Shoba Chandrasekhar: எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்க்கு போட்டியாக களமிறங்கிய ஷோபா.. என்ன செய்தார் தெரியுமா?
விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் பற்றி சொல்லவே வேண்டாம். பாடகி, தயாரிப்பாளர், இயக்குநர் என பல திறமைகளை கொண்டவர்.
![Shoba Chandrasekhar: எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்க்கு போட்டியாக களமிறங்கிய ஷோபா.. என்ன செய்தார் தெரியுமா? Shoba Chandrasekhar Reels video trending on social media Shoba Chandrasekhar: எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்க்கு போட்டியாக களமிறங்கிய ஷோபா.. என்ன செய்தார் தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/03/6d937ce41c848b09f3f7d642c2b134971704252496979572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர், தனது மருமகளுடன் செய்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். ரசிகர்களால் அன்போடு தளபதி என அழைக்கப்படும் விஜய் அடுத்ததாக அரசியலிலும் அடியெடுத்து வைக்க உள்ளார். கடைசியாக விஜய் நடிப்பில் “லியோ” படம் வெளியாகியிருந்த நிலையில், இதனையடுத்து இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து G.O.A.T என்ற படத்தில் நடித்து வருகிறார். இரட்டை வேடங்களில் நடிக்கும் விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் புத்தாண்டை முன்னிட்டு சில தினங்களுக்கு முன் வெளியானது.
இதனிடையே விஜய்யின் அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகரும் தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் புரட்சிகரமான இயக்குநராக வலம் வந்தார். ரஜினி, விஜயகாந்த், விஜய், சூர்யா என பலரையும் வைத்து படம் எடுத்த எஸ்.ஏ.சி., தற்போது நடிகராகவும் அசத்தி வருகிறார். கொடி, மாநாடு என பல படங்களிலும் அவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் சீரியலில் நடித்து வருகிறார்.
அதேசமயம் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் பற்றி சொல்லவே வேண்டாம். பாடகி, தயாரிப்பாளர், இயக்குநர் என பல திறமைகளை கொண்டவர். விஜய் நடித்த பல படங்களில் பாடியுள்ளார். அவர் தற்போது கடந்த சில மாதங்களாகவே தனது மருமகள்களுடன் சேர்ந்து டிக்டாக் வீடியோகளை பதிவிட்டு வருகிறார். தற்போது ஷோபா புத்தாண்டை கொண்டாட தனது கணவர் எஸ்.ஏ.சந்திரசேகருடன் சேர்ந்து துபாய் சென்றுள்ளார். அங்கு அவர்கள் இருவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் பல்லவி வினோத்குமார்.
View this post on Instagram
இப்படியான நிலையில் அங்கிருந்து ஷோபாவுடன் எடுத்த ரீல்ஸ் வீடியோக்களை பல்லவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிருந்து வருகிறார். இப்படியான நிலையில் மீண்டும் ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ‘அம்மா நான் ஸ்கூல் போல’ என சமீபத்தில் ட்ரெண்டான பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த இணையவாசிகள் ஆக மொத்தம் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்க்கு இணையாக ஷோபாவும் நடிப்பு திறமையை வெளிக்காட்ட தொடங்கி விட்டார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)