மேலும் அறிய

சிவாஜி குடும்பத்தில் சொத்துப் பிரச்னை: பிரபு மற்றும் அண்ணன் ராம்குமார் மீது சகோதரிகள் வழக்கு!

பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஜோடிக்கப்பட்ட உயில் தயாரித்து தங்களை ஏமாற்றி விட்டதாக மனுதாக்கல் அவர்களது சகோதரிகள் செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இன்றும் தொடர்பவர் செவலியே சிவாஜி கணேசன். மறைந்தாலும், அவரது நடிப்பு இன்றும் பலரால் கொண்டாடப்படுகிறது. திரை உலகில் மட்டுமல்லாது, நிஜ வாழ்க்கையிலும் சிவாஜி, குடும்ப வாழ்க்கையில் கண்ணியமானவர். அதனால் தான், பல நடிகர்கள் அவரது குடும்பத்தை கண்டு பொறாமைப்படுவர். 

சிவாஜி தயாரிப்பில் வெளியாகும் படங்களில் பணியாற்றுவோர், சிவாஜி வீட்டில் இருந்து வரும் உணவுக்காக தவம் இருப்பர். அந்த அளவிற்கு ருசியான உணவை வழங்குவதில் சிவாஜியின் மனைவி கை தேர்ந்தவர். சிவாஜிக்கு ராம்குமார், பிரபு, சாந்தி, ராஜ்வி என நான்கு குழந்தைகள் உண்டு. அதில் நடிகர் பிரபுவை அனைவருக்கும் தெரியும். சிவாஜி காலத்திலிருந்தே அவர் நடித்து வருகிறார். இன்று பல முக்கிய குணசித்திர பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். 

சிவாஜி குடும்பத்தில் சொத்துப் பிரச்னை: பிரபு மற்றும் அண்ணன் ராம்குமார் மீது சகோதரிகள் வழக்கு!

தயாரிப்பு பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், சமீபத்தில் சில சினிமாக்களில் நடித்தார். அவரது மகனும் சில படங்களில் நடித்தாலும், பெரிய அளவில் அவரால் சொபிக்க முடியவில்லை. சிவாஜியை தொடர்ந்து மூன்று தலைமுறையாக தமிழ் சினிமாவில் அவரது குடும்பம் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. சிவாஜி மறைவுக்குப் பின் அவரது குடும்பத்தை தங்கள் குடும்பமாக பாவிக்கும் எத்தனையோ முன்னணி நட்சத்திரங்கள், இன்றும் அந்த மதிப்பை அவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தான், மறைந்த நடிகர் திலகம் சிவாஜியின் குடும்பத்தில் தற்போது சொத்து பிரச்சனையால் மோதல் வெடித்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சம்பாதித்த சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக அவரது சகோதரிகள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

சிவாஜி குடும்பத்தில் சொத்துப் பிரச்னை: பிரபு மற்றும் அண்ணன் ராம்குமார் மீது சகோதரிகள் வழக்கு!

தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை நடிகர் பிரபு மற்றும் அவரது அண்ணன் ராம்குமார் ஆகியோர் விற்று விட்டதாகவும் , சில சொத்துக்களை அவர்களுடைய மகன்களின் பெயருக்கு மாற்றம் செய்து விட்டதாகவும் சகோதரிகள் சாந்தி மற்றும் ராஜ்வி குற்றம் சாட்டியுள்ளனர். பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஜோடிக்கப்பட்ட உயில் தயாரித்து தங்களை ஏமாற்றி விட்டதாக மனுதாக்கல் செய்துள்ள அவர்கள், நீதிமன்றம் தலையிட்டு தங்களுக்கு உரிமையான சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், போலி ஆவணங்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சகோதரிகள் முன்வைத்திருப்பதால், எது மாதிரி உத்தரவு வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வழக்கமாக சிவில் வழக்குகள் சில ஆண்டுகளை கடக்கும். இது பிரபலங்களின் வழக்காக இருப்பதால், இது தொடர்பான விசாரணை எந்த நிலையில் செல்லும் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டு சுவையாவே இல்ல.. பிரபல நடிகை பகீர் புகார்!
Tirupati Laddu: திருப்பதி லட்டு சுவையாவே இல்ல.. பிரபல நடிகை பகீர் புகார்!
Pawan Kalyan: பவன் கல்யாண் முதலமைச்சராவார் .. ஆந்திராவை அதிர வைத்த பார்த்திபன் பேச்சு!
Pawan Kalyan: பவன் கல்யாண் முதலமைச்சராவார் .. ஆந்திராவை அதிர வைத்த பார்த்திபன் பேச்சு!
Vairamuthu: முதலமைச்சர் என்ற தோரணை இல்லை.. மு.க.ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய வைரமுத்து!
Vairamuthu: முதலமைச்சர் என்ற தோரணை இல்லை.. மு.க.ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய வைரமுத்து!
Oscars 2026: ஆஸ்கர் விருதுகளை போட்டி போட்டு அள்ளிய படங்கள்.. எதற்கு முதலிடம் தெரியுமா?
Oscars 2026: ஆஸ்கர் விருதுகளை போட்டி போட்டு அள்ளிய படங்கள்.. எதற்கு முதலிடம் தெரியுமா?
ABP Premium

வீடியோ

Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
Iran Dubai Airport Attack: துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?
TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?
TVK Alliance : பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.! கூட்டணிக்கு டாடா காட்டிய விஜய்- பரபரப்பு அறிக்கை
பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.!கூட்டணிக்கு டாடா காட்டிய விஜய்- பரபரப்பு அறிக்கை
Netanyahu New Video: என்னாது.! நெதன்யாகுவோட புது வீடியோவும் போலியா.?! மீண்டும் ஆதாரங்களை அடுக்கும் நெட்டிசன்கள்
என்னாது.! நெதன்யாகுவோட புது வீடியோவும் போலியா.?! மீண்டும் ஆதாரங்களை அடுக்கும் நெட்டிசன்கள்
’’மருத்துவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு! 751 பேருக்கு பணி மறுப்பு ஏன்?’’- புள்ளிவிவரங்களை அடுக்கிய அன்புமணி!
’’மருத்துவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு! 751 பேருக்கு பணி மறுப்பு ஏன்?’’- புள்ளிவிவரங்களை அடுக்கிய அன்புமணி!
DMK alliance seat allocation : திமுக பிளானால் திடீர் ட்விஸ்ட்.! தேமுதிக,விசிக, கம்யூனிஸ்ட்க்கு இத்தனை தொகுதிகள் தானா.?
திமுக பிளானால் திடீர் ட்விஸ்ட்.! தேமுதிக,விசிக, கம்யூனிஸ்ட்க்கு இத்தனை தொகுதிகள் தானா.?
kia Carens Clavis: 7 சீட்டர் காரென்ஸ்க்கு ப்ளான் போட்றீங்களா? ஈசியா ஓரங்கட்டும் 5 மாடல்கள் - ஜப்பான் டூ கொரியன் கார்கள்
kia Carens Clavis: 7 சீட்டர் காரென்ஸ்க்கு ப்ளான் போட்றீங்களா? ஈசியா ஓரங்கட்டும் 5 மாடல்கள் - ஜப்பான் டூ கொரியன் கார்கள்
Embed widget