மேலும் அறிய

மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப்தான்...ஃபோட்டோ பகிர்ந்த ரஹ்மான்... தமிழில் ட்வீட் செய்த சச்சின்!

தான் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகன் என்பதையும், அவரது இசையுடன் பலமுறை தன் சதங்களைக் கொண்டாடி உள்ளதாகவும் சச்சின் முந்தைய காலக்கட்டங்களில் தெரிவித்து ரஹ்மானை உச்சி முகர்ந்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நல்ல நண்பர்கள்

அவரவர் துறையில் சிறந்து விளங்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் நீண்ட காலமாகவே நல்ல நண்பர்களாகத் திகழ்ந்து வருகின்றனர்.

சிறுவயது தொடங்கி 80களின் இறுதியில் கிட்டத்தட்ட ஒரே காலக்கட்டத்தில் இருவரும் தங்களது துறைகளில்  நுழைந்து, குறுகிய காலத்தில் ரசிகர்களை ஈர்த்து தங்கள் துறைகளில் கோலோச்சத் தொடங்கினர்.

ஒன்றாகத் தொடங்கிய பயணம்!

தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் உலகில் சச்சின் பல சாதனைகளைப் புரிந்து வந்த நிலையில், மறுபுறம் ஏ.ஆர். ரஹ்மான் 90களில் கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை தனது இசையால் நாட்டையே கட்டிப்போட்டார்.

சாதனைகளுக்கு அப்பாற்பட்டு உருவம், நடை, உடை, பாவனை என இருவருக்குள்ளும் பல ஒற்றுமைகள் இருந்து வரும் நிலையில், இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக வலம் வரத் தொடங்கினர்.

தான் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகன் என்பதையும், அவரது இசையுடன் தான் பலமுறை தன் சதங்களைக் கொண்டாடி உள்ளதாகவும் சச்சின் முந்தைய காலக்கட்டங்களில் தெரிவித்து ரஹ்மானை உச்சி முகர்ந்துள்ளார்.

ஜாம்பவான்கள் மீட் அப்!

மேலும் சச்சின் நல்லுள்ளம் படைத்தவர் என்றும், தன்னுடைய மிகப்பெரும் இன்ஸ்பிரேஷன் என்றும் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், முன்னதாக சென்ற ஏ.ஆர். ரஹ்மான் முன்னதாக சச்சினை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். சச்சினுடன் தனது நாளை இனிதாக செலவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான், தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன் சமூக வலைதளப் பக்கத்தில் உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by ARR (@arrahman)

இந்நிலையில் இந்தப் புகைப்படத்தை ரீட்வீட் செய்துள்ள சச்சின் ரஹ்மானை தமிழில் இசைப்புயல் என தனது பதிவில் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.

சச்சினின் இந்தப் பதிவு ரஹ்மான், சச்சின் இருவரது ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான சச்சின் டெண்டுல்கரின் பயோபிக்கான 'Sachin: A Billion Dreams' படத்துக்கு ஏஆர் ரஹ்மான் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Embed widget