மேலும் அறிய

Rukmani Vasanth : சிவா, முருகதாஸ் எப்படிப்பட்டவங்க தெரியுமா? எஸ்கே 23 ஹீரோயின் ருக்மணி சொன்ன தகவல் 

Rukmani Vasanth : எஸ்.கே 23 பட ஹீரோயின் ருக்மணி வசந்த் சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணலில் ஏ.ஆர். முருகதாஸ் பற்றியும் சிவகார்த்திகேயன் பற்றியும் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து வருகிறார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி வருகிறார். அந்த வகையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள 'அமரன்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Rukmani Vasanth : சிவா, முருகதாஸ் எப்படிப்பட்டவங்க தெரியுமா? எஸ்கே 23 ஹீரோயின் ருக்மணி சொன்ன தகவல் 

அதை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் SK23 படத்துக்காக இணைந்துள்ளார். போலீஸ் அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடிக்க அவருக்கு ஜோடியாக கன்னட திரையுலகின் பிரபலமான நடிகை   ருக்மணி வசந்த் நடித்து வருகிறார். 2019-ஆம் ஆண்டு வெளியான 'பிர்பால் ட்ரைலாஜி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 'சப்த சாகரதாச்சே எல்லோ' என்ற கன்னட படத்தின் மூலம் பிரபலமானார். இரு பாகங்களாக வெளியான அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்திய எல்லையில் சண்டை போட்டு உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர் வசந்த் வேணுகோபாலனின் மகள் தான் ருக்மணி வசந்த். அவரின் அம்மா ஒரு பு. புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர். 

நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது திரைப்படத்தின் ஹீரோயினாக ருக்மணி  வசந்த் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாக உள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் எஸ்கே 23 படத்தில் கமிட்டாகிவிட்டார். மிருணாள் தாகூர் நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் ருக்குமணி வசந்த் ஒப்பந்தமானார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

Rukmani Vasanth : சிவா, முருகதாஸ் எப்படிப்பட்டவங்க தெரியுமா? எஸ்கே 23 ஹீரோயின் ருக்மணி சொன்ன தகவல் 

நடிகர் விஜய் சேதுபதியின் 51 வது படமான ACE படத்தில் நான் நடித்த சில க்ளிப்பிங்களை ஏ.ஆர். முருகதாஸ் பார்த்துள்ளார். என்னுடைய நடிப்பு அவருக்கு பிடித்து போனதால் எஸ்கே 23 படத்திற்கு என்னை தேர்ந்து எடுத்தார். ஆன் தி ஸ்பாட் ஒரு காட்சியை மேம்படுத்த கூடியவர். உடனுக்குடன் அவருக்கு எப்படி இப்படி அசத்தலான ஐடியா வருகிறது என்பதை பார்க்க வியப்பாக இருக்கிறது. 

அதே போல சிவகார்த்திகேயன் எனக்கு எல்லா காட்சிகளிலும் உதவியாக இருந்தார். அவர் மிகவும் நேர்மையான அன்பான சக நடிகர்.  மிகவும் திறமையானவர் என கூறியுள்ளார் நடிகை ருக்மணி வசந்த்.

தீனா, கஜினி , துப்பாக்கி , கத்தி, சர்கார் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்துள்ள ஏ.ஆர். முருகதாஸ், சிவகார்த்திகேயனுடன் கூட்டணி சேர்ந்துள்ள இப்படம் மாபெரும் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  
தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget