லேட்டஸ்ட் காம்பினேஷன்... லாரன்ஸ் - எஸ். ஜே. சூர்யா இணையும் ஜிகர்தண்டா 2
Jigardhanda 2: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து "ஜிகர்தண்டா 2"படத்தின் மூலம் இணைகிறர்கள் லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா.
![லேட்டஸ்ட் காம்பினேஷன்... லாரன்ஸ் - எஸ். ஜே. சூர்யா இணையும் ஜிகர்தண்டா 2 S.J. Surya and Ragava Lawrence joins hands with Karthik subburaj in Jigardhanda 2 லேட்டஸ்ட் காம்பினேஷன்... லாரன்ஸ் - எஸ். ஜே. சூர்யா இணையும் ஜிகர்தண்டா 2](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/30/5690d0088d0dcc345f961e290b09a39d1661850146014224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Jigardhanda 2 : 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்... கிளாசிக் கூட்டணியில் உருவாகிறது ஜிகர்தண்டா 2
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான பிளாக் பஸ்டர் சூப்பர் ஹிட் திரைப்படம் "ஜிகர்தண்டா". இப்படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது இப்படம்.
இரண்டு சூப்பர் ஸ்டார்களின் ஜோடி:
"ஜிகர்தண்டா" படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து இப்படத்தின் இரண்டம் பாகம் விரைவில் வெளியாகும் என சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அந்த வகையில் தற்போது அப்படத்தின் இரண்டம் பாகம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை தற்போது வெளியாகியுள்ளன. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணைய உள்ளார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராகவா லாரன்ஸ் - எஸ்.ஜே. சூர்யா காம்பினேஷன்:
முனி மற்றும் காஞ்சனா திரைப்படங்களின் மூலம் மிகவும் இயக்குனராக பிரபலமானவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களை இயக்கிய எஸ். ஜே. சூர்யா ஒரு இயக்குனராக தனது திரைப்பயணத்தை தொடர்ந்தாலும் ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகராக ஆரம்பித்து தற்போது ஒரு தரமான வில்லனாக சிறப்பிக்க அப்பாடா படங்களில் நடித்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா. இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
Karthick Subbaraj’s #Jigarthanda2 …… pic.twitter.com/4A2OAsO8N4
— Christopher Kanagaraj (@Chrissuccess) August 1, 2022
ஜிகர்தண்டா 2 :
தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து "ஜிகர்தண்டா 2"படத்தின் மூலம் இணைகிறர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா. இப்படத்தின் படத்தின் தயாரிப்பு பணிகள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் பாடல்களை இசையமைக்கவுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
#8yearsofJigarthanda
— Karthik Ravivarma (@Karthikravivarm) August 1, 2022
Karthik Subbaraj's next #Jigarthanda2pic.twitter.com/PUQ9qqzHSL
மீண்டும் இணையும் அசால்ட் சேது:
படத்தில் அசால்ட் சேதுவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பாபி சிம்ஹா இந்த இரண்டம் பாகத்திலும் நடிக்க உள்ளார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் படத்தில் இணைவார்கள் என கூறப்படுகிறது. மற்ற படக்குழுவினர் பற்றின தகவல்கள் பற்றின அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)