மேலும் அறிய

Singer Minmini: ரகுமானுக்கு பாடியதால் இளையராஜா வாய்ப்பு வழங்கவில்லையா? - பாடகி மின்மினி கூறியது என்ன?

Singer Minmini: பாடகி மின்மினி இசையமைப்பாளர் இளையராஜா குறித்து கூறியுள்ள தகவல் தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதுமே பாடல்களுக்கு தனி வரவேற்பு கொடுப்பவர்கள். அப்படிப்பட்ட தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க ஒரு பாடகருக்கு சிறந்த பாடல் அமைந்தால் போதும். அதன் பின்னர் அந்த பாடகருக்காவே பாடல்களை ரசிகர்கள் பாடல்களை ”ஹிட்” பாடலாக மாற்றி விடுவார்கள். 

அப்படிபட்ட பாடல்களைப் பாடியவர் தான் பாடகி மின்மினி. இவர் தமிழ் சினிமாவில் 1991ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரை மட்டும் தான் பாடினார். ஆனால் அதற்குள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர். இவரது குரலில், மெதுவா தந்தி அடுச்சானே மச்சானே, அடி பூங்குயிலே பூங்குயிலே, அம்மன் கோவில் வாசலிலே போன்ற பாடல்களைப் பாடியுள்ளார். பாடகி மின்மினி, இளையராஜா, தேவா, வித்யாசாகர், கீரவாணி இசையில் பாடியுள்ளார். 

 ஒருமுறை, இசைஞானி இளையராஜா இசையில் பாடுவதற்காக, பாடகர் மனோவுடன் ஏவிஎம் ஸ்டூடியோவில் தயாராக இருந்ததாகவும், அப்போது அங்கு வந்த இளையராஜா பாடல் பாடுவதற்கான சில அறிவுரைகளை வழங்கினார். அதன் பின்னர் வெளியே சென்றவர், மீண்டும் வந்த போது, “ஏன் மற்றபக்கமெல்லாம் பாடச் செல்கிறீர்கள்? இங்கு பாடுவது மட்டும் போதாதா?” எனவும் கேட்டுள்ளார். அதன் பின்னர், தான் மிகவும் மனமுடைந்து அழுததாகவும் தன்னை பாடகர் மனோதான் சமாதானப்படுத்தியதாகவும் கேரளாவில் உள்ள தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

மேலும் அந்த பேட்டியில்,  1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமான ரோஜா திரைப்படத்தில் ‘சின்னச் சின்ன ஆசை’ பாடலைப் பாடிய பின்னர், இளையராஜா தன்னை பாட அழைக்கவில்லை என கூறியுள்ளார். அவர் என்னை அழைக்காதற்கு அதுதான் காரணமா எனவும் தெரியவில்லை. மேலும் நான் மற்ற இசையமைப்பாளர்களிடம் பாடியது இளையராஜாவுக்கு தெரியுமா தெரியாதா எனத் தெரியவில்லை எனவும், ஆனால் ரகுமானுக்கு பாடிய பின்னர் தான் இளையராஜா தன்னை பாட அழைக்கவில்லை எனவும் கூறியுள்ளார். 

அதேபோல், நான் இதனை இவ்வளவு நாள் கூறாமல் இருந்ததற்கான காரணம் யாரும் ராஜா சாரை தவராக எண்ணிவிடக்கூடாது என்பது தான். ஆனால், இப்போது நீங்கள் கேட்டதால் தான் கூறினேன் எனவும் கூறியுள்ளார். 

பாடகி மின்மினி, 90களில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பாடினார். 1994ஆம் ஆண்டு வரை பாடிய மின்மினி அதன் பின்னர் தனக்கு இருந்த குரல் பிரச்னையால் பாடாமல் இருந்தார். அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு அமலா பால் நடித்த படத்தில் பாடினார்.

இந்நிலையில் தற்போது பாடகி மின்மினி இசையமைப்பாளர் இளையராஜா குறித்து கூறியுள்ளது, தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget