மேலும் அறிய

Senthoorapoove: ‛விஜயகாந்திற்கு முதல் விருது...’ 34 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‛செந்தூரப்பூவே’

செந்தூரப்பூவே திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது 2.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. 1988ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் இதுவும் ஒன்று.

நடிகை ஸ்ரீதேவியின் பிரபலமான பாடலின் முதல் வார்த்தையை தனது படத்தின் பெயராக வைத்து வெற்றி பெற்றவர் இயக்குனர் பி.ஆர். தேவராஜ். அவர் இயக்கத்தில் 1988ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் "செந்தூரப்பூவே". இப்படம் வெளியாகி இன்றோடு 34 ஆண்டுகளை கடந்து விட்டது. 

பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்த படம்:

தமிழ் பொன்னி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் கேப்டன் விஜயகாந்த், ராம்கி, நிரோஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் பாக்ஸ் ஆபிசில் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது 2.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது. 1988ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்கள் மனோஜ்-ஜியான். தமிழ் வெளியான இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் சிந்தூரா பூவு  என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. மேலும் 1992ம் ஆண்டு மல்லிகே ஹுவே  எனும் பெயரில் ரீ மேக் செய்யப்பட்டது. 

 

Senthoorapoove: ‛விஜயகாந்திற்கு முதல் விருது...’ 34 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‛செந்தூரப்பூவே’

 

விஜயகாந்த் பிடித்த தனி இடம்:

 

இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் விஜயகாந்த் தனது சிறந்த நடிகருக்கான தமிழக மாநில அரசின் திரைப்பட விருதை முதல் முறையாக பெற்றார். நடிகர் கமல் மற்றும் நடிகர் ரஜினி இடையே கடும் போட்டி நிலவிய காலத்திலேயே தனக்கென ஒரு உயர்ந்த இடத்தை மக்கள் மனதில் பதிய வைத்தவர் கேப்டன் விஜயகாந்த். படத்தின் நடிக்கும் சூப்பர் ஹீரோக்கள் பெரும்பாலும் கிளைமாக்ஸ் காட்சிகளில் இறப்பது என்பதை ரசிகர்கள் ஏற்று கொள்ளமாற்றார்கள் எனும் நம்பிக்கையை இந்த படம் வெளியான சமயத்திலேயே தகர்த்து எறிந்தவர் நடிகர் விஜயகாந்த். 


அன்றைய இளைஞர்களின் ஸ்மார்ட் ஹீரோ:

நடிகர் ராம்கி தனது வசீகரமான தோற்றத்தால் தனது முதல் படமான "சின்னபூவே மெல்லபேசு" படத்தில் தொடங்கி சீரான ஒரு வளர்ச்சியில் இருந்தவருக்கு "செந்தூரப்பூவே" திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். அந்த காலத்து இளைஞர்களுக்கு இவரின் ஹேர் ஸ்டைல் மிகவும் ஃபேவரட்.  

செந்தூர பூவே படத்தின் கதை சுருக்கம்:

மாற்றாந்தாயால் மிகவும் மோசமாக நடத்தப்படும் ஒரு இளம்பெண்ணாக நிரோஷாவும் மற்றும் அவளின் ஜோடியான ராம்கியையும் நடித்திருந்தனர். இவர்களை எப்படி நடிகர் விஜயகாந்த் காப்பாற்றுகிறார் என்பது தான் "செந்தூரப்பூவே " படத்தின் கதைக்களம். இப்படத்தில் ஒவ்வொருவரும் தனது சிறப்பான பங்கை அளித்ததது தான் படத்தின் வெற்றிக்கு காரணம். 

ரீல் காதல் ரியல் ஆனது :

எம். ஆர். ராதா வின் மகளும் நடிகை ராதிகாவின் சகோதரியான நடிகை நிரோஷா தனது மூன்று வயதிலேயே தனது அப்பா நடித்த தாலி பெண்ணுக்கு வேலி திரைப்படத்தில் அவரின் மகளாகவே நடித்திருந்தார். செந்தூரப்பூவே திரைப்படம் நிரோஷாவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்தது. இதுவரையில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நிரோஷா இப்படத்தில் அவரின் ஜோடியாக நடித்த நடிகர் ராம்கியை காதல் திருமணம் செய்து கொண்டார். 

   

தலைப்பு செய்திகள்

Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget