மேலும் அறிய

Rashmika-Rakshit Shetty: நாங்க இன்னும் டச்சில் தான் இருக்கோம்.. ராஷ்மிகா பற்றி பேசிய ரக்‌ஷித் ஷெட்டி.. குஷியில் ரசிகர்கள்!

Rakshit Shetty ரக்‌ஷித் ஷெட்டி இன்னும் நடிகை ராஷ்மிகா உடன் டச்சில் இருப்பதாக அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘சப்த சாகரதாச்சே எல்லோர்-சைட் எ’ (Sapta Saagaradaache Ello Side-A) ஹேமந்த் ராவ் இயக்கத்தில் வெளியான இப்படம், கன்னட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் ரக்‌ஷித். சமீபத்தில் அவரிடம் ராஷ்மிகா மந்தனா உடன் இருந்த உறவு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 

 

Rashmika-Rakshit Shetty: நாங்க இன்னும் டச்சில் தான் இருக்கோம்.. ராஷ்மிகா பற்றி பேசிய ரக்‌ஷித் ஷெட்டி.. குஷியில் ரசிகர்கள்!

ராஷ்மிகா - ரக்‌ஷித் ஷெட்டி உறவு முறிவு :

2016ஆம் ஆண்டு வெளியான க்ரிக் பார்ட்டி திரைப்படம் மூலம் அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அப்படத்தில் அவருடன் இணைந்து நடித்த ரக்‌ஷித் ஷெட்டியுடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாற, ஓராண்டுக்குப் பிறகு 2017ஆம் ஆண்டு இருவரும் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

அவரின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்களிடம் இதயங்களை அள்ளியது. பின்னர் தனிப்பட்ட சில காரணங்களால் அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த உறவு முறிந்து 2018ஆம் ஆண்டு பிரிந்தனர்.    

எக்ஸ்பிரஷன் குயின் என்ன பண்றங்க?

தற்போது தென்னிந்திய சினிமா திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட் திரையுலகிலும் கலக்கி வரும் ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் நேஷனல் க்ரஷ், எக்ஸ்பிரஷன் குயின் என்றெல்லாம் கொண்டாடி வருகிறார்கள். தற்போது ராஷ்மிகா ‘புஷ்பா 2’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்தியில் ரன்பீர் கபூருடன் அனிமல் படத்திலும், தெலுங்கில் உருவாக இருக்கும் 'ரெயின்போ' என்ற திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார். ராஷ்மிகா நடிக்கும் முதல் உமன் சென்ட்ரிக் திரைப்படம் ரெயின்போவாகும்.

பாலிவுட்டில் கலக்கும் ராஷ்மிகா:

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் ராஷ்மிகா நடித்த 'கீத கோவிந்தம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்து, அவருக்கு வாய்ப்புகளை குவித்தது. தமிழில் கார்த்தி ஜோடியாக 'சுல்தான்' திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பின்னர் விஜய் ஜோடியாக 'வாரிசு' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மூலம் தமிழில் முன்னணி நடிகையாக வருவார் என இருந்த எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனாலும், பாலிவுட்டில் ஏராளமான வாய்ப்புகள் பெற்று பிஸியாக நடித்து வருகிறார்.  

ரக்‌ஷித் ஷெட்டி கொடுத்த ஷாக்:

சமீபத்தில் கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி நடித்துள்ள 'சப்த சாகரதாச்சே எல்லோர்-சைட் எ' படம் குறித்த ப்ரோமோஷன் ஒன்றில் அவர் கலந்து கொண்டபோது, ராஷ்மிகா குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. "ஆம். நானும் ராஷ்மிகாவும் இன்னும் டச்சில் தான் இருக்கிறோம். சினிமா உலகில் அவர் சாதிக்க வேண்டும் என பெரிய கனவுகள் இருந்தது. அவரின் கனவை நோக்கி சிறப்பாக பயணித்து வருகிறார். அவரது இலக்கை அடைந்து சாதனை செய்ய அவரை ஊக்குவிக்க வேண்டும்" என ரக்‌ஷித் ஷெட்டி பேசியுள்ளார்.

ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் செப்டம்பர் 22ஆம் தேதியன்று வெளியான 'சப்த சாகரதாச்சே எல்லோர்-சைட் எ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அதை தமிழ், மலையாளம் மற்றும் பிற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தின் இரண்டாம் பாகமான 'சப்த சாகரதாச்சே எல்லோர்- சைட் பி' திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

தலைப்பு செய்திகள்

ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Embed widget