Rishab Shetty : சூப்பர்ஸ்டாரை இமிடேட் செய்தாரா ரிஷப் ஷெட்டி? சோசியல் மீடியாவில் வைரலாகும் வீடியோ
காந்தாரா திரைப்படம் மூலம் உலகளவில் பிரபலமான நடிகர் ரிஷப் ஷெட்டி சமீபத்தில் நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போல் நடந்து ரிஷப் ஷெட்டி இமிடேட் செய்த வீடியோ வைரலாகிறது.
கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப் 2 படங்களை தொடர்ந்து ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்பாக கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி கன்னடத்தில் வெளியான திரைப்படம் 'காந்தாரா'. கன்னட திரையுலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. வசூலில் மாபெரும் சாதனை படைத்துள்ள காந்தாரா திரைப்படம் பிற மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. கன்னடத்தை போலவே மற்ற மொழிகளில் வெளியான திரைப்படமும் ரசிகர்களின் பேராதரவை பெற்று அமோகமான வரவேற்பை பெற்றது.
புகழின் உச்சிக்கு சென்ற ரிஷப் ஷெட்டி:
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ள 'காந்தாரா' படத்தை ரஜினிகாந்த் தொடங்கி அனைத்து மொழி திரைத்துறையினரும் பாராட்டி இயக்குனர் ரிஷப் ஷெட்டியை புகழ்ந்து தள்ளினார். புகழின் உச்சிக்கு சென்ற ரிஷப் ஷெட்டியை இந்த உலகமே கொண்டாடி வருகிறது.
Rishab Shetty Imitates Superstar 💥 pic.twitter.com/3TFkDrbcud
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 14, 2022
சூப்பர் ஸ்டாரை இமிடேட் செய்த ரிஷப் ஷெட்டி :
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டர் மூலம் காந்தாரா திரைப்படத்தை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அதற்கு ட்வீட் மூலம் பதில் அளித்த ரிஷப் ஷெட்டி பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சென்று போயஸ் கார்டனில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் மீது மிகுந்த மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்ட ரசிகர் ரிஷப் ஷெட்டி சமீபத்தில் நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைல் நடையை போல இமிடேட் செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#Kantara, the latest Kannada movie directed by #RishabhShetty, has been making headlines ever since its release. True to its origins, the film of rustic brilliance is receiving positive responses from the who's who of the film fraternity across India, while wowing #cinema lovers! pic.twitter.com/e6zqLCancO
— Centre for Wildlife Studies (@cwsindia) October 27, 2022
இந்த ஒரே திரைப்படத்தில் உலகளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார் ரிஷப் ஷெட்டி. மக்களுக்கும் பண்ணையாருக்குமான நிலப் பிரச்சனையை மையப்படுத்தி துணிச்சலாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் ரிஷப் ஷெட்டியின் அபாரமான நடிப்பு என அனைத்துமே படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.