மேலும் அறிய

படே மியான் சோட்டே மியான் படத்தில் இணைந்த ஜவான் ஸ்டண்ட் இயக்குநர்!

பதான் மற்றும் ஜவான் ஆகியவற்றில் பரிபுரிந்த சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்டண்ட் இயக்குநரான கிரேக் மேக்ரேயின் 'படே மியான் சோட்டே மியான்' படத்தில் இணைந்துள்ளார்.

பதான் & ஜவான் படத்தின் மூலம் புகழ்பெற்ற ஸ்டண்ட் இயக்குநர் கிரேக் மேக்ரே 'படே மியான் சோட்டே மியான்' படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

எதிர்பார்ப்பை எகிற வைத்த திரைப்படம்

பூஜா எண்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான 'படே மியான் சோட்டே மியான்,' அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து இப்படம் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இப்படத்திலிருந்து இதுவரை வெளியான பாடல்கள் முதல் மற்றும் கடந்த வாரம் வெளியான டிரெய்லர் வரை இந்தத் திரைப்படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

இப்படம் ஏப்ரல் 10, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 'படே மியான் சோட்டே மியான்' திரைப்படம் இந்தியத் திரையுலகில் இதுவரை வெளிவராத ஒரு பிளாக்பஸ்டர் ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. ஷாருக்கானின் பிளாக்பஸ்டர் படங்களான பதான் மற்றும் ஜவான் ஆகியவ படங்களில் பணிபுரிந்த சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்டண்ட் இயக்குனரான கிரேக் மேக்ரேயின் இப்படத்தின் ஆக்‌ஷன் இயக்குனராக இணைந்துள்ளார்.  

கிரேக் மேக்ரே ஹாலிவுட் பிளாக்பஸ்டர்களான ‘மேட் மேக்ஸ் ப்யூரி ரோட்’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’ ஆகியவற்றில் தனது அதிரடிக் காட்சிகளுக்காகவும் புகழ் பெற்றவர். விமானத்தில் பதைபதைக்க வைக்கும் சண்டைக்காட்சிகள் முதல் சிக்கலான சண்டைக் காட்சிகள் வரை பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தருவதில் வல்லவர்.  

ரசிகர்களைக் கவர்ந்து வரும் பிரபல ஸ்டண்ட் இயக்குநர்:

'படே மியான் சோட்டே மியான்' படத்தின் தயாரிப்பாளரான ஜாக்கி பாக்னானி இந்தச் செய்தியை உற்சாகமாக பகிர்ந்துகொண்டார். "எங்கள் படத்தில் இருக்கும் ஆக்ஷன் காட்சிகள் மூலம் பார்வையாளர்களுக்கு வாழ்நாளில் சிறப்பான சினிமா அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.

இயக்குனர் அலி அப்பாஸ் திரைக்கதை உங்களை நிச்சயம் கவரும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த ஒத்துழைப்பின் விளைவுதான் இந்த திரைப்படம். படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், 'படே மியான் சோட்டே மியான்' திரையரங்குகளில் வெளியாகும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

ரசிகர்களை அவர்களின் இருக்கைகளின் நுனியில் அமர வைக்கும் பல காட்சிகள் படத்தில் உள்ளது என்பதற்கு உறுதியளிக்கிறேன்" என்று கூறியுள்ளார். வாசு பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் ஆகியோர் படே மியான் சோட் மியானை AAZ பிலிம்ஸ் உடன் இணைந்து வழங்குகிறார்கள்.

அலி அப்பாஸ் ஜாஃபர் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், ஜாக்கி பாக்னானி, ஹிமான்ஷு கிஷன் மெஹ்ரா, அலி அப்பாஸ் ஜாபர் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 10 ஏப்ரல் 2024 அன்று வெளியாக உள்ளது. அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப், பிருத்விராஜ் சுகுமாரன், சோனாக்ஷி சின்ஹா, அலையா எஃப் மற்றும் மனுஷி சில்லார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட " ஃபீல் மை லவ் " படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை ஓரம்கட்டிய கட்டா குஸ்தி 2 படக்குழு..பாராட்டுக்களை சுருட்டிய விஷ்ணு விஷால்
ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை ஓரம்கட்டிய கட்டா குஸ்தி 2 படக்குழு..பாராட்டுக்களை சுருட்டிய விஷ்ணு விஷால்
Actress Uma: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட பிரபல நடிகை.. சிகிச்சையின்போது வெளியான புகைப்படம்!
Actress Uma: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட பிரபல நடிகை.. சிகிச்சையின்போது வெளியான புகைப்படம்!
அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !
அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
TN Weather Update: 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
முருகப் பெருமானின் சொத்தையே வளைப்பீர்களா? - முதல்வர் விஜயை விளாசிய எடப்பாடி பழனிசாமி!
முருகப் பெருமானின் சொத்தையே வளைப்பீர்களா? - முதல்வர் விஜயை விளாசிய எடப்பாடி பழனிசாமி!
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
Rasi Palan Today (16-07-2026): இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தெரியுமா? - மேஷம் முதல் மீனம் வரையிலான பலன்கள்!
Rasi Palan Today (16-07-2026): இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தெரியுமா? - மேஷம் முதல் மீனம் வரையிலான பலன்கள்!
Embed widget