மேலும் அறிய

SK போட்ட ட்வீட் - சூர்யாவை பழி தீர்த்தாரா? பழைய பதிவை தோண்டிய ரசிகர்கள்!

சூரியின் மண்டாடி படத்தை பாராட்டி நடிகர் சிவகார்த்திகேயனின் பதிவு சூர்யா ரசிகர்களிடையே சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது

இன்று மண்டாடி மற்றும் சர்தார் 2 ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், மண்டாடி படத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது X பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  சிவகார்த்திகேயனின் இந்த பதிவை சூர்யாவின் கடந்த கால பதிவு ஒன்றுடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யா ரசிகர்களிடையே மோதல் வெடித்துள்ளது

சூரியின் மண்டாடி படத்தை பாராட்டி சிவகார்த்திகேயன் பதிவு

சூரி நடிப்பில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள மண்டாடி திரைப்படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதே நேரம் கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சூரியின் மண்டாடி திரைப்படத்திற்கு பாசிட்டிவான வரவேற்பு கிடைத்ததை குறிப்பிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர்  “Good content always wins big!” என குறிப்பிட்டுள்ளார். 

சூர்யாவின் கடந்த கால பதிவு 

சிவகார்த்திகேயனின் இந்த பதிவை சூர்யாவுடன் ரசிகர்கள் தொடர்புபடுத்துவதற்கு முக்கிய காரணம்  2022ஆம் ஆண்டு வெளியான சூர்யாவின் பழைய X பதிவு. தற்போது மீண்டும் பகிரப்பட்டு வருவதுதான். அந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் மற்றும் கார்த்தி நடித்த சர்தார் ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் வெளியானன. அப்போது சூர்யா, சர்தார் படக்குழுவை பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.

அந்த பதிவில், நல்ல கதை மற்றும் சிறப்பான உள்ளடக்கம் பெரிய வெற்றியை பெறும் என குறிப்பிட்டு, சர்தார் படக்குழுவுக்கு சூர்யா வாழ்த்து தெரிவித்திருந்தார். தற்போது சிவகார்த்திகேயனும் சூர்யாவின் படத்துக்கு கிட்டத்தட்ட அதே கருத்தை பிரதிபலிக்கும் வகையில் “Good content always wins big” என பதிவிட்டிருப்பதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இதனால், அப்போது சூர்யா கார்த்தியின் சர்தார் படத்தை பாராட்டியது போல, தற்போது சிவகார்த்திகேயன் சூர்யாவின் மண்டாடி படத்தை பாராட்டியிருக்கிறாரா? என்ற விவாதம் உருவாகியுள்ளது. சிலர் இதை பழைய பதிவுக்கான பதிலாகவும், இன்னும் சிலர் இரு நடிகர்களுக்கும் இடையிலான இயல்பான நட்பாகவும் பார்க்கின்றனர்.

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!
ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!
ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே
ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே
ரஜினி படத்தில் லாபமில்லையா ? ரஜினி ரசிகர்களிடம் சிக்கிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
ரஜினி படத்தில் லாபமில்லையா ? ரஜினி ரசிகர்களிடம் சிக்கிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
ஜெயிலர் 2 படத்தின் 6 நாள் கேரளா வசூல்
ஜெயிலர் 2 படத்தின் 6 நாள் கேரளா வசூல்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
LocalBody Election: உள்ளாட்சி தேர்தலுக்கு நோ..! அதிகாரிகளை கொண்டு வேலையை முடிக்க அரசு திட்டம் -என்ன ஆச்சு?
உள்ளாட்சி தேர்தலுக்கு நோ..! அதிகாரிகளை கொண்டு வேலையை முடிக்க அரசு திட்டம் -என்ன ஆச்சு?
Chennai Airport: மீண்டும் தாமதமாகும் 3வது முனையம் திறப்பு..! சென்னை விமான நிலையத்திற்கு விடிவு காலம் எப்போது?
மீண்டும் தாமதமாகும் 3வது முனையம் திறப்பு..! சென்னை விமான நிலையத்திற்கு விடிவு காலம் எப்போது?
School Leave: விடாத கனமழை - சென்னை உள்ளிட்ட எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை?
விடாத கனமழை - சென்னை உள்ளிட்ட எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை?
நூற்றாண்டு பாரம்பரியம், ABP நாடுவின் அடுத்த பரிணாமம்..! 24 மணி நேர நேரலை - குவியும் வாழ்த்துகள்
நூற்றாண்டு பாரம்பரியம், ABP நாடுவின் அடுத்த பரிணாமம்..! 24 மணி நேர நேரலை - குவியும் வாழ்த்துகள்
Weather Update: வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..! மழை தீவிரமடையும் என IMD வார்னிங்
வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..! மழை தீவிரமடையும் என IMD வார்னிங்
TN Weather News: சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் - தமிழக வானிலை அறிக்கை
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
Embed widget