மேலும் அறிய

Sonia Agarwal: பிறந்தநாள் கொண்டாடும் சோனியா அகர்வால்: 90ஸ் கிட்ஸைக் கவர்ந்த செல்வராகவன் பட நாயகி!

இன்று சோனியா அகர்வால் தனது 42 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

சோனியா அகர்வால்

Sonia Agarwal: பிறந்தநாள் கொண்டாடும் சோனியா அகர்வால்: 90ஸ் கிட்ஸைக் கவர்ந்த செல்வராகவன் பட நாயகி!

பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் பிறந்த சோனியா அகர்வால், தொலைக்காட்சித் தொடர்களில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். பின் தெலுங்கில் ' நீ பிரேமகாய் ' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்தார். 

திவ்யாவும் அனிதாவும்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சோனியா அகர்வால். தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7 ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

Directors Actor என்று ஒரு சில நடிகர்களை குறிப்பிடுவார்கள். இந்த நடிகர்கள் ஒரு இயக்குநரின் கதைக்கு முழுமையாக தங்களை ஒப்புக் கொடுத்து ஒரு படத்தின் அங்கமாக இருப்பவர்கள். இயற்கு நடிகர் தனுஷ் ஒரு சிறந்த உதாரணம். வெற்றிமாறன், செல்வராகவன் என தான் பணியாற்றும் இயக்குநர்களுக்கான நடிகராகவே தன்னை வெளிப்படுத்தக் கூடியவர். இயக்குநர்களின் நடிகைகள் என்று மிக சொற்பமானவர்களையே நாம் அப்படி குறிப்பிட்டு சொல்லமுடியும். ஸ்ரீதேவி, ராதா, சிம்ரன், த்ரிஷா போன்ற மூத்த நடிகைகளை குறிப்பிடலாம். 

Sonia Agarwal: பிறந்தநாள் கொண்டாடும் சோனியா அகர்வால்: 90ஸ் கிட்ஸைக் கவர்ந்த செல்வராகவன் பட நாயகி!

சோனியா அகர்வால் அப்படியான ஒரு நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வருவதற்கான எல்லா சாத்தியங்களும் இருந்தன. ரசிகர்கள் பெரும்பாலும் அவரை செல்வராகவனின் கண்கள் வழியாகதான் பார்த்தார்கள். துணிச்சலான ஆண்களை அரவணைத்துக் கொள்ளும் ஒரு பெண்ணாக செல்வராகவனின் படங்களில் சோனியா அகர்வால் நடித்தார். புதுப்பேட்டை  படத்தில் அவருக்கு நெகட்டிவ் ஷேட் ஒன்றையும் கொடுத்திருப்பார் செல்வராகவன்.

அவரது செல்வி கேரக்ட்ரை வைத்து தனியாக ஒரு ஸ்பின் ஆஃப் படமே எடுக்கலாம். செல்வராகவன் படங்கள் தவிர்த்து அவர் நடித்த திருட்டுப் பயலே, ஒரு நாள் ஒரு கனவு போன்ற படங்களிலும் அவரது நடிப்பு தனித்துவமாக தெரிந்தது. ஆனால் அடுத்தடுத்து அழுத்தமான கதாபாத்திரங்களில் அவருக்கு இயக்குநருக்கு வழங்க தவறிவிட்டார்கள். 

தோல்வியடைந்த திருமணம்

செல்வராகவனை திருமணம் செய்துகொண்ட பிறகு சில காலம் நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்ட அவர் திருமண முறிவுக்குப் பிறகு சிம்பு நடித்த வானம் படத்தின் மூலம்  மீண்டும் நடிப்பிற்கு திரும்பி வந்தார். இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மிகவும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தினார். சதுரங்கம், நடிகையின் வாக்குமூலம், பாலக்காட்டு மாதவன் என அடுத்தடுத்து  அவர் நடித்த படங்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை. தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அவ்வப்போது ஒரு சில படங்களில் பெரிதும் முக்கியத்துவம் பெறாத கதாபாத்திரங்களில் அவரை நாம் பார்த்து வருகிறோம். தற்போது மலையாளத்தில் பிஹைண்ட், தமிழில் காதலைத் தேடும் நித்யானந்தா, ஷ் உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார் சோனியா அகர்வால். ஆனால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்கள் அவரை காதல் கொண்டேன் திவ்யாவாக, 7 ஜி அனிதாவாக தான் மனதில் வைத்திருப்பார்கள். பிறந்தநாள் வாழ்த்துகள் சோனியா அகர்வால்.

தலைப்பு செய்திகள்

‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
Embed widget