மேலும் அறிய

Pushpa: The Rise: என்னா நடிப்பு.. மைண்ட் ப்ளோயிங்... புஷ்பா படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குநர்..!

புஷ்பா திரைப்படத்தை பிரபல இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கில் பிரபல இயக்குநராக வலம் வரும் சுகுமார் இயக்கத்தில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா. அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்த இந்தப் படத்தில் நடிகர் ஃபஹத் வில்லனாக நடித்தார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் படத்தின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட் அடித்தன. 

குறிப்பாக சமந்தாவின் முதல் ஐட்டம் சாங்கான ஓ சொல்றியா பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. முன்னதாக ஓ சொல்றியா பாடல் ஆண்களை கொச்சைப்படுத்துவதாக கூறி ஆந்திராவைச் சேர்ந்த ஆண்கள் அமைப்பு ஒன்று வழக்குத் தொடுத்தது. ஓ சொல்றியா பாடலைப் போலவே  ‘ சாமி சாமி’ பாடலும், படத்தின் பின்னணி இசையும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.    

 

ஓ சொல்றியா பாடல் குறித்து அல்லு அர்ஜூன் கூறும் போது, “சமந்தா காரு இந்த பாடலை செய்ததற்கு மிக்க நன்றி. நாங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காகத்தான்  இந்த பாடலை நீங்கள் செய்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே அதற்கு நன்றி. இதை செய்வது  சரியா தவறா என்று உங்களுக்கு எத்தனை சந்தேகங்கள் இருந்தது. அது எனக்கு  படப்பிடிப்பின் போதே தெரிந்தது. அதனால்தான் உங்களிடம் ஒன்று மட்டும் சொன்னேன் ’என்னை நம்பி இதை செய் ’  என்றேன். அதன் பிறகு என்னிடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. எல்லாவற்றையும் செய்ததற்கு நன்றி. நீங்கள் என் இதயத்தையும் மரியாதையையும் வென்றுள்ளீர்கள்” என கூறினார். 

இந்த நிலையில் இந்தப்படத்தை பார்த்த பிரபல இயக்குநர் செல்வராகவன் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப்பதிவில், “ புஷ்பா.. வாவ்! என்ன ஒரு எண்டர்டெய்னர். சுகுமாருக்கு பாராட்டுகள்.

படத்தில் இடம்பெற்ற எல்லா கதாபாத்திரங்களும் தங்களது சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளன. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தோட பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் நான் அடிக்ட் ஆகிவிட்டேன். அல்லு அர்ஜூன்.. என்னா நடிப்பு.. என்னா பாடி லாங்குவேஜ்.. மைண்ட் ப்ளோயிங்.. படத்தில் இடம்பெற்றிருந்த சின்ன சின்ன நுணுக்கங்கள் மிகவும் பிடித்திருந்தது. ஹாட்ஸ் ஆப்” என்று பதிவிட்டுள்ளார். 

 

இந்தப்பதிவிற்கு ரிப்ளை செய்த அல்லு அர்ஜூன் மிகவும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
Jailer 2 : 15 லட்சம் டிக்கெட்கள் விற்பனை...ரிலீஸ் முன்பே 100 கோடி வசூலை நெருங்கும் ஜெயிலர் 2
Jailer 2 : 15 லட்சம் டிக்கெட்கள் விற்பனை...ரிலீஸ் முன்பே 100 கோடி வசூலை நெருங்கும் ஜெயிலர் 2

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget