இந்த ஆளுக்கு பெண்கள் க்யூல நிக்குறாங்க...பிரதீப் ரங்கநாதனை வெளுத்த சுசித்ரா
பிரதீப் ரங்கநாதன் படங்களில் இடம்பெறும் காதல் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து பின்னணி பாடகி சுசித்ரா தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

பிரபல பின்னணி பாடகி சுசித்ரா, நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ஜெயா டிவிக்கு அளித்த பேட்டியில், திரைப்படங்களில் சித்தரிக்கப்படும் ‘டாக்சிக் லவ்’ குறித்து பேசிய சுசித்ரா, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதனை விமர்சித்த சுசித்ரா
பிரதீப் ரங்கநாதனின் படங்களில் ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் தொடர்ந்து இடம்பெறுவதாகக் கூறிய சுசித்ரா, இதுபோன்ற கதைக்களங்களை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
“ஆங்கிலப் படங்களில் டாக்சிக் லவ் கதைகள் நிறைய வருகிறது. ஆனால் தமிழில் இது மாதிரியான கதைகள் வருவது ரொம்பக் குறைவு. தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனுடைய படங்களை பார்க்கும்போது, தவறான விஷயங்களையும், ஒரே மாதிரியான கதாபாத்திரங்களையும் உயர்த்திப் பிடிக்கும் படங்களை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்று சுசித்ரா தெரிவித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் தனது திரைப்படங்களில் உணர்வுப்பூர்வமாக மற்றவர்களுடன் நெருக்கமாக இருக்க முடியாத ஒரு நபராகவே தொடர்ந்து தன்னைச் சித்தரித்துக் கொண்டே நடிக்கிறார். ஆனால், அவரின் பின்னால் பொண்ணுங்க கியூவில் நிக்கிற மாதிரி காட்டுவதை பார்க்கும்போது கோபம் வருகிறது” என்று சுசித்ரா கூறியுள்ளார். இப்படி தொடர்ந்து படங்களில் காட்டுவது முற்றிலும் தவறான விஷயம். இது பார்வையாளர்களுக்கு மிகவும் தவறான புரிதலை ஏற்படுத்திவிடும். நாம் இதைவிட சிறந்த மனிதர்களைப் பற்றியும், நல்ல கருத்துகளைப் பற்றியும் பேச வேண்டும். சமுதாயத்திற்கு பயனுள்ள நல்ல கதைகளை உருவாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Suchitra: “I Don’t Like Pradeep Ranganathan’s Films”👀🤨 https://t.co/mdLBcpSjLJ
— Tharani ʀᴛᴋ (@iam_Tharani) October 27, 2026
இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ திரைப்படத்தை இயக்கினார். அதன் பின்னர் ‘லவ் டுடே’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன், அந்தப் படத்தையும் இயக்கினார். தொடர்ந்து ‘டிராகன்’, ‘ட்யூட்’ உள்ளிட்ட படங்களின் மூலம் இளம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















