Roja Serial Priyanka: ட்ரெண்டிங்கில இருக்கணும்ல.. ஹாட் ரியாக்ஷன் கொடுக்கும் ரோஜா சீரியல் பிரியங்கா! வைரல் வீடியோ
ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் பிரியங்கா வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் லைக்குகளை பெற்று வருகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ரோஜா. மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற சீரியல் ரோஜா டி.ஆர்.பிலும் டாப்.இந்த சீரியலில் கதாநாயகனாக அர்ஜூன் கதாபாத்திரத்தில் சிபு சூர்யன் நடிக்க, கதாநாயகியாக ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்து வருகிறார். தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பிரியங்கா தமிழில் சந்திரலேகா, லக்சுமி ஸ்டோர்ஸ், பூவே உனக்காக, அபியும் நானும், கண்ணானே கண்ணா, அன்பே வா உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். இந்த நிலையில் அவர் தற்போது ரோஜா சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் லைக்குகளை பெற்று வருகிறது.
சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று ட்ரெண்ட்டாக மாறும். அந்த வகையில் சமீபத்தில் ட்ரெண்ட் ஒன்றை வீடியோவாகபதிவு செய்து அவர் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் உச்சுக் கொட்டி வருகின்றனர்.
View this post on Instagram
இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் ரோஜா சீரியல் பிரியங்கா தொடர்ந்து, தனது அன்றாட நடவடிக்கைகள் தொடர்பான புகைப்படங்களையும், ரீல்களையும் பதிவிட்டு வருகிறார்.
View this post on Instagram