மேலும் அறிய

Ayalaan 2: அயலான் 2ஆம் பாகத்திற்கு வெயிட்டிங்.. சிவகார்த்திகேயன் பரிசளித்த ஐஃபோன்.. இயக்குநர் பகிர்ந்த சுவாரஸ்யம்!

Ayalaan: ரகுல் ப்ரீத், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அயலான்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் (Ayalaan) திரைப்படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிகுமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அயலான் படத்தின் இசைவெளியீடு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட படக்குழுவினர் அயலான் படம் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள். 

ஏ.அர் ரஹ்மான்

இதுவரை அயலான் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கின்றன. வேற லெவல் சகோ, அயலா அயலா ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. அயலான் படத்தின் இசை நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்காக தான் 5 மடங்கு வேலை செய்ய வேண்டியிருந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் ஹாலிவுட்டில் வெளியான ஃபாஸ்ட் & ஃபியூரியஸ், டிரான்ஃபார்மர்ஸ் மாதிரியான படங்களின் தரத்தில் அயலான் படம் உருவாகியுள்ளதாக ரஹ்மான் தெரிவித்தார்.

அயலான் 2

கடந்த 2016ஆம் ஆண்டு அயலான் படத்தின் அறிவிப்பு வெளியாகியது. பொருளாதார நெருக்கடிகள் மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு  நீண்டு கொண்டே சென்றுள்ளது. மேலும் இந்தப் படத்தின் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளில் எந்த விதமான சமரசமும் செய்துவிடக்கூடாது என்பதனால் தங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டதாக நடிகர் சிவகார்த்திகேயன் கூறியிருந்தார். மேலும் அயலான் இசை நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ரவிகுமார்,  அயலான் படத்திற்கு  நடிகர் சிவகார்த்திகேயன் சம்பளம் வாங்கவில்லை என்றும் கூறினார். மேலும் இந்தப் படத்தை முடிப்பதே தனது நோக்கமாக இருந்ததாகவும், தானும் இந்தப் படத்திற்கு சம்பளம் வாங்கவில்லை என்றும் தெரிவித்தார். அவ்வப்போது தன்னுடைய அன்றாட செலவுகளுக்கு தேவையான பணத்தை மட்டும் தான் கேட்டு பெற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

அயலான் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை  தான்  சிவகார்த்திகேயனிடம் தெரிவித்து ஓகே வாங்கிவிட்டதாகவும், முதல் பாகத்தை மக்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பதை பார்த்துவிட்டு இரண்டாம் பாகத்தை தான் எடுக்க இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் இரண்டாம் பாகத்தை மிகப்பெரிய பட்ஜட்டில் மட்டுமே எடுக்க முடியும் என்றும் முதல் பாகத்தில் வி.எஃப் எக்ஸுக்கு ஆன செலவைவிட  4 மடங்கு அதிகம்  செலவு இரண்டாம் பாகத்திற்கு ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

எங்க பாத்தாலும் கட்சிக்கொடி...இத மட்டும் பண்ணாதீங்க..தனுஷ் முகத்திற்கு நேராக சொன்ன சாய் பல்லவி
எங்க பாத்தாலும் கட்சிக்கொடி...இத மட்டும் பண்ணாதீங்க..தனுஷ் முகத்திற்கு நேராக சொன்ன சாய் பல்லவி
தனுஷைப் பார்த்து பொறாமை பட்டேன்...ஓம் படத்திற்கு மம்மூட்டி கொடுத்த மாஸ் பில்டப்
தனுஷைப் பார்த்து பொறாமை பட்டேன்...ஓம் படத்திற்கு மம்மூட்டி கொடுத்த மாஸ் பில்டப்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 'அறிவு' திரைப்படம்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 'அறிவு' திரைப்படம்
கூகுள் குட்டப்பா இயக்குநரின் அடுத்த படம் பத்து நாள் ராஜா! விரைவில் திரையரங்கில்
கூகுள் குட்டப்பா இயக்குநரின் அடுத்த படம் பத்து நாள் ராஜா! விரைவில் திரையரங்கில்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Embed widget