மேலும் அறிய

Simran on Monal: 'உன்னை மிஸ் பண்றோம் மோனு..' தங்கை நினைவால் தவிக்கும் சிம்ரன்! நடிகை மோனலின் 21ம் ஆண்டு நினைவு நாள்..!

நடிகை சிம்ரன் தங்கை மோனல் இறந்து 21ம் ஆண்டு நினைவு நாளில் ட்விட்டர் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமா எத்தனையோ அக்கா - தங்கை நடிகைகளை பார்த்துள்ளது. அம்பிகா - ராதா, நக்மா - ஜோதிகா, ஊர்வசி - கல்பனா, ஷாலினி - ஷாமிலி, ப்ரீத்தா - ஸ்ரீதேவி என பல பிரபலமான சகோதரிகள் தமிழ் சினிமாவை கலக்கினார். அவர்களின் வரிசையில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு சகோதரிகள் நடிகை சிம்ரன் - மோனல். 

 

Simran on Monal: 'உன்னை மிஸ் பண்றோம் மோனு..' தங்கை நினைவால் தவிக்கும் சிம்ரன்! நடிகை மோனலின் 21ம் ஆண்டு நினைவு நாள்..!

சிம்ரன் தங்கை மோனல்:

90களில் தமிழ் சினிமாவின் டாப் வான்டட் ஹீரோயினாக கலக்கியவர் நடிகை சிம்ரன். அஜித், விஜய், சூர்யா, விக்ரம், மாதவன், விஜயகாந்த், ரஜினி, கமல், அர்ஜுன், முரளி என அனைத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் சிம்ரன். தனது சிறப்பான நடிப்பு, வசீகரமான தோற்றம், அசத்தலான டான்ஸ் என அனைவரையும் இடுப்பழகி சிம்ரன் என கொண்டாட வைத்தவர். ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். 2003ம் ஆண்டு தீபக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருப்பினும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். 

நடிகை சிம்ரனின் தங்கை மோனல் 'பார்வை ஒன்றே போதுமே' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் 'பத்ரி' திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் லவ்லி, சமுத்திரம், விவரமான ஆளு, சார்லி சாப்ளின், பேசாத கண்ணும் பேசுமே உள்ளிட்ட  திரைப்படங்களில் நடித்திருந்தார். 

 

Simran on Monal: 'உன்னை மிஸ் பண்றோம் மோனு..' தங்கை நினைவால் தவிக்கும் சிம்ரன்! நடிகை மோனலின் 21ம் ஆண்டு நினைவு நாள்..!

 

சிம்ரன் உருக்கம்:

இறுதியாக குணால் ஜோடியாக 'பேசாத கண்ணும் பேசுமே' திரைப்படத்தில் நடித்திருந்தார் மோனல். அப்படம் வெளியான சில நாட்களிலேயே மோனல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 2002ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்ட மோனல் இறந்து 21 வருடங்கள் உருண்டோடிவிட்டன. தங்கையின் நினைவாக நடிகை சிம்ரன் தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் தனது அன்பை வெளிப்படுத்தியிருந்தார். நீ இன்று உயிருடன் இல்லை என்றாலும் நாம் என்றும் ஒன்றாக தான் இருக்கிறோம். 21 வருடங்களாக நீ என்னுள் வாழ்ந்துகொண்டு இருக்கிறாய். எப்போதும் உன்னை மிகவும் மிஸ் பண்றோம் மோனு என பதிவிட்டு இருந்தார். மேலும் தங்கை மோனலுடன் இருக்கும் குழந்தை பருவத்து புகைப்படத்தையும், லேட்டஸ்ட் புகைப்படத்தையும் போஸ்ட் செய்துள்ளார். 

காரணம் என்ன?

மோனலின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது மர்மகமாகவே உள்ளது. அவர் இறந்த போது நடிகர் குணாலுடன் காதல். அவர்கள் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டதால் தான் மோனல் தற்கொலை செய்துகொண்டார் என கூறப்பட்டது. ஆனால் அந்த செய்தியை முற்றிலுமாக பொய் என குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார் சிம்ரன். 

ஆனால், மோனலுக்கு டான்ஸ் மாஸ்டர் கலாவின் சகோதரர் பிரசன்னாவுடன் தான் காதல். அவர்களின் காதலுக்கு கலா மாஸ்டர் குடும்பம் சம்மதம் தெரிவிக்காததால் மனமுடைந்து மோனல் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இருப்பினும் உண்மையான காரணம் என்ன என்பது இதுவரையில் மர்மமாகவே உள்ளது. 

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget