மேலும் அறிய

7 years of Dharmadurai: ஆண்டிப்பட்டி கனவா காத்து வீசிய நாள்... சீனு ராமசாமியின் ஃபீல் குட் படம்.. 'தர்மதுரை' ரிலீசாகி 7 வருஷமாச்சு!

காதல், சென்டிமென்ட், சோகம் என அனைத்தின் கலவையாக யதார்த்தமான திரைக்கதையால் ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்த 'தர்மதுரை' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கவுதமி நடிப்பில் 1991ம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழா கண்ட 'தர்மதுரை' படத்தின் பெயரிலேயே கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு அதே பெயரில் சீனு ராமசாமி, நடிகர் விஜய் சேதுபதியை இயக்கிய ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் 'தர்மதுரை'. இப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

 

7 years of Dharmadurai: ஆண்டிப்பட்டி கனவா காத்து வீசிய நாள்... சீனு ராமசாமியின் ஃபீல் குட் படம்.. 'தர்மதுரை' ரிலீசாகி 7 வருஷமாச்சு!

யதார்த்தமான கதை :

தமன்னா, ராதிகா, சிருஷ்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர் என்று சொல்வதை காட்டிலும் வாழ்ந்து இருந்தனர் என்றே சொல்ல வேண்டும். விஜய் சேதுபதி வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான விஷயங்களால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவர் எப்படி மறுவாழ்வு பெறுகிறார் எனும் சாதாரண திரைக்கதையை மிகவும் யதார்த்தமான முறையில்  காட்சிப்படுத்திய இப்படம் பேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்தது. 

கதை சுருக்கம் :

கிராமத்தில் ஏழை குடும்பத்தை சேர்ந்த விஜய் சேதுபதி படித்த முதல் தலைமுறையாக டாக்டராகிறார். கல்லூரியில் படிக்கும் போதே தமன்னா, ஸ்ருஷ்டி என இருவரும் அவர் மேல் ஆசைப்பட தமன்னா உள்ளுக்குளேயே காதலை ஒளித்து கொள்ள, ஸ்ருஷ்டி விஜய் சேதுபதியிடம் காதலை வெளிப்படுத்துகிறார். தமன்னா மீது தனக்கு விருப்பம் இருந்தாலும் விஜய் சேதுபதி அதனை வெளிப்படுத்தாமல் உள்ளத்தில் பூட்டி வைக்கிறார். ஆனால் சிருஷ்டி எதிர்பாராதவிதமாக உயிரிழக்கிறார்.

அதன் பிறகு படிப்பை முடித்து பிறகு தனது சொந்த கிராமத்திலேயே மருத்துவ சேவை செய்யும் விஜய் சேதுபதி அங்கே ஐஸ்வர்யா ராஜேஷ் மீது காதல் கொள்கிறார். 

 

7 years of Dharmadurai: ஆண்டிப்பட்டி கனவா காத்து வீசிய நாள்... சீனு ராமசாமியின் ஃபீல் குட் படம்.. 'தர்மதுரை' ரிலீசாகி 7 வருஷமாச்சு!

இரு குடும்பத்துக்கும் இடையே ஏற்படும் தகராறால் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்கொலை செய்து கொள்கிறார். அந்த வேதனையில் குடிக்கு அடிமையாகிறார் விஜய் சேதுபதி. மறுபக்கம் தமன்னாவும் திருமண முறிவு ஏற்பட்டு கணவனை பிரிந்து தனிமையில் வாழ்கிறார். பழைய நண்பர்கள் மீண்டும் நட்பாக பழக காதல் மீண்டும் மலர்ந்து ஒன்று சேர்கிறார்கள். இது தான் படத்தின் கதை சுருக்கம். 

சிறப்பான பங்களிப்பு :

ஆர்.கே. சுரேஷின் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை, வைரமுத்துவின் வரிகள், சுகுமாரின் ஒளிப்பதிவு என தொழிநுட்ப கலைஞர்களின் பங்களிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது. யதார்த்தமான விஜய் சேதுபதியை தமிழ் சினிமா கொண்டாடிய காலத்தில் வெளியான இப்படம் அவருக்கு குடும்ப ஆடியன்ஸை பெற்றுத் தந்து ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

சீனு ராமசாமியின் சிறப்பான படைப்புகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்த 'தர்மதுரை' திரைப்படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் அவை எதுவும் படத்தின் வெற்றியை பாதிக்கவில்லை. 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்த தர்மதுரை படத்தை ரசிகர்கள் இன்றும் கொண்டாடுவது தான் படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.  

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget