மேலும் அறிய
Advertisement
Siddharth dating Aditi : சித்தார்த்துக்கும், அதிதி ராவுக்கும் காதலா? கன்ஃபார்ம் செய்யுமாறு ரெக்வெஸ்ட் கொடுக்கும் நெட்டிசன்கள்..
நடிகர் சித்தார்த்தும் அதிதி ராவ் ஹைதாரியும் ஆகிய இருவரும் டேட்டிங் செய்து வருவதாக வதந்திகள் பரவி வருகிறது.
திரையுலகில் பல படங்களில் நடித்து தற்போது பல சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சித்தார்த். தமிழ் மட்டுமின்றி தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
துணிச்சலான சித்தார்த்
சமீபத்தில் சித்தார்த் சமூக பிரச்சனை ஒன்றுக்கு எதிராக தனது கருத்தை மிகவும் துணிச்சலாக குரல் கொடுத்து பெரும் சர்ச்சையில் சிக்கினார். அது திரையுலகில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. சித்தார்த் எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.
வதந்தி உண்மையா?
பல கசப்பான அனுபவங்களுக்கு பிறகு சித்தார்த் மீண்டும் ஒரு பிரபலமான ஹீரோயினோடு டேட்டிங் செய்து வருகிறார் என்று வதந்திகள் பரவி வருகின்றன. அஜய் பூபதியின் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான மகா சமுத்திரம் படத்தில் சித்தார்த்துடன் ஜோடியாக நடித்தவர் அதிதி ராவ் ஹைதாரி. இவர் செக்க சிவந்த வானம், காற்று வெளியிடை போன்ற படங்களில் நடித்தவர். மகா சமுத்திரம் படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது என்று பேசப்படுகிறது. இருவரும் டேட்டிங் செய்து வருவதாக காட்டுத்தீ போல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவின. ஆனால் இதுவரையில் அவர்கள் இருவரும் இதை பற்றி வெளிப்படையாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

சலூனில் ஜோடி
சமீபத்தில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் மும்பையில் உள்ள ஒரு சலூனில் இருந்து வெளிவரும் வீடியோ ஒன்று நெட்டிசன்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இந்த பரபரப்பை ஏற்படுத்திய டேட்டிங் வீடியோ வதந்தியை ஊதி பெரிதாகியுள்ளது. இருவரும் சலூனை விட்டு வெளியே வந்த போது, அங்கிருந்த புகைப்பட கலைஞர் அவர்களை புகைப்படம் எடுக்க முற்பட்டார். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. மேலும் அந்த புகைப்பட கலைஞரை கடுமையாக கண்டித்துள்ளார். "நான் மிகவும் பொறுமையாக கூறுகிறேன். இதில் எங்களுக்கு விருப்பமில்லை" என்றுள்ளார் சித்தார்த்.
சித்தார்த்தும், அதிதியும் பொதுவான ஒரு இடத்தில் சந்தித்தது இதுவே முதல் முறை என்பதால் அவர்களின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் அவர்களை மகா சமுத்திரம் படத்தில் பார்த்தது போல ஜோடியாக பார்க்க விரும்பினார்.
கடந்த ஏப்ரல் மாதம் தனது பிறந்தநாளை கொண்டாடிய சித்தார்த்திற்கு தனது இதயப்பூர்வமான வாழ்த்து ஒன்றை குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார். அதில் சித்தார்த் எப்போதும் போல் கனவுகள் துரத்த வேண்டும் மற்றும் எப்போதும் போல் பைத்தியமாகவும், சிரிப்புடனும் இருக்க வேண்டும். இப்பொழுது போல் எப்போதும் இருக்க வேண்டும். நீ மிகவும் நெசமானவன் என்று தனது கைப்பட இந்த குறிப்பை எழுதியுள்ளார் அதிதி.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion