மேலும் அறிய

பராசக்தி படத்தைத் தொடர்ந்து மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் சுதா கொங்காரா!

பராசக்தி படத்தைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் மற்றொரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.இப்படத்தைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கும் மற்றொரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள கேவிஎன் ப்ரோடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது .

துரோகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சுதா கொங்காரா. விஷ்ணு விஷால் , ஶ்ரீகாந்த் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றாலும் இப்படம் கமர்சியல் வெற்றிபெறவில்லை. 2016 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான இறுதி சுற்று திரைப்படம் சுதா கொங்காராவுக்கு பெரியளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தது. தமிழ் மட்டுமில்லாமல் இந்தியிலும் இப்படம் பெரிய வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்று தமிழ் சினிமாவில் தனித்துவமான ஒரு இயக்குனராக சுதா கொங்காராவை அடையாளம் காட்டியது. 

பராசக்தி

சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். பீரியட் டிராமாவாக உருவாகி வரும் இப்படத்தை டான் பிக்ச்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். அதர்வா , ரவி மோகன் , ஶ்ரீலீலா ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திங்களில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பராசக்தி படத்தின் இரு பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது .  இப்படம் புறநாநூறு என்கிற தலைப்பில் சூர்யா நடிக்க இருந்து பின் சிவகார்த்திகேயனுக்கு கைமாறியது குறிப்பிடத் தக்கது. 

மீண்டும் இணையும் கூட்டணி

சிவகார்த்திகேயனின் கரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் பராசக்தி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் பணியாற்றிய அனுபவம் பிடித்துப்போகவே அவருடன் மற்றொரு படத்தில் இணைய வேண்டும் என்று சுதா கொங்காரா விரும்பியதாகவும் அவர் சொன்ன கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பராசக்தி படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு , டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ஆகிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க இருக்கிறார். இதன்பின் மற்ற பராசகதி போல் மல்டி ஸ்டார்கள் இல்லாமல்  சிவகார்த்திகேயனை வைத்து சோலோவாக ஒரு படத்தை சுதா கொங்காரா இயக்கவிருப்பதாகவும் , விஜயின் ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள கேவிஎன் ப்ரோடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget