மேலும் அறிய

Rashmika Mandanna; பாலிவுட் மேடையில் தென்னிந்திய பாடல்களை மட்டம் தட்டிய ராஷ்மிகா.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.. நடந்தது என்ன?

தென்னிந்திய பாடல்களை ராஷ்மிகா மட்டம் தட்டி, ஹிந்தி பாடல்களை கொண்டாடுவது போல பேசியதை நெட்டிசன்கள் கடுமையாக கண்டித்து வருகிறார்கள்

விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் பொங்கலுக்கு ரிலீஸாக தயாராக இருக்கும் திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தின் மூலம் முதல் முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. 

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பாலிவுட்டில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'மிஷன் மஜ்னு'. சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக லீட் ரோலில் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ராஷ்மிகா பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

Rashmika Mandanna; பாலிவுட் மேடையில் தென்னிந்திய பாடல்களை மட்டம் தட்டிய ராஷ்மிகா.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.. நடந்தது என்ன?

2016ம் ஆண்டு கிரிக் பார்ட்டி திரைப்படம் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனை தெடர்ந்து தெலுங்கு, தமிழ் படங்களில் அடுத்தது சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உருவெடுத்த அவர், ஏராளமான ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார்;

மேலும் அமிதாப்பச்சன் மகளாக குட்பை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த அவர் தற்போது மிஷன் மஜ்னு படத்தில் நடித்து இருக்கிறார்; இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராஷ்மிகா, “ தென்னிந்திய திரைப்படங்களில் கவர்ச்சி  பாடல்கள், மசாலா பாடல்கள் என பெப்பியான பாடல்கள்தான் வருகின்றன.

பாலிவுட்டில் தான் மெலடி ரொமான்டிக் சாங்ஸ் அதிகமாக வருகின்றன. நான் மிகவும் ஆவலாக எதிர்பார்த்த ரொமான்டிக் பாடல் மிஷன் மஜ்னு படத்தில் உள்ளது. அதை கேட்பதற்காக நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். நீங்கள் கேட்ட பிறகு உங்களுக்கு பிடிக்கும்” என்றார் ராஷ்மிகா இவரது இந்த பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

ராஷ்மிகாவின் இந்த கருத்தை பலர் ஆமோதித்தாலும், பலர் மிகுந்த ஆத்திரத்தில் கொந்தளித்து வருகின்றனர். பாலிவுட்டில் இனிமையான மெலடி பாடல்கள் இருக்கிறது என்பது உண்மை தான் ஆனால் அதற்காக தென்னிந்திய திரைப்படங்களில் கவர்ச்சியான பாடல்களும், மசாலா பாடல்களும் மட்டுமே இருக்கின்றன என சொல்வது சரியல்ல என பலரும் கருத்து தெரிவித்து கண்டனம் செலுத்தி வருகிறார்கள்.   

ஒட்டுமொத்தமாக தென்னிந்திய பாடல்களை மட்டம் தட்டி விட்டு ஹிந்தி பாடல்களை கொண்டாடுவதை கடுமையாக கண்டித்து வருகிறார்கள்; கொஞ்சம் கூட யோசனை இல்லாமல் இடத்திற்கு ஏற்றாற்போல் பேசுகிறார் என்றும் ராஷ்மிகாவின் ஆரம்ப காலகட்டத்தில் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் ஏரளமான சூப்பர் ஹிட் ரொமான்ஸ் மெலடி பாடல்கள் இடம்பெற்றதை எல்லாம் மறந்து விட்டு இப்படி பேசியது தவறு என்றும் கண்டித்து வருகிறார்கள். மேலும் இதனால் தான் கன்னட மக்கள் இவரை வெறுக்கிறார்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget