மேலும் அறிய

“சார், நாம குடும்பம்” - வெங்கட் பிரபுவுக்கு சிவகார்த்திகேயன் பதில்

சிவகார்த்திகேயன் குறித்து கங்கை அமரன் பேசியது சர்ச்சையான நிலையில், வெங்கட் பிரபுவின் விளக்கத்துக்கு சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் குறித்து கங்கை அமரன் பேசிய கருத்து சமூக வலைதளங்களில் பேசுபொருளான நிலையில், அதற்கு வெங்கட் பிரபு விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், வெங்கட் பிரபுவின் விளக்கத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார்.

பராசக்தி திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சைன்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படத்தில் நடிக்க இருந்தார். வெங்கட் பிரபு இந்த தகவலை அவரே பல முறை உறுதிபடுத்தி இருந்தார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருந்தது. ஆனால் இந்த படம் கைவிடப்பட்டதாக சமீபத்தில் தெரியவந்தது. இதற்கான காரணம் குறித்து பல்வேறு காரணங்கள் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக சமீபத்தில் வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் சிவகார்த்திகேயன் தனது மகனை தவிர்த்ததால் அந்த படத்தை அவர் இயக்கவில்லை என்று தெரிவித்தது பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

கங்கை அமரன் சொன்னது என்ன?

இதற்கிடையே கங்கை அமரன் அளித்த பேட்டி ஒன்றில், கங்கை அமரன், வெங்கட் பிரபு ஒரு முன்னணி நடிகரை வைத்து படம் இயக்கத் திட்டமிட்டிருந்ததாகவும், அந்த நடிகர் முதலில் கால்ஷீட் கொடுத்துவிட்டு பின்னர் வேறு படங்களில் நடிக்கச் சென்றதாகவும் கூறியிருந்தார். மேலும், அந்த நடிகர் வெங்கட் பிரபுவை தவிர்ப்பதாகத் தெரிந்ததால், அவரை வைத்து படம் எடுக்க வேண்டாம் என வெங்கட் பிரபுவிடம் தான் கூறியதாகவும் கங்கை அமரன் தெரிவித்திருந்தார். அவரது பேச்சு பெரியளவில் பேசுபொருளாகவே இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்தார் 

வெங்கட் பிரபு விளக்கம் 

சிவகார்த்திகேயனுக்கும் தனக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை என்றும், அவர் தனக்கு நெருக்கமானவர் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

சிவகார்த்திகேயன் பதில் 

இதற்கு பதிலளித்துள்ள சிவகார்த்திகேயன், “சார், நாம குடும்பம். இதற்குப் போய் நீங்கள் சீரியஸாக பதில் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்!” என தெரிவித்துள்ளார்.

மேலும், “உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சார். உங்களுடைய அடுத்த படத்துக்கும் எனது வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, “சார், இதை நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன். நான் எப்போதும் வெங்கட் பிரபுவின் ரசிகனாக இருப்பேன். விரைவில் உங்களுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்” என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

 

 

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
இன்னும் 50 நாள்தான்..! Avengers Doomsday படத்தின் புது ட்ரெயிலர் ரிலீஸ்! இப்பவே புல்லரிக்குதே
இன்னும் 50 நாள்தான்..! Avengers Doomsday படத்தின் புது ட்ரெயிலர் ரிலீஸ்! இப்பவே புல்லரிக்குதே
ரூ.413 கோடி வியாபாரம்.. ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் படங்களால் மாஸ் காட்டும் RKFI!
ரூ.413 கோடி வியாபாரம்.. ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் படங்களால் மாஸ் காட்டும் RKFI!
யோகி பாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’ நவம்பர் 27ஆம் தேதி ரிலீஸ்!
யோகி பாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’ நவம்பர் 27ஆம் தேதி ரிலீஸ்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’பாஜக அமைச்சரவையில் இணையும் திமுக?’ இரண்டு மத்திய அமைச்சர்களை பெற பேச்சுவார்த்தை !
’சிகப்பு கம்பளம் விரித்த பாஜக’ மத்திய அமைச்சரவையில் இணைகிறதா திமுக?
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
Holiday: தீபாவளி மறுநாள் விடுமுறை? எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! அரசின் முடிவு என்ன?
விவசாயிகள் கவனத்திற்கு: குறைந்த கட்டணத்தில் நெற்பயிர் காப்பீடு செய்வது எப்படி?
விவசாயிகள் கவனத்திற்கு: குறைந்த கட்டணத்தில் நெற்பயிர் காப்பீடு செய்வது எப்படி?
Jio IPO: அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
Chennai Power Cut: சென்னையில் நாளை (29-10-2026) எந்தெந்த பகுதிகளில் பவர் கட்? எத்தனை மணிநேரம்?
Chennai Power Cut: சென்னையில் நாளை (29-10-2026) எந்தெந்த பகுதிகளில் பவர் கட்? எத்தனை மணிநேரம்?
DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
Embed widget