மேலும் அறிய

Sivakarthikeyan : 17 வயசுல நொறுங்கி போயிட்டேன்..அப்பாவைப் பற்றி பேசி கண் கலங்கிய சிவகார்த்திகேயன்

அமரன் படத்தின் வெற்றிவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது தந்தையைப் பற்றி பேசியபோது மேடையின் கண் கலங்கியது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது

அமரன் வெற்றி விழா

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அமரன் படத்தின் வெற்றிவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது தந்தையைப் பற்றி உருக்கமாஅக் பேசினார்

அப்பாவைப் பற்றி சிவகார்த்திகேயன்

" இந்த படத்தை சரியாக பண்ணி முடிக்க வேண்டும் என்று நினைத்ததற்கு காரணம் என் தந்தைதான். சிறைத் துறையில் அப்பாவைப் பற்றி கேட்டார் தெரியும். என் அப்பா ஒரு நாள் லீவு எடுத்து நான் பார்த்தது இல்லை. மேஜர் முகுந்திற்கும் என் அப்பாவிற்கு நிறைய ஒற்றுமைகள் இருக்கு. மேஜர் முகுந்த் போலவே என் அப்பா லீவுக்கு வீட்டிற்கு வருவதாக சொல்லியிருந்தார். அடுத்த நாள் காலேஜ் முடித்து வீட்டிற்கு சென்றபோது கூட்டமாக இருந்தது. என் அப்பா இறந்தது தெரிந்தது. சங்கு எல்லாம் முடிந்து என் அப்பாவின் நொறுங்கிய எலும்புகளைப் பார்த்தேன். அன்று நொறுங்கியது எலும்பு மட்டும் இல்லை 17 வயது பையனின் இதயமும்தான். அடுத்து நான் என்ன செய்யப்போகிறேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் அந்த உடைந்து போன எலும்புகளை ஒட்டிவைத்து என் அம்மாவையும் அக்காவையும் பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தேன். இன்று அமரன் படத்தைப் பார்த்து முதலமைச்சர் துணை முதலமைச்சர் எல்லாம் பாராட்டுகிறார்கள். நீங்க எல்லாரும் பாராட்டினீர்கள். நீங்கள் எல்லாரும் சேர்ந்து நொறுங்கிப்போன என்னை ஒட்டி வைத்து இந்த இடத்தில் நிறுத்தி இருக்கிறீர்கள். இன்று நான் இங்கே சிவகார்த்திகேயனாக நிற்கவில்லை.ஜி தாஸ் என்கிற ஒரு சின்சியரான போலீஸ் ஆஃபிஸரின் மகனாக நிற்கிறேன்.  

ஏன் அப்பாவைப் பற்றி பேசினால் அழுதுவிடுகிறேன் என்று என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அந்த வலி இன்னமும் என்னை விட்டு போகவில்லை. எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். என் அப்பாவாக தான் அவர்களை பார்க்கிறார்கள். இந்த படத்தில் இந்து மாதிரி தான் என் அம்மா. அவருக்கு அவ்வளவு தைரியம் இல்லை. அவர் வெறும் 8 ஆவத் தான் படித்திருந்தார். என் அப்பாவுக்கு ஜனாதிபதி கையில் விருது கொடுத்தார்கள். என் அம்மாதான் அதை பெற்றுக்கொண்டார். நான் அதை தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்தேன். இந்த படமும் என் படமும் சேம் லைஃப்.

என் அப்பாவைப் பற்றி ஒரு பையோபிக் எடுக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் என் அப்பாவைப் பற்றி பேச நான் இந்த இடத்தில் இருக்கிறேன். அதுவே எனக்கு போதும். என் அப்பா எங்கேயும் போகல . இந்த கைதட்டல்களுக்கு மத்தியில் தான் அவர் இருக்கிறார்.

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: மிடில் கிளாஸ் பேமிலிக்கு குட் நியூஸ்; கான்கிரீட் வீடு திட்டத்திற்கு மானியம் ரூ.5 லட்சமாக உயர்வு - அமைச்சர் மரிய வில்சன்
மிடில் கிளாஸ் பேமிலிக்கு குட் நியூஸ்; கான்கிரீட் வீடு திட்டத்திற்கு மானியம் ரூ.5 லட்சமாக உயர்வு - அமைச்சர் மரிய வில்சன்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
Embed widget