தியேட்டரில் வெளியாகும் சூரரைப்போற்று, ஜெய்பீம்.! எப்போது தெரியுமா.. முழுவிவரம் உள்ளே..!
சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்கள் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்கள் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.
தொடர் தோல்வியில் துவண்டு கொண்டிருந்த நடிகர் சூர்யாவுக்கு ‘ கம்பேக்’ படமாக அமைந்த திரைப்படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்தப்படம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு பிறகு அமேசான் ஓடிடிதளத்தில் வெளியிடப்பட்டது. ஏர் டெக்கான் விமான நிறுவனத்தின் நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
View this post on Instagram
இதே போல இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படமும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
View this post on Instagram
இந்த இரண்டு படங்களும் அந்த தளத்தில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும், இந்தப்படங்களை திரையில் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்த அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் தற்போது சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் திரைப்படங்களை தியேட்டரில் வெளியிட இருக்கிறார் பிரபல தயாரிப்பாளரான கே.இ. ஞானவேல்ராஜா.
சூர்யாவின் பிறந்தநாள் வருகிற 23 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், ஜூலை 22 முதல் ஜூலை 24 ஆம் தேதி அதாவது அந்த மூன்று நாட்களில் இந்தப்படங்களை சென்னையின் பாடி பகுதியில் இருக்கும் க்ரீன் சினிமாவில் திரையிட திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் 23 ஆம் தேதி சூரரைப்போற்று படம் காலை 4 மணிக்கு திரையிடப்பட இருக்கிறது. ஓடிடியில் வெளியான சூப்பர்ஹிட் படங்களை தியேட்டரில் பார்க்க சென்னை சுற்றுவட்டார சூர்யா ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.