Simbu Surprises Isari Ganesh : 'ஐசரி அண்ணனுக்கு பிறந்தநாள்..' : சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து அசத்திய சிம்பு
"பத்து தல" படத்தின் படப்பிடிப்பிற்காக பெல்லேரி சென்றுள்ள நடிகர் சிம்பு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பிறந்தநாளான இன்று பூங்கொத்தும் கேக்கும் சர்ப்ரைஸ் கிஃப்டாக அனுப்பியுள்ளார்.
![Simbu Surprises Isari Ganesh : 'ஐசரி அண்ணனுக்கு பிறந்தநாள்..' : சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து அசத்திய சிம்பு Simbu sends a surprise gift to Isari Ganesh on his birthday today Simbu Surprises Isari Ganesh : 'ஐசரி அண்ணனுக்கு பிறந்தநாள்..' : சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து அசத்திய சிம்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/07/c0ef46579cfded46276628d5867bd8671665160516566224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சிலம்பரசன். தன்னுடைய தனித்துவமான ஸ்டைல் மூலம் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை தன் பின்னால் கொண்டவர். சமீபத்தில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் மிக அதிகமான பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் "வெந்து தணிந்தது காடு". இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டியது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவிற்கு ஒரு காரையும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ஒரு பைக்கையும் பரிசளித்தார்.
சிம்பு அனுப்பிய சர்ப்ரைஸ் கிஃப்ட் :
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பிறந்தநாளான இன்று நடிகர் சிம்பு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் ஒன்றை பரிசளித்துள்ளார். நடிகர் சிம்பு தற்போது "பத்து தல" படத்தின் படப்பிடிப்பிற்காக பெல்லாரி சென்றுள்ளார். ஷூட்டிங் சென்றுள்ள நடிகர் சிம்பு பிஸியாக இருந்தாலும் தன்னுடைய ஃபேவரட் தயாரிப்பாளர் மற்றும் அண்ணன் ஐசரி கணேஷிற்கு ஒரு பூங்கொத்தும் கேக்கும் சர்ப்ரைஸ் கிஃப்டாக அனுப்பியுள்ளார். தனது ட்விட்டர் பக்கம் மூலம் இதை பகிர்ந்து அதனுடன் ஒரு அழகான குறிப்பையும் பகிர்ந்துள்ளார் நடிகர் சிம்பு. ஹேப்பி பர்த்டே சார். உங்களின் பாசிட்டிவிட்டிகாகவும், எதிர்காலத்தில் இருவரும் இணைந்து பணிபுரியும் ப்ராஜெக்ட்டுக்கு வாழ்த்துக்கள்.
Atman @SilambarasanTR_ wished his Blockbuster #VTK Producer @IshariKGanesh Sir a Happy Birthday and thanked him for all the positivity and wished for future collaborations.
— Rajasekar (@sekartweets) October 7, 2022
As #SilambarasanTR is shooting for #PathuThala in Bellary, he sent a Cake and a Bouquet. @teamaimpr pic.twitter.com/cGb0HDwMkX
மும்மரமாக நடைபெறும் பத்து தல படத்தின் படப்பிடிப்பு :
'சில்லுன்னு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபிலி கிருஷ்ணா நடிகர் சிம்புவை வைத்து இயக்கி வரும் திரைப்படம் "பத்து தல". பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், மலையாள நடிகை அனு சித்தாரா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். இப்படத்தின் படப்பிடிப்பு பெல்லாரியில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. 15 நாட்களுக்கு அங்கு படப்பிடிப்பு நடைபெறும் என அறிவித்துள்ளனர் படக்குழுவினர். டிசம்பர் 14ம் தேதி இப்படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
#PathuThala Update⭐
— instant cine update (@icupdate22) October 7, 2022
• Shoot Starts Today At Bellary💥
• Shoot Planned For 15 Days & Wrap👏🏽
• #PBS - #GauthamKarthik & #Kalai Also Being Part Of The Shoot🔥
• Theatrical Release On DEC 14😎#SilambarasanTR | #ARRahman | #GVM pic.twitter.com/Idi4Pq08Yr
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)