Indraja shankar Pregnant : குட் நியூஸ் சொல்லிட்டாங்க பாண்டியம்மா! விரைவில் ரோபோ ஷங்கர் வீட்டுக்கு குட்டி பாப்பா வரப்போகுது...
Indraja shankar Pregnant : நடிகர் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா ஷங்கர் கர்ப்பமாக இருக்கும் தகவலை சோசியல் மீடியா மூலம் அறிவித்துள்ளார். வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.
சின்னத்திரை டூ வெள்ளித்திரை ட்ராவல் செய்து கொடி கட்டி பரந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் ரோபோ ஷங்கர். காமெடியனாக என்ட்ரி கொடுத்து பின்னர் படிப்படியாக குணச்சித்திர நடிகராக ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகர் ரோபோ ஷங்கர். அவரின் மகள் இந்திரஜா ஷங்கருக்கும் உறவினரான கார்த்திக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்ட இந்திரஜா ஷங்கர் - கார்த்திக் தம்பதியை வாழ்த்தினர். அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.
கடந்த மார்ச் மாதம் ரோபோ ஷங்கர் சொந்த ஊரான மதுரையில் இந்திரஜா ஷங்கர் - கார்த்திக் திருமணம் நடைபெற்றது. தற்போது குட் நியூஸ் ஒன்றை சோசியல் மீடியா மூலம் பகிர்ந்துள்ளனர் இந்த புதுமண தம்பதிகள். ஆம், இந்திரஜா கர்ப்பமாக இருக்கிறார். குட்டி பாண்டியம்மா அல்லது குட்டி கார்த்திக்கை விரைவில் ரோபோ ஷங்கர் குடும்பம் வரவேற்க உள்ளனர். இந்த சந்தோஷமான செய்தியை சோசியல் மீடியா மூலம் மிகவும் சந்தோஷமாக பகிர்ந்துள்ளனர்.
'உங்கள் பாண்டியம்மா' என்ற பெயரில் யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் இந்திரஜா ஷங்கர் - கார்த்திக் தம்பதி பல வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த சந்தோஷமான விஷயத்தையும் வீடியோவாக பகிர்ந்துள்ளனர். அதில் பேசிய கார்த்திக் இந்த நல்ல விஷயத்தை உங்கள் அனைவருடனும் உடனே பகிர வேண்டும் என்று தான் ஆசைப்பட்டோம் ஆனால் பலரும் இதை உடனே சொல்ல வேண்டாம். ஒரு நான்கு ஐந்து மாதங்களுக்கு பிறகு சொல்லலாம் என சொன்னதால் தான் எங்களால் முன்னரே தெரிவிக்கமுடியாமல் போனது. தற்போது 13 வாரம் வெற்றிகரமாக நிறைவடைந்து விட்டது. மூக்கு, கை, ஹார்ட் பீட் எல்லாம் வந்துவிட்டது என மிகவும் பூரிப்புடன் இந்திரஜா தெரிவித்து இருந்தார். இந்த சந்தோஷமான செய்தி அறிந்த அவரின் ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து ஆசீர்வதித்து வருகிறார்கள்.
View this post on Instagram
இந்திரஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அழகான போஸ்ட் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். "ஆம்... நாங்கள் அப்பாவாகவும் அம்மாவாகவும் மாறுகிறோம். இந்த பயணம் முழுவதும் எங்களையும் உங்கள் பிரார்த்தனையில் சேர்த்துக்கொள்ளுங்கள். மிகவும் உணர்ச்சிவசமாக இருக்கிறது. அதை வார்த்தையால் விவரிக்க முடியவில்லை. என்னுடன் என்றுமே இருந்ததற்கு மிகவும் நன்றி மாமா... ஐ லவ் யூ மாமா..." என உணர்ச்சிவசப்பட்டு போஸ்ட் செய்துள்ளார் இந்திரஜா.