பிக்பாஸ் நிகழ்ச்சியில் சட்டையை கழற்றிய சல்மான் கான்.. ரசிகர்களுக்கு கடும் கண்டனம்.. நடந்தது என்ன?
ஒரு பெண் எடை கூடினால் சமூக வலைத்தளங்களில் குண்டாகி விட்டதாக விமர்சனங்கள் எழுதுகிறார்கள். வயதாகி விட்டார் என்ற காரணத்திற்காக ஒருவர் நிராகரிக்கப்படுவது சரியல்ல என சல்மான்கான் தெரிவித்துள்ளார்.

நடிகை கத்ரீனா கைஃப் உடல் தோற்றத்தை கிண்டல் செய்த ரசிகர்களை நடிகர் சல்மான் கான் கடுமையாக சாடியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலாடையின்றி கிண்டல் செய்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகையான கத்ரீனா ஃகைப் சமீபத்தில் தனது கணவர் விக்கி கௌசலுடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்த தம்பதியினருக்கு கடந்தாண்டு நவம்பரில் ஆண் குழந்தை பிறந்தது. இப்படியான நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் கத்ரீனா கைஃப் வெளியே வந்த நிலையில் அவரைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடல் எடை அதிகரித்து காணப்பட்ட அவரை சகட்டுமேனிக்கு கிண்டல் செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கத்ரீனா ஃகைபுக்கு பாலிவுட் நடிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். வார இறுதி நிகழ்ச்சியில் தோன்றிய அவர், “சமீபகாலமாகத் தான் சந்தித்துவரும் வயது குறித்த கேலி கிண்டல்கள் குறித்து பேசிய சல்மான் கான் தனக்கு 60 வயதாகி விட்டது. அதனால் பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல இப்போது தன்னால் இருக்க முடியாது எனவும் கூறினார். அதுமட்டுமல்லாமல் ஒரு பெண் எடை கூடினால் சமூக வலைத்தளங்களில் குண்டாகி விட்டதாக விமர்சனங்கள் எழுதுகிறார்கள். வயதாகி விட்டார் என்ற காரணத்திற்காக ஒருவர் நிராகரிக்கப்படுவது சம்பந்தப்பட்டவர்களை மிகவும் பாதிக்கிறது.
ஒருவர் கர்ப்பமானால் அவரை ஏன் சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்கிறீர்கள்?.. கர்ப்பம் உடலை மாற்றுகிறது என்றும் ஒரு பெண் மீண்டும் பொதுவெளிக்கு வருகிறார் என்பதற்காக மட்டும் அவர் உடனடியாகத் தனது கர்ப்பத்திற்கு முந்தைய தோற்றத்திற்குத் திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது. கர்ப்பத்திற்குப் பிறகு மீண்டும் பொதுவெளிக்கு வரும் பெண்கள், தங்களுக்கென ஒரு இயல்பான வேகத்தைக் கண்டறிவார்கள் என்றும், அவர்கள் விரும்பினால், மீண்டும் உடலை ஃபிட்டாக மாற்றிக்கொள்ள முயற்சிப்பார்கள்.
மற்றவர்களை எடைபோடுவதில் தங்கள் நேரத்தைச் செலவழிப்பவர்கள் முதலில் உங்களைப் பாருங்கள் என கூறியதோடு மட்டுமல்லாமல் மேடையில் தனது கவ்பாய் தொப்பி, ஜாக்கெட் மற்றும் டி-ஷர்ட்டைக் கழற்றி தன் உடல் தோற்றத்தை வெளிக்காட்டினார். நான் குண்டாக இருக்கிறேன். என்னை கிண்டல் செய்யுங்கள் என தெரிவித்தார். ஒருவரின் நடிப்பு மோசமாக இருப்பதாகவோ அல்லது ஒரு திரைப்படம் பிடிக்கவில்லை என்றோ யாராவது நினைத்தால், அவர்கள் அதை வெளிப்படையாகச் சொல்லலாம். விமர்சனம் என்பது படைப்பைப் பற்றியதாக இருக்கும்போது அதில் தவறொன்றுமில்லை.ஒரு திரைப்படத்திற்கு டிக்கெட் வாங்குவது என்பது, திரையில் தோன்றும் நபரை விலைக்கு வாங்குவது என்று அர்த்தமல்ல என சல்மான் கான் காட்டமாக தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















