மேலும் அறிய

Gana Bala Birthday: காசு பணம் துட்டு மணி மணி... இளசுகளுக்கான துள்ளல் மெட்டு! கலக்கிய கானா பாலாவுக்கு பிறந்தநாள்!

இன்று கானா பாலா தனது 53 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் கானாப் பாடல்களை மீண்டும் கொண்டுவந்தவர் கானா பாலா.

தமிழ் சினிமாவில் கானா இசையை மீண்டும்  பிரலமாக்கியதில் கானா பாலா முக்கியமானவர். 2000 காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் கானாப் பாடல்கள் ஆதிக்கம் செலுத்திய காலம். ஒரு படத்தில் ஒரு கானாப் பாடலாவது இருந்தாக வேண்டியக் கட்டாயம் உருவாகியது. இதனை உருவாக்கியவர் இசையமைப்பாளர் தேவா. கவலப்படாதே சகோதரா. வைட்டு லகான் கோழி ஒன்னு கூவுது, என எத்தனையோ சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார் தேவா. தேவாவுக்குப் பின் கானாப் பாடல்கள் தமிழ் சினிமாவில் இருந்து கிட்டதட்ட மறைந்தே விட்டன. அதனை மீட்டுக் கொடுத்தவர் கானா பாலா

கானா பாலா

1971 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி பிறந்தார் கானா பாலா என்கிற பால முருகன். தனது இளமைக் காலத்தில் இருந்தே கானா பாடுவதில் ஆர்வம் கொண்ட பாலா, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கானா குயில் பாட்டு   நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் பரிசை வென்றார். ஒரு பக்கம் கானா பாடல்களைப் பாடிவந்தாலும் மறுபுறம் வழக்கறிஞராக இருந்து வருகிறார் கானா பாலா.

ஆடி போனா ஆவணி

சந்தோஷ் நாராயணன் இசையமைத்த  அட்டகத்தி திரைப்படத்தில்  ‘நடு கடடுல’ மற்றும் ’ஆடி போனா ஆவணி” ஆகிய இரண்டு பாடல்களைப் பாடினார் பாலா. இந்தப் பாடல்கள் தமிழ் சினிமாவில் கானா பாடல்களின் மறுவருகையாக அமைந்தன. இந்த இரு பாடல்களுக்கும் பாடல் வரிகளை எழுதியவர் கபிலன். அதுவரை கவித்துவமான பாடல்களை எழுதிவந்த கபிலனுக்கு இப்படி ஒரு முகம் இருப்பதே யாரும் எதிர்பார்த்திராதது.

ஓரக் கண்ணால

உதயம் என்.எஹ்.4 திரைப்படத்தில் ஜீ.வி பிரகாஷ் குமார் இசையில் ஓரக் கண்ணால என்கிறப் பாடலைப் தானே எழுதி பாடினார் கானா பாலா. இந்தப் பாடல் காட்சியில்  நடித்தும் இருந்தார் கானா பாலா. இந்தப் பாடலுக்குப் பின் திரைப்படங்களில் கானா பாலா வந்து ஒரு பாடலை பாடிவிட்டுச் செல்வது ஒரு ட்ரெண்டாகவே மாறிவிட்டது.

பாலா பாடிய ஹிட் பாடல்கள்

சூது கவ்வும் திரைப்படத்தில் காசு பணம் துட்டு என்று கானா பாலா பாடியப் பாடல் அந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. வாழ்க்க ஒரு குவாட்டர், ஆத்தங்கர ஓரத்து முன்னால, காகிதக் கப்பல் , டோண்ட் வரி எனத் தொடர்ச்சியாக குதுகலமானப் பாடல்களைப் பாடினார் கானா பாலா. 2014 ஆம் ஆண்டில் மட்டுமே கிட்டதட்ட 45 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் கானா பாலா. இன்று தனது 53 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் கானா பாலா. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Embed widget