Samantha Reply: "நாயோட கிடந்து சாகப்போறியா?" லந்து கொடுத்த நெட்டிசன்.. சவுக்கடி கொடுத்த சமந்தா..
சமந்தாவை சாகப்போகிறீர்களா என கேட்ட நெட்டிசனுக்கு, சமந்தா அளித்த நச் பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
![Samantha Reply: Samantha Instagram Post with her pet dog trolled here is reply by samantha Ruth Prabhu Samantha Reply:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/27/c2e7b6b1393cb184ad12d5b7e41b2cb5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. ஃபிட்னஸ் மீது அதிக ஆர்வம்கொண்ட இவர் அவ்வப்போது தனது சமூக வலைதளபக்கத்தில் தான் உடற்பயிற்சி செய்வது தொடர்பான புகைப்படங்களையும், வீடியோவையும் பகிர்வது வழக்கம்.
செல்ல நாயுடன் போட்டோ
View this post on Instagram
அந்த வகையில் இன்று தனது செல்ல நாயுடன் ஜிம்மில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, அதிகாலையிலேயே எழுந்து விட்டேன். இவனை ( நாய்க்குட்டியை) மிகவும் நேசிக்கிறேன். இவ்வளவு நாட்களாக இதனை மிஸ் செய்து கொண்டிருந்தேன்” என்று பதிவிட்டு இருந்தார்.
கமெண்ட் செய்த நெட்டிசன்
இந்த பதிவை பார்த்த நெட்டிசன் ஒருவர், ட்விட்டரில் கடைசியில் இவர் நாய் மற்றும் பூனைக்குட்டிகளுடன் தனியாக சாகப்போகிறார்” என்று பதிவிட்டார். இதற்கு பதிலளித்த சமந்தா அப்படி ஒன்று நடந்தால் நான் என்னை அதிஷ்டசாலி என்று கருதுவேன்” என்று பதிவிட்டார். அதனைத்தொடர்ந்து அந்தப் பதிவு வைரலானது. அவர் பதிலளித்த நெட்டிசனின் ட்விட் டெலிட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
He deleted and ran away 😂
— SARAVAN (@Saravan_2255) May 27, 2022
This was the tweet 👇 pic.twitter.com/H7YZAPmVVC
வரிசைகட்டி நிற்கும் படங்கள்
சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்த வந்த நிலையில், விஜயும் சமந்தாவும் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் பரவின. இதற்கு விளக்கம் அளித்த படக்குழு அனைவரும் நலமாக உள்ளதாக கூறியது.இதை தவிர்த்து, சாகுந்தலம், யசோதா ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா ஹாலிவுட்டில் அரேஜ்மெண்ட்ஸ் ஆஃப் லவ் படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)