மேலும் அறிய

Sivakarthikeyan: எம்ஜிஆர் வரிசையில் எஸ்.கே... யூடியூபர்களை கலாய்த்த சிவகார்த்திகேயன்!

அயலான் படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களை கலாய்த்து தள்ளியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. நேற்று சென்னையில் நடைபெற்ற அயலான் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், யூடியூப் சேனல்களை கலாய்த்து பேசியது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அயலான்

‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமாரின் இரண்டாம் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் அயலான். சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஆர்.டி.ராஜாவும் கொட்டபாடி ராஜேஷும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள். அடுத்த ஆண்டு பொங்கலன்று அயலான் படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று அயலான் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது . நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத், படத்தின் இயக்குநர் ரவிகுமார் மற்றும் படக்குழுவினர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

சிவகார்த்திகேயன் பேச்சு

ஏலியன் ஃபேண்டஸி படமாக உருவாகி இருக்கும் அயலான் திரைப்படத்தின டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் கலகலப்பான பதில்களை சொன்னார்.  “சைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களுக்கு  நான் ஒரு மிகப்பெரிய ரசிகன். தமிழில் இந்த மாதிரியான ஒரு படம் வரவேண்டும் என்று நான் எப்போதும் எதிர்பாத்தேன் ஆனால் இப்போது நானே ஒரு சைன்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் நடிப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதற்கு ரசிகர்களுக்கும் மற்றும் படத்தின் இயக்குநரான ரவிக்குமார் அவர்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும்" என்றார்.

யூடியூபர்களை கலாய்த்த எஸ்.கே

தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன் “ இந்தப் படத்தின் கதையை என்னிடம் இயக்குநர் சொன்னபோது, தமிழ் சினிமாவில் இந்த மாதிரியான முயற்சியை யாருமே செய்ததில்லை எம்.ஜி. ஆர் மட்டுமே இந்த மாதிரியான ஒரு முயற்சி செய்திருக்கிறார். அதற்கு பிறகு ஏலியன் படத்தில் நான் தான் நடித்திருக்கிறேன். யூடியூபர்கள் உடனே எம்.ஜி ஆருக்கு பிறகு நான் தான் என்று சிவகார்த்திகேயன் சொன்னார்னு போட்டுவிடாதீர்கள்” என்று கலாய்த்தார்.

இந்நிலையில்,  யூடியூபர்கள் தங்களது சேனல்களில் இந்த தலைப்பின் கீழ சிவகார்த்திகேயனின் வீடியோவை பதிவிட்டுள்ளார்கள். சிவகார்த்திகேயனின் இந்தப் பேச்சு இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் 21

ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் எஸ்.கே 21 படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிஸியாக இருந்து வருகிறார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை இயக்குகிறார்.


மேலும் படிக்க: Leo Trailer: "விஜய் பேசுறதால எல்லாரும் பேசப்போறது இல்ல" லியோ ஆபாச வார்த்தை விவகாரத்தில் சீமான் கருத்து

Ayalaan Director: ஒரு வரியை நம்பினார் சிவகார்த்திகேயன்.. 8 ஆண்டுகால காத்திருப்பு பற்றி அயலான் இயக்குநர் ரவிக்குமார்!

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
Embed widget