மேலும் அறிய

”அந்த படத்தால எனக்கு கமல் கோவில் கட்டி இருப்பார்” - வில்லன் நடிகரின் ஓபன் டாக்

”தேவர் மகனை பற்றி நாங்கள் பேசியதை கேட்டு இருந்தால் கமல் எனக்கும், சீமானுக்கும் கோவிலே கட்டி இருப்பார்”


தேவர் மகனை பார்த்துவிட்டு நாங்கள் பேசியதை கேட்டு இருந்தால் எனக்கும், சீமானுக்கும் கமல் கோவிலே கட்டி இருப்பார் என நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து தெரிவித்துள்ளார். 

யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாரிமுத்து, ரஜினியின் ஜெய்லர், இந்தியன் -2 படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல், பிரபல தொலைக்காட்சியில் வெளியாகும் எதிர்நீச்சல் சீரியலில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். 


”அந்த படத்தால எனக்கு கமல் கோவில் கட்டி இருப்பார்” - வில்லன் நடிகரின் ஓபன் டாக்

பிரமிப்பை தந்த நாயகன்

இந்த நிலையில் ஆம்பர கட்டத்தில் சினிமாவுக்கு அறிமுகமானது, நடிகனாக மாறினது என தனது கடந்த கால நினைவுகளை பிரபல ஊடகத்தில் பகிர்ந்து கொண்டார். அதில், கல்லூரி படிக்கும் போது முதல் மரியாதை திரைப்படத்தை பார்த்து அதன் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் சினிமா மீது தனது கவனத்தை திருப்பியுள்ளார். தொடர் முயற்சிக்கு பிறகு பாரதிராஜா, ராஜ்கிரண், வசந்த், மணிரத்னம், சீமான், SJ சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். ஆரம்ப கட்டத்தில் ராஜ்கிரண் கூட வேலை பார்க்கும் போது கிராமத்து கதைகளை பார்த்து சலிப்பு ஏற்பட்டதாகவும்,  அந்த காலக்கட்டத்தில் வெளியான நாயகன் படம் தன்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கூறினார். கிராமத்தை மட்டுமே பார்த்து வளர்ந்த தனக்கு ”வீனஸ் ஸ்டுடியோவில் செட் போட்டு நாயகனில் பம்பாயை காட்டியது பிரமிப்பை ஏற்படுத்தியது” என ஒரு ரசிகனாக நாயகன் படம் குறித்து புகழ்ந்து தள்ளினார். 

எனக்கு கமல் கோவில் கட்டி இருப்பார்

அதேபோல, கமல், சிவாஜியின் கூட்டணியில் வெளிவந்த தேவர் மகன் குறித்து பேசிய மாரிமுத்து,  ” தேவர்மகன் படம் பார்த்த போது எனக்குள் என்ன அதிர்வு ஏற்பட்டதோ, அதே அதிர்வு தான் சீமானுக்கும் ஏற்பட்டது” என்றார். மிட்நைட் ஷோவில் தேவர் மகனை பார்த்து விட்டு, டீ குடிக்க நானும், சீமானும் நடந்து சென்றபோது, படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் பேசி கொண்டே சென்றோம்.  தேவர் மகன் குறித்து நாங்கள் புகழ்ந்ததை கேட்டு இருந்தால் எனக்கும், சீமானுக்கும் கமல் கோயிலே கட்டி இருப்பார்” என்றார். ஏனென்றால் தேவர் மகனில் கமல் நடிக்காமல் வாழ்ந்து இருப்பதாக புகழ்ந்தார். 

சிம்பு ஒரு ராக்கோலி

சீமானின் இயக்கத்தில் உருவான பாஞ்சாலங்குறிச்சி அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட மாரிமுத்து, 16 வயதினிலேயே, கிழக்கே போகும் ரயில் மட்டுமே பாரதிராஜாவின் கதை என்றும், அவரின்  மற்ற படங்கள் எல்லாம் வெளியில் இருந்து வாங்கப்பட்ட கதை தான் என்றார்.  

தொடர்ந்து சிம்புவுடன் பணிபுரிந்த மன்மதன், நியூ படத்தின் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட மாரிமுத்து, இரவு முழுவதும் வேலை செய்வதால் சிம்பு ஒரு ராக்கோலி என்றார். சாதாரண உதவி இயக்குனரில் இருந்து நடிகராக மாறியது வரையிலான காலக்கட்டதில் நடந்த இனிமையான தருணங்களை பகிர்ந்து கொண்ட மாரிமுத்து, சினிமா மீதான காதல் இன்னும் குறையவில்லை என்றார். 

தலைப்பு செய்திகள்

Actor Vivek: லிங்குசாமியிடம் கோபித்துக் கொண்ட விவேக்.. ரன் படத்தில் நடந்தது என்ன?
Actor Vivek: லிங்குசாமியிடம் கோபித்துக் கொண்ட விவேக்.. ரன் படத்தில் நடந்தது என்ன?
Lingusamy:
Lingusamy: "விஜய் முதலமைச்சர் ஆனதுல ரொம்ப சந்தோஷம்.." இயக்குனர் லிங்குசாமி நெகிழ்ச்சி
"'அன்பே டயானா' குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்" – ரோஜா, சேத்தன், சமுத்திரக்கனி, சசிகுமார் பாராட்டு
பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத வகையில் பதிவு செய்துள்ளோம்
பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத வகையில் பதிவு செய்துள்ளோம்" அன்பே டயானா படக்குழு நம்பிக்கை

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Perambur: வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
Bangkok Bar: நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
Annamalai: தவெக தடுமாறினால் கைதூக்கி விடுங்க.. ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!
Annamalai: தவெக தடுமாறினால் கைதூக்கி விடுங்க.. ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
CM Vijay: தவெக ஒருநாள் காணாமல் போகும்.. கறை படிந்த கட்சிகளில் முதலிடம்.. வெளுத்து வாங்கிய அமமுக!
CM Vijay: தவெக ஒருநாள் காணாமல் போகும்.. கறை படிந்த கட்சிகளில் முதலிடம்.. வெளுத்து வாங்கிய அமமுக!
Rasi Palan Today (13-07-2026): கன்னிக்கு கவனம்.. விருச்சிகத்துக்கு லாபம்.. உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (13-07-2026): கன்னிக்கு கவனம்.. விருச்சிகத்துக்கு லாபம்.. உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்?
Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Embed widget