மேலும் அறிய

SJ Suryah : ‘கடவுள் ஆசி வேணும்.. அஜித், விஜய் படங்களை இயக்குவேன்’ - எஸ்.ஜே சூர்யா பேட்டி!

வதந்தி இணையத் தொடர் செய்தியாளர் சந்திப்பின் போது தான் நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் அப்டேட் குறித்து பேசியுள்ளார் எஸ்.ஜே. சூர்யா

வதந்தி இணையத் தொடர் செய்தியாளர் சந்திப்பின் போது மீண்டும் அஜித், விஜய் படங்களை இயக்குவேன் என்று பேட்டி கொடுத்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா!

 

அஜித் நடித்த வாலி படத்தை 1999 ஆம் ஆண்டு இயக்கி, தமிழ் சினி உலகில் டைரக்டராக கால் தடம் பதித்தார். அதற்கு பின்பு விஜய் நடிப்பில் குஷி படம் வெளியாகி செம ஹிட்டானது. பிறகு நியூ, அன்பே ஆருயிரே, கல்வனின் காதலி, வியாபாரி ஆகிய படங்களில் நடித்து அசத்தினார். சினி உலகில் பல ஆண்டுகளாக, ஹீரோவாக வலம் வந்த இவர், ஸ்பைடர், மெர்சல் மற்றும் மாநாடு ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார்.

தற்போது, ட்ரெண்டிங்கில் இருக்கும் ஓடிடி தளங்களில் கவனம் செலுத்திய எஸ்.ஜே.சூர்யா, “வதந்தி” என்ற க்ரைம் வெப் தொடரில் நடித்துள்ளார். இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி  தயாரிப்பில், அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான  ‘சுழல்’ வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வரவேற்பை தொடர்ந்து இவர்களது தயாரிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் வெப் சீரிஸ்  ‘ வதந்தி’. எஸ்.ஜே.சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த வெப் சீரிஸை முன்னதாக லீலை தொடரை இயக்கி இருந்த ஆன்ட்ரியூ லூயிஸ் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த வெப் சீரிஸில் லைலா, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த தொடரின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. 

                  

இது தொடர்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, “கில்லர் என்ற படத்தை இயக்கவுள்ளேன் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறிய எஸ்.ஜே சூர்யா, கடவுள் அருள் இருந்தால் மீண்டும் அஜித் மற்றும் விஜய் படங்களை இயக்குவேன்” என்று சொன்னார்.

மேலும் பேசிய அவர், “ வதந்தி வெப் தொடர் சர்வதேச அளவில் வெளியாகிறது. இன்று ட்ரெய்லர் வெளியாகிவுள்ளது, அமேசான் ப்ரைமில் இந்த சீரிஸ் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கில்லர் படத்தை இயக்குவதற்காக, அந்த கார் ஒன்றை வாங்கியுள்ளேன்.

அடுத்தடுத்து நிறைய படங்கள் ரிலீஸாகவுள்ளது. 12 ஆம் தேதி அன்று முக்கியமான அறிவிப்பு ஒன்று உள்ளது. இன்னொரு விஷயமும் உள்ளது. பிப்ரவரி மாதத்தில் “பொம்மை” படம் வெளிவரும். இதற்கிடையில் மார்க் ஆண்டனி வரும். பிறகு கில்லர் படத்தின் ஷூட்டிங்கை துவங்கி விடுவேன். 

வதந்தி, ஓடிடியில் வெளியாகிறது. நமது படம் அனைவரிடமும் சேர்கிறது என்பது மகிழ்ச்சியாக உள்ளது. தியேட்டர் ஒரு கண் என்றால், ஓடிடி மற்றொரு கண்.” என்று கூறினார்.

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget