நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குநர் ராஜமௌலி கையில் எடுத்திருக்கும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ . 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக  கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

மேலும் இந்த படத்தில் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் தயாராகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் பாடல் ஒன்று வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.  ‘நட்பு’  என்ற அந்த பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் நட்பு பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றன. முன்னதாக ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் மேக்கிங் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர் படக்குழு. மெய்சிலிர்க்கும்  வகையில் இருந்த காட்சிகள் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிப்பதாக இருந்தது.

ஆர்.ஆர்.ஆர் என்பது  இரத்தம் ரணம் ரௌத்திரம் என்பதன் சுருக்கமாகும். இந்த படத்தின் இறுதி படப்பிடிப்பு  உக்ரைன் நாட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. படம்  வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளதால் படத்தின் வெளியீட்டு தேதியை சற்று கால இடைவெளிக்கு பின்னர் வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்களாம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. 

தமிழகத்தின் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கான வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது லைகா. திரையரங்கு வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த படம் , வெளியான குறிப்பிட்ட சில கால இடைவெளிகளில் ஒடிடி தளங்களில் வெளியாக உள்ளது. அதன்படி ஆர்.ஆர்.ஆர் படத்தின் இந்தி பதிப்பை நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்கும் , மற்ற மொழிகளின் ஒடிடி வெளியீட்டு உரிமையை  ஜீ5 ஓடிடி தளத்திற்கு வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையை தமிழில் விஜய் டிவி கைப்பற்றியுள்ளது. அதேபோல தெலுங்கு மற்றும் கன்னடத்திற்கான உரிமையை ஸ்டார் தொலைகாட்சியும், இந்தியில்  ஜீ சினிமாவும், மலையாளத்தின் உரிமையை ஏசியாநெட்டும் பெற்றுள்ளன. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

டெலிவரி பாய் திரைப்பட விமர்சனம்
டெலிவரி பாய் திரைப்பட விமர்சனம்
முகேன் ராவ் நடித்துள்ள 'நிறம்' திரைப்பட விமர்சனம்
முகேன் ராவ் நடித்துள்ள 'நிறம்' திரைப்பட விமர்சனம்
பொங்கலுக்கு வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ 
பொங்கலுக்கு வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ 
Karthigai Deepam: சிறைக்கு நிரந்தமாகப் போகப்போகும் சாமுண்டீஸ்வரி.. ஸ்ரேயா பாேடும் ஸ்கெட்ச்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சிறைக்கு நிரந்தமாகப் போகப்போகும் சாமுண்டீஸ்வரி.. ஸ்ரேயா பாேடும் ஸ்கெட்ச்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அப்பட்டமாக தோல்வியடைந்த தவெக அரசு" - சரமாரியாக சாடிய ஸ்டாலின்!
ரூ.1,037 கோடியில் சாலைகள் தரம் உயர்த்த முதல்வர் விஜய் போட்ட கையெழுத்து - எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!
ரூ.1,037 கோடியில் சாலைகள் தரம் உயர்த்த முதல்வர் விஜய் போட்ட கையெழுத்து - எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!
'ஒருத்தனையும் விட மாட்டேன்’ .. ஆட்டத்தை ஆரம்பித்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்..இழுத்து செல்லப்பட்ட எம்எல்ஏ அருள் விக்னேஷ்
'ஒருத்தனையும் விட மாட்டேன்’ .. ஆட்டத்தை ஆரம்பித்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்..இழுத்து செல்லப்பட்ட எம்எல்ஏ அருள் விக்னேஷ்
திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட CRPF... முதற்கட்டமாக 107 ரிசர்வ் காவல் படையினர் புறப்பட்டனர் !
திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட CRPF... முதற்கட்டமாக 107 ரிசர்வ் காவல் படையினர் புறப்பட்டனர் !
Kallakurichi MLA: ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது - பறிபோகுமா எம்.எல்.ஏ பதவி?
Kallakurichi MLA: ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது - பறிபோகுமா எம்.எல்.ஏ பதவி?
தவெக எம்.எல்.ஏ கைது விவகாரம் தொடர்பாக காவல்துறை எச்சரிக்கை: விவரம் தெரியுமா?
தவெக எம்.எல்.ஏ கைது விவகாரம் தொடர்பாக காவல்துறை எச்சரிக்கை: விவரம் தெரியுமா?
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: 100 ஆண்டுகால போராட்டம் முதல் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு வரை - முழு பின்னணி
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: 100 ஆண்டுகால போராட்டம் முதல் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு வரை - முழு பின்னணி
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஆணை - அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஆணை - அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
Embed widget