மேலும் அறிய

HBD Simbu | ஓவர் கான்பிடன்ஸ் வேணும்டா.. கம்பேக்குகளின் ஃபாதர்.. சிம்பு பருந்தான கதை.. !

‘மன்மதன்’ திரைப்படம் அவரது கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. அந்தப்படம் சிம்புவை சின்னப்பையன் என நினைத்த பலருக்கு, பையனுக்கு விஷயம் தெரியும் போலேயிருக்கே என்று கவனிக்க வைத்தது.

 “ வாழ்கையில யாரு ஃபர்ஸ்ட் போறாங்க அப்படிங்கிறது முக்கியமில்ல.. லாஸ்ட் யாரு ஃபர்ஸ்ட் வர்றாங்க அப்படிங்கிறதுதான் முக்கியம்.. வர்றேன்” கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ‘மன்மதன்’ படத்தில் சிலம்பரசன் பேசிய வசனம் இது. அந்த வசனம் 2022 லும் கூட சிம்புவிற்கு கனகச்சிதமாக பொருந்தி நிற்கிறது. 

HBD Simbu | ஓவர் கான்பிடன்ஸ் வேணும்டா.. கம்பேக்குகளின் ஃபாதர்.. சிம்பு பருந்தான கதை.. !

போட்டி நிறைந்த சினிமா உலகில் குறைந்தது 10 வருடங்கள் தாக்குபிடித்தாலே பெரிய விஷயம் என்ற மனநிலையில் ஓடும் கதாநாயகர்கள் மத்தியில், எத்தனை வருட இடைவெளிக்கு பின்னர் தன்னால் ஜெயிக்க முடியும் என்று சொன்னதோடு, அதனை மாநாடு படத்தின் மூலம்
சாத்தியப்படுத்தியும் காண்பித்திருக்கிறார் ‘ஆத்மன்’ சிலம்பரசன். 

காதல் தோல்விகள் கொடுத்த பக்குவம், சர்ச்சைகள் கொடுத்த தெளிவு, திறமை கொடுத்திருக்கும் தன்னம்பிக்கை, ஆன்மீகம் கொடுத்த வாழ்கை பாதை என வேறு பரிணாமத்தில் நின்று கொண்டிருக்கும் சிம்புவிற்கு இன்று 38 ஆவது பிறந்தநாள். 

HBD Simbu | ஓவர் கான்பிடன்ஸ் வேணும்டா.. கம்பேக்குகளின் ஃபாதர்.. சிம்பு பருந்தான கதை.. !

மகன் பெரிய ஸ்டாராக வளரவேண்டும் என ஆசைப்பட்ட தந்தை டி.ஆர். அதற்கான அடித்தளத்தை சிலம்பரசனின் சிறுவயதிலே அவருக்கு அமைத்துக்கொடுத்தார். 2 வயதிலேயே டி.ஆரின் 'உறவைக் காத்த கிளி'  படத்தில் அறிமுகமான சிம்பு, குழந்தை நட்சத்திரமாக 12 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். 2002 ஆம் ஆண்டு அப்பாவின் இயக்கத்தில்  ‘காதல் அழிவதில்லை’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் சிம்பு. டான்ஸில் பட்டையை கிளம்பினாலும், நடிப்பில் அப்பாவின் சாயால் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதனை தொடர்ந்து இவர் நடித்த  ‘தம்’ ‘குத்து’ படங்கள் அவருக்கு வணிக ரீதியான வெற்றியைக் கொடுத்து, ஆக்சன் ஹூரோ பட்டியலில் இணைய வைத்தது.

HBD Simbu | ஓவர் கான்பிடன்ஸ் வேணும்டா.. கம்பேக்குகளின் ஃபாதர்.. சிம்பு பருந்தான கதை.. !

அதன் பின்னர் இயக்குநர் ஹரியுடன் கோவில் படத்தில் இணைந்தார் சிம்பு. முன்னிரண்டு படங்களில் ஆக்சனில் மாஸ் காட்டிய சிம்பு, இதில் சக்திவேல் கதாபாத்திரத்தில் காட்டிய மென்மை அனைவரையும் ஈர்த்தது. அதன் பின்னர் இவர் கதை, திரைக்கதை எழுதிய ‘மன்மதன்’திரைப்படம் அவரது கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. சிம்புவை சின்னப்பையன் என நினைத்த பலருக்கு, பையனுக்கு விஷயம் தெரியும் போலேயிருக்கே என்று கவனிக்க வைத்தது என்று கூட சொல்லலாம். 

HBD Simbu | ஓவர் கான்பிடன்ஸ் வேணும்டா.. கம்பேக்குகளின் ஃபாதர்.. சிம்பு பருந்தான கதை.. !

அதன் பின்னர்  ‘தொட்டி ஜெயா’,  ‘சரவணா’ உள்ளிட்ட  படங்களில் நடித்து கவனம் ஈர்த்த சிலம்பரசன்  “வல்லவன்” படத்தில் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படம் படு தோல்வியை சந்தித்தது. இந்தப் படத்தில் நடிகை நயன்தாராவுடன் காதலில் விழுந்த சிம்பு, பின்னர் நிகழ்ந்த பிரச்னைகள் காரணமாக அவரை விட்டு பிரிந்தார். அதன்பின்னர் இவர் ஆரம்பித்த கெட்டவன் படமும் கிடப்பில் போடப்பட்டது.

