Watch Video : `ப்ளீஸ்.. ப்ளீஸ்..டாட்டூ மட்டும் போடாதீங்க!’ - சமந்தாவின் அட்வைஸுக்கு இந்த பகீர்தான் காரணம்..
நடிகை சமந்தா மூன்று டாட்டூக்களைப் போட்டுள்ளார். மூன்றுமே அவரது முன்னாள் கணவர் நடிகர் நாக சைதன்யாவுக்குத் தொடர்புடையவை.
கடந்த ஆண்டு நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நடத்திய கேள்வி பதில் நிகழ்ச்சியில், ரசிகர் ஒருவர் அவரிடம் டாட்டூ ஐடியா கேட்க, அதற்கு நடிகை சமந்தா தான் தன்னையே சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டிருந்தால், தன்னிடம் `எப்போதும் டாட்டூ மட்டும் போட்டுக்கொள்ள வேண்டாம்’ என அறிவுறுத்தியிருப்பதாகக் கூறியிருந்தார். நடிகை சமந்தா மூன்று டாட்டூக்களைப் போட்டுள்ளார். மூன்றுமே அவரது முன்னாள் கணவர் நடிகர் நாக சைதன்யாவுக்குத் தொடர்புடையவை.
கடந்த 2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். வெவ்வேறு கருத்து வேற்றுமைகளின் காரணமாக, நான்கு ஆண்டுத் திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக இருவரும் அறிவித்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரசிகர்களுடன் கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சமந்தாவிடம் ரசிகர் ஒருவர், `நீங்கள் ஒருநாள் போட்டுக் கொள்ள விரும்புமாறு டாட்டூ ஐடியாக்களை வழங்க முடியுமா?’ எனக் கேட்டுள்ளார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக வீடியோ வெளியிட்டிருந்த நடிகை சமந்தா, `சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த என்னை இப்போதிருக்கும் நான் கண்டால், `எப்போதும் டாட்டூ போட்டுக் கொள்ளாதே!’ எனக் கூறியிருப்பேன்.. எப்போதும்!’ எனக் கூறியிருந்தார்.
தனது மூன்று டாட்டூக்களையும் நடிகை சமந்தா வெறுப்பது போல தற்போது இந்த வீடியோவில் தெரிய வந்துள்ளது. நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யா இருவரும் தங்கள் மணிக்கட்டுகளில் ஒரே மாதிரியான டாட்டூக்களைப் பெற்றுள்லனர். `வைகிங்’ சின்னமான அதன் பொருள், `உங்கள் யதார்த்தத்தை நீங்களே உருவாக்குங்கள்’ என்பதாகும். தன் கழுத்தின் பின்பக்கம் YMC என்று எழுதப்பட்ட டாட்டூவைப் பெற்றுள்ளார் நடிகை சமந்தா. கடந்த 2010ஆம் ஆண்டு, நடிகர் நாக சைதன்யாவைச் சந்தித்த `யே மாயா சேசாவே’ படத்தைக் குறிக்கும் விதமாக அந்த டாட்டூ போடப்பட்டுள்ளது. தன் நெஞ்சின் பக்கவாட்டில் `Chay' என்று நாக சைதன்யாவைக் குறிக்கும் டாட்டூவையும் நடிகை சமந்தா போட்டுள்ளார்.
இதன்காரணமாகவே, நடிகை சமந்தா தனது ரசிகர்களிடம் டாட்டூக்கள் போடுவது குறித்து தனது வருத்தத்தைப் பகிர்ந்துள்ளார் எனத் தெரிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்