மேலும் அறிய

பகிரங்க மன்னிப்பு கேட்ட ரன்பீர்...வயிறு குலுங்க சிரித்த ஆலியா!

ரன்பீர் கபூர் ஆலியா பட் மீதான தனது விமர்சனத்திற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் ஒரு கர்ப்பவதியைப் பார்த்து இப்படிச் சொல்லக்கூடாது என்று நெட்டிசன்கள் ரன்பீரை வறுத்தெடுக்கின்றனர்.

ரன்பீர் கபூர் ஆலியா பட் மீதான தனது விமர்சனத்திற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் ப்ரோமோஷனிற்காக சென்னை வந்திருந்த அவர், பிரமோஷன் நிகழ்ச்சியின் போது ஆலியா மீதான அவரது விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரன்பீர் தனது மனைவி ஆலியா தன் வாழ்க்கையில் வருவதற்கு முன்பிருந்தே அவரை விரும்புவதாகவும்; அதனால் ஆலியாவின் மனம் புண்படும்படி எந்த செயலையும் செய்ய மாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.அவரின் நகைச்சுவையாக கூறிய விமர்சனத்திற்கு நெட்டிசன்களின் எதிர்ப்புகளை குறித்து தனது மனைவி ஆலியாவிடம் தெரிவித்ததாகவும், அதற்கு அவர் வயிறு குலுங்க சிரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பகிரங்க மன்னிப்பு கேட்ட ரன்பீர்...வயிறு குலுங்க சிரித்த ஆலியா!

பாலிவுட் குயின் ஆலியா பட். மகேஷ் பட்டின் மகள், பூஜா பட்டின் தங்கை, ரன்பீர் கபூர் மனைவி. இப்படி தனக்கு பிரமாண்ட அடையாளம் கொண்டவர்.பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடன்ட் நம்பர் 1 திரைப்படம் தான் ஆலியா நாயகியாக அறிமுகமான முதல் திரைப்படம். அதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். முதல் படத்திற்குப் பின்னர் அவர் கல்லி பாய், டியர் ஜிந்தகி ஆகிய படங்களில் நடித்து பாராட்டைப் பெற்றார். அண்மையில் ஆலியா பட் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடியது. ஆர்ஆர்ஆர் படத்திலும் ஆலியா நடித்திருந்தார். ஆனால் அதில் அவரை தனித்துப் பாராட்டும்படி கதாபாத்திரம் அமையவில்லை. இந்த நிலையில் தான், ஆலியா பட் ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமானார். ‘The Heart Of Stone' தி ஹார்ட் ஆஃப் ஸ்டோன் என்ற படத்தில் ஆலியா பட் கால் காடோட் உடன் நடிக்கிறார். படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருகிறது.

ஆலியா மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதலாக காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் கடந்த ஓரிரு வருடங்களாகவே இருவரும், தங்களின் உறவு குறித்து மேடைகளிலும் , நேர்காணல்களிலும் வெளிப்படையாகவே பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் அவர்களின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில் அவர் தனது கர்ப்பத்தை அண்மையில் அறிவித்தார். அது பற்றி சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்தார். அதில் ஒரு பெண்ணின் அடுத்தடுத்த நகர்வுகளை மட்டும் உலகம் உற்று நோக்கி கவனித்து வருவதேன் என்று முகத்தில் அரைந்தார் போல் வினவியிருந்தார்.

பகிரங்க மன்னிப்பு கேட்ட ரன்பீர்...வயிறு குலுங்க சிரித்த ஆலியா!

எல்லாவற்றிற்கும் டஃப் பதிலடி கொடுப்பவர் ஆலியா. ஆனால் அவரை ஒரு நிகழ்ச்சியில் க்ளீன் பவுல்ட் ஆக்கினார் அவரது கணவர் ரன்பீர் கபூர். அந்த வீடியோ இணையத்தில் வெளியாக ரன்பீரை நெட்டிசன்கள் வாட்டிவதைக்கின்றனர்.

அயன் முகர்ஜி இயக்கத்தில் பாலிவுட்டில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள பிரம்மாஸ்திரா திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.  இந்த படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் ஜோடியுடன் அமிதாப்பச்சன், நாகர்ஜூனா என பிரபல நட்சத்திரங்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் க்ளிம்பிஸ் வீடியோ அண்மையில் வெளியானது. டீஸர் வெளியான நிலையில் படம் செப்டம்பரில் வெளியாகிறது.

இந்நிலையில் ஆலியா பட், ரன்பீர் கபூர், அயன் முகர்ஜி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏன் பிரம்மாஸ்திரா படத்தை இருவரும் பெரிதாக புரோமோட் செய்யவில்லை என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. அதற்கு அவர் அப்படியில்லை நாங்கள் நிச்சயமாக பிரம்மாஸ்திராவை புரமோட் செய்வோம். ஆனால் இப்போதைக்கு எங்களின் கவனம் எல்லாம் குழந்தையின் மீதுதான் என்று சொல்கிறார். அப்போது குறுக்கிட்ட ரன்பீர், ஆலியாவின் எடை அதிகரிப்பு பற்றி ஒரு விமர்சனத்தை முன்வைக்கிறார். அதிர்ச்சியில் ஆலியா பார்க்க, நான் ஜோக்கடித்தேன் என்று கூறி அவரை தட்டிக் கொடுக்கிறார்.ஆனால் ஒரு கர்ப்பவதியைப் பார்த்து இப்படிச் சொல்லக்கூடாது என்று நெட்டிசன்கள் ரன்பீரை வறுத்தெடுக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது ரன்பீர் கபூர் ஆலியா பட் மீதான தனது விமர்சனத்திற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget