மேலும் அறிய

அச்சு அசல் ஷாருக்கான் மகளை போல தோற்றம்... இன்ஸ்டாவில் குவியும் ரசிகர்கள்!

நடிகர் ஷாருக்கான் மகள் சுஹானா கான் போலவே முகத்தோற்றம் கொண்ட இஷா ஜெயின் என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் வைரல் ஆகி வருகிறது.

ஷாருக்கான் மகள் சுஹானா கான் இணையத்தில் எப்போதும் பரபரப்பானவர். ஸ்டார் கிட் என்னும் முன்னுரிமையுடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது பளபளப்பான தோற்றத்தை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். இந்தித் திரையுலகில் அறிமுகமாகும் முன்பே, சுஹானா ஒரு குறிப்பிடத்தக்க ரசிகர் கூட்டத்தைப் பெற்றுள்ளார். சமீபத்தில், சுஹானா கானை போலவே அச்சு அசலாக இருந்த ஒரு பெண்ணின் சமூக வலைதள பக்கம் வைரலானது. சமூக ஊடக பயனாளியான இஷா ஜெயின், இன்ஸ்டாகிராமில் தனது படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இஷா ஜெயின் மற்றும் சுஹானா கான் இடையே உள்ள முக ஒற்றுமையை நெட்டிசன்கள் கண்டு வியந்து வருகின்றனர். தற்போது இஷா ஜெயினின் புகைப்படங்கள், பதிவுகள் இணையத்தில் வைரலாகி தீப்பிடித்து எரிகிறது. இவர் மட்டும் இன்றி இஷா ஜெயினுக்கு இஷிகா ஜெயின் என்ற இரட்டை சகோதரியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram
 
A post shared by Isha Jain (@ishajainv)

இஷா ஜெயின் இன்ஸ்டாகிராமில் 129k பாலோவார்ஸை கொண்டு, பலரும் அறிந்த ஒரு சமூக ஊடக பிரபலமாக திகழ்கிறார். அவர் தனது சமூக வலைதளங்களில் தனது படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். ஆனால் நெட்டிசன்கள் அவர் ஷாருக்கான் மகள் போலவே இருப்பதை கண்டறிந்த பிறகு இன்ஸ்டாகிராமில் அவரது படங்கள் மற்றும் வீடியோக்கள் தீ போல் பரவி வருகின்றன. சுஹானா கான் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி கானுக்கும் மே 22, 2000 இல் பிறந்த குழந்தை. இந்தி திரையுலகில் வாரிசு நடிகர், நடிகைகள் ஆதிக்கம் உள்ளது என்று ஏற்கனவே விமர்சனங்கள் கிளம்பின. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு வாரிசு நடிகர்கள் காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டது. இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் நடிகையாக அறிமுகமாக உள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Suhana Khan (@suhanakhan2)

இவர் நடிக்கும் வெப் தொடரை பிரபல இந்தி இயக்குனர் ஷோயா அக்தர் இயக்குகிறார். இதில் இந்தி நடிகர் சயீப் அலிகான் மகன் இப்ராகிமும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இதில் நடிப்பதற்காக நடிகை சுஹானா கான் நடிப்பு பயிற்சியும் எடுத்து வந்துள்ளார். இவர் பிரபல இந்தி இயக்குனர் கரண் ஜோகர் படத்தில் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில் ஷோயா அக்தர் இயக்கத்தில் நடிக்க வந்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தால் (என்சிபி) கைது செய்யப்பட்ட அவரது மூத்த சகோதரர் ஆரியன் கான் தற்போது ஆர்தர் சாலை சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவா நோக்கிச் சென்ற மும்பை கடற்கரையில் ஒரு கப்பல் விருந்தில் சோதனை நடத்திய பிறகு போதை பொருள் பயன்படுத்தியதாக ஆர்யனை கைது செய்யப்பட்டிருந்தார். ஆர்யான் கானின் வழக்கறிஞர் பல முறை முயற்சி செய்த பிறகும், ஷாருக்கான் மகனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை. அக்டோபர் 2, 2021 அன்று கப்பல் ரேவ் பார்ட்டியில் 7 பேருடன் அவர் கைது செய்யப்பட்டார்.

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget