மேலும் அறிய

Thandatti : மம்மூட்டி இல்லனா பசுபதி.. தண்டட்டி படத்தின் இயக்குநர் ராம் சங்கைய்யா சுவாரஸ்ய பேச்சு

தண்டட்டி படத்தின் இயக்குநர் ராம் சங்கைய்யா படம் நடிகர் பசுபதி குறித்து பகிர்ந்த் சுவாரஸ்யமானத் தகவலளைப் பார்க்கலாம்

இயக்குநர் ராம் சங்கையா இயக்கி பசுபதி நடித்திருக்கும் படம் தண்டட்டி. தட்டட்டி படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது.சென்னையில் நேற்று நடைபெற்ற வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டார்கள்.  படம் குறித்தான பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் ராம் சங்கையா.

இயக்குநர் ராம் சங்கைய்யா இயக்கியிருக்கும் படம் தண்டட்டி. பசுபதி, ரோஜினி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. கே.எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்து சாம் சி.எஸ் பின்னண் இசை கொடுத்திருக்கிறார். தண்டட்டி படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற வருகிறது.

ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ராம் சங்கைய்யா “இந்த கதையில் நடிப்பதற்கு இரண்டு நடிகர்களை நான் மனதில் வைத்திருந்தேன். ஒருவர் மம்மூட்டி மற்றொருவர் பசுபதி. மம்மூட்டி அளவிற்கு என்னால் செல்ல முடியவில்லை என்றாலும் பசுபதி சார் எனக்குக் கிடைத்தார்.” எனக் கூறினார்  படத்தின் இயக்குநர்

மேலும் பேசிய அவர் “நடிகர்கள் ஒரு கதையை தேர்வு செய்து நடிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. சிலர் ஒரு படத்தின் கதைக்காக மட்டுமே ஒரு படத்தில் நடிப்பார்கள், சிலர் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள், சில இயக்குநருக்காக ஒரு கதையைத் தேர்வு செய்வார்கள். இதில் பசுபதி இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். ஒரு படத்தின் திரைக்கதை எவ்வாறு அமைக்கப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு படங்களை தேர்வு செய்பவர் பசுபதி. தமிழ் சினிமாவில் நான் அதிகம் மதிக்கும் வெகு சில நபர்களில் ஒருவர் பசுபதி. இந்தப் படத்தில் எனக்கு அவரது முழு ஆதரவை கொடுத்தார் பசுபதி. கலைத்துபோடப் பட்ட ஒரு கதையில் நேர்கோட்டில் இருக்கும் அவரது நடிப்பு. எந்த ஒரு முயற்சி எடுத்தாலும் அதற்கு மறுப்புத் தெரிவிக்காமல் என்னை தொடர்ந்து ஊக்குவித்து வந்தார். என்னால் இந்த இடத்தில் சவாலாகவே ஒன்றைச் சொல்ல முடியும். பசுபதி அவர்கள் இதுவரை நடித்த படங்களில் சிறந்த படமாக இது இருக்கும் அந்த அளவிற்கு சிறந்த நடிப்பை இந்தப் படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் பசுபதி” எனக் கூறினார்

தண்டட்டி திரைப்படம் வரும் ஜூன் மாதம் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பா. ரஞ்சித் இயக்கி சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு பின் பசுபதி நடித்து வெளியாகும் திரைப்படம் தண்டட்டி.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Sunil Chhetri: திரும்ப வந்துட்டேன்..! ரசிகர்கள் ஷாக் -  சர்வதே போட்டிகளில் 100வது கோல் அடிப்பாரா சுனில் சேத்ரி?
Sunil Chhetri: திரும்ப வந்துட்டேன்..! ரசிகர்கள் ஷாக் - சர்வதே போட்டிகளில் 100வது கோல் அடிப்பாரா சுனில் சேத்ரி?
Watch Video: ஆச்சரியமுங்க..! விண்ணில் இருந்து சீறிவந்த ராக்கெட், அலேக்காக கேட்ச் பிடித்து அட்டகாசம் - வீடியோ வைரல்
Watch Video: ஆச்சரியமுங்க..! விண்ணில் இருந்து சீறிவந்த ராக்கெட், அலேக்காக கேட்ச் பிடித்து அட்டகாசம் - வீடியோ வைரல்
பெரம்பலூருக்கு விடிவுகாலம்! ரூ. 4.64 கோடி ஒதுக்கீடு! எங்கு என்ன மாற்றம் வரப்போகுது தெரியுமா?
பெரம்பலூருக்கு விடிவுகாலம்! ரூ. 4.64 கோடி ஒதுக்கீடு! எங்கு என்ன மாற்றம் வரப்போகுது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Padappai Guna Arrest | கொலை முயற்சி விவகாரம் ரவுடி படப்பை குணா கைது! ரவுண்டு கட்டிய போலீஸ்Muthukumaran Vs Soundariya: Trump Praises Pakistan: பாகிஸ்தானுக்கு திடீர் பாராட்டு! இந்தியாவுக்கு செக்! ட்விஸ்ட் வைத்த ட்ரம்ப்Chandrababu Naidu vs MK Stalin : ’’இந்தி அவசியம்!’’சந்திரபாபு நாயுடு vs ஸ்டாலின் மும்மொழிக்கொள்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Sunil Chhetri: திரும்ப வந்துட்டேன்..! ரசிகர்கள் ஷாக் -  சர்வதே போட்டிகளில் 100வது கோல் அடிப்பாரா சுனில் சேத்ரி?
Sunil Chhetri: திரும்ப வந்துட்டேன்..! ரசிகர்கள் ஷாக் - சர்வதே போட்டிகளில் 100வது கோல் அடிப்பாரா சுனில் சேத்ரி?
Watch Video: ஆச்சரியமுங்க..! விண்ணில் இருந்து சீறிவந்த ராக்கெட், அலேக்காக கேட்ச் பிடித்து அட்டகாசம் - வீடியோ வைரல்
Watch Video: ஆச்சரியமுங்க..! விண்ணில் இருந்து சீறிவந்த ராக்கெட், அலேக்காக கேட்ச் பிடித்து அட்டகாசம் - வீடியோ வைரல்
பெரம்பலூருக்கு விடிவுகாலம்! ரூ. 4.64 கோடி ஒதுக்கீடு! எங்கு என்ன மாற்றம் வரப்போகுது தெரியுமா?
பெரம்பலூருக்கு விடிவுகாலம்! ரூ. 4.64 கோடி ஒதுக்கீடு! எங்கு என்ன மாற்றம் வரப்போகுது தெரியுமா?
"போலி போட்டோஷூட் அப்பா" முதல்வர் ஸ்டாலினை பங்கமாக கலாய்த்த இபிஎஸ்!
எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்புவது எப்போது?
எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்புவது எப்போது?
உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை.. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை ஏற்கப்படுமா?
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை!
mookuthi amman 2:  மூக்குத்தி அம்மன் படம் உருவானது எப்படி? மனம் திறந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
mookuthi amman 2: மூக்குத்தி அம்மன் படம் உருவானது எப்படி? மனம் திறந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
Embed widget