ஃபிட்டா இருங்க... பிளாக்பஸ்டர் படங்கள் பண்ணுங்க....அக்ஷய் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரகுல் ப்ரீத் சிங்!
நடிகை கரீனா கபூர் நீங்கள் தான் இன்றைக்கும் என்றைக்கும் என் விருப்பமான கோ ஸ்டார் என வாழ்த்தியுள்ளார்.

நடிகர் அக்ஷய் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகை கரீனா கபூர், அஜய் தேவ்கன், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்ட பல நடிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை கரீனா கபூர் நீங்கள் தான் இன்றைக்கும் என்றைக்கும் என் விருப்பமான கோ ஸ்டார் என வாழ்த்தியுள்ளார்.
நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா “பிறந்த நாள் வாழ்த்துகள் பிக் ப்ரதர்” என்றும், ரகுல் ப்ரீத் ”இந்த ஆண்டு நீங்கள் மகிழ்ச்சியுடனும் ஃபிட்டாகவும், பிளாக் பஸ்டர் படங்களுடனும் வலம் வர வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
ராட்சசன் பட ரீமேக்கான கத்பூத்லி படம் முன்னதாக செப்டெம்பர் 2ஆம் தேதி வெளியானது. ரகுல் ப்ரீத் சிங் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ள நிலையில், படம் மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
View this post on Instagram
காஞ்சனா, ஜிகர்தண்டா என தமிழ் படங்களின் ரீமேக் படங்களில் அக்ஷய் குமார் தொடர்ந்து நடித்து வரும் நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று ரீமேக் விரைவில் வெளியாகிறது.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