HBD Simbu | ஓவர் கான்பிடன்ஸ் வேணும்டா.. கம்பேக்குகளின் ஃபாதர்.. சிம்பு பருந்தான கதை.. !

சிலம்பரசனின் சினிமா கிராப்பில் சற்று சறுக்கல் வந்த நிலையில், வழக்கம் போல அவரை விமர்சனங்கள் வசைப்பாடின. ஆனால் இதற்கெல்லாம் சேர்த்து வைத்து அதற்கடுத்து வந்த  ‘சிலம்பாட்டம்’ படத்தில் தன்னுடைய பதிலை வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்தார் சிம்பு. 

அதன் பின்னர் கெளதம் மேனன் இயக்கத்தில்  ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் இணைந்தார். சிம்புவின் கேரியரில் மிக முக்கியமான படம்.  ஒரு இயக்குநருக்கான ஏக்கம், த்ரிஷாவுடனான காதல், பில்டப் காட்டாத வசனங்கள் என வேறு பரிணாமத்தில் வந்த கார்த்தியை சிம்புவை பிடிக்காதவர்களும் ரசித்தனர்.

'
HBD Simbu | ஓவர் கான்பிடன்ஸ் வேணும்டா.. கம்பேக்குகளின் ஃபாதர்.. சிம்பு பருந்தான கதை.. !

அதன்பின்னர் வந்த ‘வானம்’ பெரிய அளவுக்கான கவனம் கொடுக்காத நிலையில், அடுத்த வந்த ஒஸ்தி அட்டர் ப்ளாப்பாக அமைந்து போனது. அதன் பிறகு வந்த படங்கள் பெரிய அளவிலான எதுவும் பேர் சொல்லும் வெற்றியை கொடுக்க வில்லை. 
அதனைத் தொடர்ந்து வந்த,  ‘போடா போடி’ ‘அச்சம் என்பது மடமையாடா’ படங்கள் கவனம் ஈர்த்தாலும், சிம்பு எதிர்பார்த்த வெற்றியை கொடுத்ததா என்றால்.. இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இதற்கிடையில் முளைத்த ஹன்சிகாவுடனான காதலும் முறிந்து போக, உடல் எடை ஏறிய சிம்பு  ‘அவரா இவரு’ என்ற கேள்வியை கேட்க வைத்து விட்டார். இதற்கடுத்த படியாக வந்த  'ஏஏஏ' படமும் அட்டர் ப்ளாப்பாக அமைந்து விட, அப்பட  தயாரிப்பாளரால் சந்தித்த பிரச்னைகள் சிம்புவிற்கு அடுத்தடுத்து வந்த படங்களில் பெரும் தலைவலியாக அமைந்து போனது. 

HBD Simbu | ஓவர் கான்பிடன்ஸ் வேணும்டா.. கம்பேக்குகளின் ஃபாதர்.. சிம்பு பருந்தான கதை.. !

அப்படியே ஏகப்பட்ட விமர்சனங்களோடு மணிரத்னத்துடன் கைகோர்த்தார். ஆனால் அது சிம்புவின் படக்கணக்கில் வராது. காரணம் ஒரு கலைஞனாக சிம்புவை சினிமா பார்க்கும் தளம் என்பதுஇ வேறானது. இவையெல்லாவற்றிற்கும் முடிவுகட்ட நினைத்த சிம்பு கடுமையான உடற்பயிற்சியில் இறங்கினார். கொரோனா ஊரடங்கில் மீண்டும் மன்மதன் சிம்புவாக மாறிய சிலம்பரசன்  “ ஈஸ்வரன்” படத்தில் ரி எண்ட்ரீ கொடுத்தாலும், அவரது உண்மையான கம்பேக் அண்மையில் வெளிவந்த மாநாடு படம்தான் என்று சொல்ல வேண்டும். 

HBD Simbu | ஓவர் கான்பிடன்ஸ் வேணும்டா.. கம்பேக்குகளின் ஃபாதர்.. சிம்பு பருந்தான கதை.. !

வாழ்கை கொடுத்த பாடங்களின் வழியே ஆத்மன் சிலம்பரசனாக தோன்றிய சிம்பு, காட்சிக்கு காட்சி தன் மீது வைத்த விமர்சனங்களையெல்லாம் தவிடு பொடியாக்கினார். செக்க சிவந்த வானத்தில் ஓட முடியாமல் கஷ்டப்பட்டவர், மாநாடு படத்தில் கேமாராவை காரில் ஓட வைக்கும் அளவுக்கு மாறி ஆச்சரியமளித்தார். அதுதான் அவரது தன்னபிக்கையின் பலம். 

அவரது வாழ்க்கையில் பலவை மாறின.. சிலவை வந்தன போனன.. ஆனால், அவரது ரசிகர்கள் மட்டும் அன்றும் சரி இன்றும் சரி.. அவருக்கான அன்பை கொடுத்துக்கொண்டேதான் இருக்கின்றன.... அந்த அன்பு இருக்கிற வரைக்கும் சிம்பு இன்னும் எத்தனை பரிணாமங்களை வேண்டுமானும் எடுப்பார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Embed widget