மேலும் அறிய

Sonakshi sinha - Zaheer Iqbal marriage : ரஜினி பட நாயகிக்கு விரைவில் டும் டும் டும்... சோனாக்ஷி சின்ஹா - ஜாகீர் இக்பால் திருமண தேதி அறிவிப்பு

Sonakshi sinha - Zaheer Iqbal : பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால் திருமணம் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாலிவுட் திரையுலகை சேர்ந்த மற்றொரு காதல் ஜோடிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. பாலிவுட் பிரபலமான நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹாவின் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில், சஞ்சய் லீலா பன்சாலியின் இணைய தொடரான 'ஹீராமண்டி'யில் ஃபரிதான் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பாராட்டுகளை குவித்த சோனாக்ஷி சின்ஹா தற்போது அதன் வெற்றியை கொண்டாடி வருகிறார். 

Sonakshi sinha - Zaheer Iqbal marriage : ரஜினி பட நாயகிக்கு விரைவில் டும் டும் டும்... சோனாக்ஷி சின்ஹா - ஜாகீர் இக்பால் திருமண தேதி அறிவிப்பு

2010ம் ஆண்டு வெளியான 'தபாங்; திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.அதை தொடர்ந்து ரவுடி ரத்தோர், சன் ஆஃப் சர்தார், தபாங் 2, ஹாலிடே - எ சோல்ஜர் இஸ் நெவர் ஆஃப் டியூட்டி, மிஷன், லூடெரா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தாஹத் என்ற இணைய தொடரில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ககுடா மற்றும் நிகிதா ராய் மற்றும் தி புக் ஆப் டார்க்னெஸ் உள்ளிட்ட இடங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் 2019ம் ஆண்டு வெளியான 'நோட்புக்' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜாகீர் இக்பால். பாலிவுட் சினிமாவில் அவரும் பிரபலமான நடிகராக இருக்கும் நிலையில் இருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு நண்பர்களாக இருந்து வந்தனர். பின்னர் காதலர்களாக மாறி டேட்டிங் செய்து வந்த நிலையில் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டனர். அவர்கள் இருவரும் இணைந்து சோசியல் மீடியாவில் ஏராளமான போஸ்ட்களை பகிர்ந்துள்ளனர். இதனால் அவர்கள் குறித்த வந்ததிகள் பரவி வந்த நிலையிலும் அதை அவர்கள் இருவருமே வெளிப்படையாக அறிவிக்கவில்லை. 

Sonakshi sinha - Zaheer Iqbal marriage : ரஜினி பட நாயகிக்கு விரைவில் டும் டும் டும்... சோனாக்ஷி சின்ஹா - ஜாகீர் இக்பால் திருமண தேதி அறிவிப்பு

இந்நிலையில் அவர்களின் திருமணம்  குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கூட ஜாகீர் இக்பால் மற்றும் சோனாக்ஷி சின்ஹா இருவரும் இணைந்து 'டபுள் எக்ஸ்எல்' படத்தில் நடித்திருந்தனர். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தில் சோனாக்ஷி சின்ஹா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 23ம் தேதி அவர்கள் இருவருக்கும் மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த திருமண விழாவில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஹீரமாண்டி படத்தில் நடித்த நடிகர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. அவர்களின் திருமண அழைப்பிதழ் அட்டைப்படம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் 'வதந்திகள் உண்மை' என அச்சடிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு விருந்தினர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து வருமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. ஜூன் 23ம் தேதி பாலிவுட் திரையுலகமே கோலாகலமாக காட்சியளிக்க உள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
"தார்மீக, அரசியல் தோல்விக்கு பிறகும் ஆணவம் தொடர்கிறது" பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளித்த கார்கே!
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து வளர்வது சந்தோஷம் தான் - வரிச்சூர் செல்வம்
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து வளர்வது சந்தோஷம் தான் - வரிச்சூர் செல்வம்
Vikravandi by election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு ஏற்பு, நிராகரிப்பு - முழு விவரம் இதோ
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு ஏற்பு, நிராகரிப்பு - முழு விவரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
"தார்மீக, அரசியல் தோல்விக்கு பிறகும் ஆணவம் தொடர்கிறது" பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளித்த கார்கே!
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து வளர்வது சந்தோஷம் தான் - வரிச்சூர் செல்வம்
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து வளர்வது சந்தோஷம் தான் - வரிச்சூர் செல்வம்
Vikravandi by election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு ஏற்பு, நிராகரிப்பு - முழு விவரம் இதோ
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் வேட்புமனு ஏற்பு, நிராகரிப்பு - முழு விவரம் இதோ
Atlee: ரசிகர்களே! சல்மான் கானுடன் இணைந்து நடிக்கிறாரா ரஜினி? அட்லீ மாஸ்டர் ப்ளான்
Atlee: ரசிகர்களே! சல்மான் கானுடன் இணைந்து நடிக்கிறாரா ரஜினி? அட்லீ மாஸ்டர் ப்ளான்
NTA Controversy: நுழைவுத் தேர்வுகளில் ஹேக்கிங், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, மோசடி - என்.டி.ஏ.வில் என்ன நடக்கிறது?
NTA Controversy: நுழைவுத் தேர்வுகளில் ஹேக்கிங், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, மோசடி - என்.டி.ஏ.வில் என்ன நடக்கிறது?
Stock Market: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே! இந்த வாரம் கவனிக்க வேண்டிய முக்கிய ஐ.பி.ஓ.க்கள் லிஸ்ட்!
பங்குச்சந்தை முதலீட்டாளர்களே! இந்த வாரம் கவனிக்க வேண்டிய முக்கிய ஐ.பி.ஓ.க்கள் லிஸ்ட்!
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 அதிகாரிகளை நியமித்தது இந்திய தேர்தல் ஆணையம்
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 அதிகாரிகளை நியமித்தது இந்திய தேர்தல் ஆணையம்
Embed widget