மேலும் அறிய

Blue Star: ”உங்க வீட்டு பிள்ளைங்க ஜெயிக்கிற படம்.. கண்டிப்பா பாருங்க” - ப்ளூ ஸ்டார் பற்றி சாந்தனு உருக்கம்!

இயக்குநர், நடிகர் கே.பாக்யராஜின் மகன் என்ற அடையாளத்தோடு அவரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் சாந்தனு. அதன்பிறகு 2008 ஆம் ஆண்டு வெளியான சக்கரகட்டி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு ப்ளூ ஸ்டார் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் அதில் நடித்துள்ள நடிகர் சாந்தனு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு இன்று வெளியாகியுள்ள படம் “ப்ளூ ஸ்டார்”. ஜெயக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், ப்ரித்வி பாண்டியராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் விளையாட்டில் இருக்கும் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதில் ரஞ்சித் என்ற கேரக்டரில் அசோக் செல்வனும், ராஜேஷ் என்ற கேரக்டரில் சாந்தனுவும் நடித்துள்ளனர். 

இந்த படம் முன்னதாக பலமுறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு ஒருவழியாக இன்று ரிலீசாகியுள்ளது. மேலும் இப்படத்தின்போது தான் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இருவரும் காதலிக்க தொடங்கி படம் வெளிவருவதற்குள் கல்யாணம் செய்து கொண்டனர். தம்பதிகளாக அவர்களின் முதல் படம் வெளியாகவுள்ளதும் ப்ளூ ஸ்டார் படம் மீது எதிர்பார்ப்பு அதிகரிக்க காரணங்களில் ஒன்றாக உள்ளது. இப்படியான நிலையில் நடிகர் சாந்தனு எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், “நான் நடித்த சக்கரகட்டி படம் முதல் ப்ளூ ஸ்டார் படம் வரையிலான இந்த சினிமா பயணம் எனக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. இது எனக்கு பல்வேறு விதமான உணர்வுகளை எனக்கு கொடுத்துள்ளது. மேலும் வாழ்க்கையில் பல மறக்க முடியாத நினைவுகளையும் கொடுத்துள்ளது. இனி எப்போதும் பாசிட்டிவிட்டி மட்டும் தான். ப்ளூ ஸ்டார் உங்க வீட்டு பசங்க ஜெய்க்கிற படம். இன்று முதல் தியேட்டரில் வெளியாகிறது. கண்டிப்பாக பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு படம் பிடிக்கும். ஜெய்க்கிறோம்” என தெரிவித்துள்ளார். 

வெற்றிக்காக காத்திருக்கும் சாந்தனு 

இயக்குநர், நடிகர் கே.பாக்யராஜின் மகன் என்ற அடையாளத்தோடு அவரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் சாந்தனு. அதன்பிறகு 2008 ஆம் ஆண்டு வெளியான சக்கரகட்டி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சித்து பிளஸ் 2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி, கோடிட்ட இடங்களை நிரப்புக, வானம் கொட்டட்டும்  என பல படங்களில் நடித்தாலும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி என்பது அமையவே இல்லை. விஜய் நடித்த மாஸ்டர் படம் தனக்கு திருப்புமுனையாக இருக்கும் என மிகவும் எதிர்பார்த்த அவருக்கு, படத்தின் நீளம் காரணமாக சாந்தனு நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தார். இந்த நிலையில் தான்  2024 ஆம் ஆண்டு தனக்கு நல்ல ஆண்டாக அமையும் என்ற எதிர்பார்ப்புடன் ப்ளூ ஸ்டார் படத்தை எதிர்நோக்கியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மரண வாக்குமூல கடிதம் எழுதியது யார்? வேறுபடும் ஜெயக்குமார் கையெழுத்து - வழக்கில் புதிய திருப்பம்!
மரண வாக்குமூல கடிதம் எழுதியது யார்? வேறுபடும் ஜெயக்குமார் கையெழுத்து - வழக்கில் புதிய திருப்பம்!
Udyogini scheme: ரூ. 3 லட்சம் கடன்; வட்டியே கிடையாது; பாதி பணம் தள்ளுபடி - உத்யோகினி திட்டம் பற்றி தெரியுமா?
Udyogini scheme: ரூ. 3 லட்சம் கடன்; வட்டியே கிடையாது; பாதி பணம் தள்ளுபடி - உத்யோகினி திட்டம் பற்றி தெரியுமா?
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு. சபரிமலை கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு. சபரிமலை கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
TN Weather: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - அடுத்த 7 தினங்களுக்கான வானிலை அப்டேட்!
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - அடுத்த 7 தினங்களுக்கான வானிலை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Seeman about Ilayaraja :  ”இளையராஜா கேட்டது நியாயம்! நம்ம தப்பா புரிஞ்சுக்கிறோம்” ஆதரவாக பேசிய சீமான்Modi Vs Rahul Gandhi : காங்கிரஸ் குறித்து மோடி சர்ச்சை பேச்சு பிரச்சாரத்தில் பேசியது என்ன?Dharmapuri News : கருகும் வெற்றிலை கொடிகள்”அரசு உதவி செய்ய வேண்டும்”கதறும் விவசாயிகள்Seeman about Savukku Shankar : சவுக்கு மீது சிறையில் தாக்குதல்?”கஞ்சா சங்கர் ஆக்க போறாங்க”- சீமான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மரண வாக்குமூல கடிதம் எழுதியது யார்? வேறுபடும் ஜெயக்குமார் கையெழுத்து - வழக்கில் புதிய திருப்பம்!
மரண வாக்குமூல கடிதம் எழுதியது யார்? வேறுபடும் ஜெயக்குமார் கையெழுத்து - வழக்கில் புதிய திருப்பம்!
Udyogini scheme: ரூ. 3 லட்சம் கடன்; வட்டியே கிடையாது; பாதி பணம் தள்ளுபடி - உத்யோகினி திட்டம் பற்றி தெரியுமா?
Udyogini scheme: ரூ. 3 லட்சம் கடன்; வட்டியே கிடையாது; பாதி பணம் தள்ளுபடி - உத்யோகினி திட்டம் பற்றி தெரியுமா?
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு. சபரிமலை கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு. சபரிமலை கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
TN Weather: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - அடுத்த 7 தினங்களுக்கான வானிலை அப்டேட்!
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - அடுத்த 7 தினங்களுக்கான வானிலை அப்டேட்!
Akshaya Tritiya 2024 Date: அட்சய திரிதியை எப்போது? தங்கம் வாங்க நல்ல நேரம் இதுதான்!
அட்சய திரிதியை எப்போது? தங்கம் வாங்க நல்ல நேரம் இதுதான்!
kerala Elephant Attack: யானை மிதித்து தனியார் தொலைக்காட்சி கேமராமேன் உயிரிழப்பு - கேரளாவில் சோகம்
kerala Elephant Attack: யானை மிதித்து தனியார் தொலைக்காட்சி கேமராமேன் உயிரிழப்பு - கேரளாவில் சோகம்
Teachers Transfer: ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது? - வெளியான முக்கியத் தேதிகள்!
Teachers Transfer: ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது? - வெளியான முக்கியத் தேதிகள்!
Puducherry Youth Death: உடல் எடை குறைப்பால் இளைஞர் உயிரிழந்த விவகாரம்:  மருத்துவமனையை மூட உத்தரவா ?
உடல் எடை குறைப்பால் இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மருத்துவமனையை மூட உத்தரவா ?
Embed widget