மேலும் அறிய

Soul of Varisu : குரலில் மயக்கும் சித்ரா.. பாசத்தில் நெகிழ வைக்கும் விஜய்.. வெளியானது வாரிசின் 3 வது பாடல்!

Soul of Varisu: வாரிசு படத்தின் மூன்றாவது சிங்கிளான “சோல் ஆஃப் வாரிசு” பாடல் வெளியாகிவுள்ளது.

வாரிசு படத்தின் மூன்றாவது சிங்கிளான “சோல் ஆஃப் வாரிசு” பாடல் வெளியாகிவுள்ளது.

2023 ஆம் ஆண்டில் வரும் பொங்கலையொட்டி, விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியாகவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் நடந்து வருகிறது.  படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரபூர்வ தகவல் வரும் முன்னரே, படத்தின் விநியோகமும் நடந்து முடிந்துவிட்டது.

தற்போது, இந்த படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு பாடலும் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகிவருகிறது.  முதலில், ரஞ்சிதமே பாடல் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும், ஒரு சில நாட்களிலேயே அந்தபாடல் வைரலானது. அடுத்ததாக, 30 ஆண்டு கால விஜயின் சினிமா வாழ்க்கையை கொண்டாடும் விதமாக, தீ தளபதி பாடல் வெளியிடப்பட்டது. இந்தபாடலை நடிகர், சிம்பு பாடினார். அத்துடன், தீ செட்டில் ஆடி அசத்தினார். 

இதனைத் தொடர்ந்து டிசம்பர் 24 ஆம் தேதி வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் இன்று மாலை 5 மணிக்கு 3 ஆம் பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. பின்னர், இன்று காலையில் க்ளிம்ப்ஸ் காட்சி வெளியானது. அதில், ‘அம்மா இது உனக்காக என்றும் வாரிசின் ஆன்மா’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் வாரிசு படத்தின் 3 ஆவது பாடல் சொன்ன படியே வெளியாகியிருக்கிறது; இந்த பாடலை சின்ன குயில் சித்ரா பாடியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

 

வாரிசு படம் எப்போதுதான் ரிலீஸாகும்

இப்படம்  பொங்கலுக்கு வெளியாகும் என்ற போஸ்டரை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்  தியேட்டர் வாசலில் ஒட்டி, வீடியோவையும் அதன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டது. படக்குழுவின் சார்பாக படத்தின் மற்ற அப்டேட்கள் வந்து கொண்டு  இருக்கின்றன. ஆனால், எந்த தேதியில் வெளியாகும் என்பது தெரியவில்லை. வெளிநாடுகளில் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸாகும் என்ற அறிவிப்பு வந்த நிலையில், டிக்கெட் முன்பதிவும் முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. 

வாரிசு Vs துணிவு 

வாரிசு படத்துக்கு போட்டியாக களமிறங்கும் துணிவு படத்திலிருந்து, இதுவரை “சில்லா சில்லா” மற்றும் “காசேதான் கடவுளடா” பாடல்கள் வெளியாகி உள்ளன. இப்பாடல்கள் அஜித் ரசிகர்களிடமிருந்து கலைவையான  விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், போகப் போக செம ஹிட்டாகும் என்றும் ரசிகர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் வாரிசிலிருந்து ஒரு அப்டேட் வந்தால், அடுத்த நாளே துணிவிலிருந்து அப்டேட் வருகிறது என்றும்  சில விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களைக் கேலி செய்து வருகின்றனர்.

 

 

 

தலைப்பு செய்திகள்

திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ..50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ..50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Embed widget